சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

விசாரிக்க உகந்த வழக்கு இல்லை... அதிமுகவின் ரூ.1500 நிதியுதவிக்கு எதிரான மனு தள்ளுபடி

சென்னை: அதிமுகவின் மாதம் ரூ.1500 நிதியுதவி வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதிக்கு எதிரான மனுவினை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவின் மாதம் ரூ.1500 நிதியுதவி வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதிக்கு எதிரான மனுவினை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தேனி பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்த அம்மாவாசை என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் மக்களவை தேர்தலோடு, 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

Madras HC rejects petition against aiadmk manifesto promised Rs.15000 to give poor people

இந்நிலையில் பிப்ரவரி மாதம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை மக்களுக்கு மாதம் ரூ.1500 உதவித் தொகை வழங்கப்படும் என அறிவித்தார்

தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி, தேர்தல் அறிக்கைகளில் இலவசங்கள் குறித்த அறிவிப்பை வெளியிடக்கூடாது. ஆனால் பன்னீர்செல்வம், மாதம் ரூ.1500 வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே தமிழக அரசு 3.50 லட்சம் கோடி கடனில் இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் மக்களை திசைதிருப்ப ரூ.1500 வழங்கப்படும் என பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றார்.

கொடநாடு விவகாரம்.. ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிவரும்.. சென்னை ஹைகோர்ட் எச்சரிக்கை கொடநாடு விவகாரம்.. ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிவரும்.. சென்னை ஹைகோர்ட் எச்சரிக்கை

இந்த மனுவினை நீதிபதிகள் எஸ்.மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. இன்றை விசாரணையின் போது உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, அரசியல் கட்சிகளின் வாக்குறுதிகளுக்கு எதிராக வழக்கு தொடர முடியாது எனக்கூறியதுடன், அதிமுக தேர்தல் வாக்குறுதிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்று கூறி அம்மாவாசையின் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

English summary
Madras HC rejects petition against aiadmk manifesto promised Rs.1500 to give poor people in every month
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X