சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நீட் ஆள்மாறாட்டம்: அக்.15-க்குள் அறிக்கை தாக்கல் செய்ய ஹைகோர்ட் உத்தரவு

Google Oneindia Tamil News

Recommended Video

    நீடஆள்மாறாட்டம்..மேலும் ஒரு நபரை கைது செய்தது சிபிசிஐடி-வீடியோ

    சென்னை: தமிழகத்தில் நீட் ஆள் மாறாட்டம் தொடர்பாக அக்டோபர் 15 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடி போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    தமிழக மருத்துவ கல்லூரிகளில் நிரப்பப்படாமல் உள்ள 207 மேனேஜ்மெண்ட் கோட்டா இடங்களை முறையான கலந்தாய்வு மூலம் நிரப்பக்கோரி கோவையை சேர்ந்த தீரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    madras hc seeks report on neet impersonation by oct 15

    இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அடங்கிய பெஞ்ச் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது வெளிநாட்டு மாணவர்களுக்கான ஒதுக்கீடு, அகில இந்திய மற்றும் மாநில அரசின் இடஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களின் விவரங்களை மதிப்பெண்களுடன் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

    இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் நீதிபதி கிருபாகரன், வேல்முருகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது அப்போது, எத்தனை மாணவர்கள் நீட் தேர்வில் ஆள்மாறாட்டதில் ஈடுப்பட்டுள்ளனர், எவ்வளவு பணம் செலவழிக்கப்பட்டுள்ளது. இந்த ஆள்மாறாட்டத்தில் தொடர்புடைய அரசு அதிகாரிகள் மற்றும் கல்லூரி ஊழியர்கள் யார் யார் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    அதிகாரிகள் துணையில்லாமல் ஆள்மாறாட்டம் நடந்து இருக்க முடியுமா என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இது தொடர்பாக சிபிசிஐடி அக்டோபர் 15 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

    English summary
    The Madras High Court has sought a detailed report on NEET impersonation scam by Oct 15.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X