சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னையில் 45 மழைநீர் வடிகால் டெண்டர்களுக்கு ஹைகோர்ட் அதிரடி தடை

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் 4.5 கோடி ரூபாய் மதிப்பிலான மழை நீர் வடிகால் அமைக்கும் திட்டம் தொடர்பான 45 டெண்டர்களுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட நான்காவது மற்றும் ஆறாவது மண்டலங்களான தண்டையார்பேட்டை, அயனாவரம் பகுதிகளில் 4.5 கோடி ரூபாய் மதிப்பில் மழை நீர் வடிகால் மற்றும் அதன் பரமாரிப்பு உள்ளிட்ட 45 விதமான பணிகளுக்கு டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. நாளை இந்த டெண்டர்கள் திறக்கப்பட உள்ன.

Madras HC stays Chennai Corporations 45 Tenders

இந்த டெண்டரை பெற மாநகராட்சி புதிய நடைமுறைகளை கொண்டு வந்துள்ளதால், தடை விதிக்க கோரி சென்னை சேர்ந்த மகாதேவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், புதிய நடைமுறை காரணமாக தகுதிவாய்ந்த ஒப்பந்ததாரர்களுக்கு டெண்டர் ஒதுக்கப்படாமல் வேண்டியவர்களுக்கு ஒதுக்க வகை செய்யப்பட்டுள்ளதாகவும், வெளிப்படைத் தன்மை இல்லாமல் நடத்தப்பட இருக்கும் டெண்டரை ரத்து செய்து, புதிய டெண்டரை அறிவிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெற இருந்த டெண்டர் திறப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக இரண்டு வாரத்தில் பதிலளிக்க சென்னை மாநகராட்சிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

English summary
The Madras High Court today stayed the Chennai Corporation's 45 Tenders.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X