சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள், மாவட்ட நீதிபதிகளுடன் சென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதி அவசர ஆலோசனை

By Sivam
Google Oneindia Tamil News

சென்னை: ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டால் நீதிமன்றங்களில் வழக்குகளின் விசாரணையை மேற்கொள்வது குறித்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நீதிபதிகளுடன் இன்று அவசர ஆலோசனை மேற்கொண்டார்..

ஊரடங்கு உத்தரவின் காரணமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படுகிறது. இமெயில் மூலம் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, மொபைல் ஆப் மூலம் வீட்டிலிருந்தபடியே நீதிபதிகள் விசாரித்து வருகின்றனர்.

madras high Court Chief Justice Emergency meeting with Bar Association Executives and District Judges

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நீதிபதிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் மோகனகிருஷ்ணன் அகில இந்திய பார் கவுன்சில் இணைத் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட வழக்கறிஞர் சங்க நிர்வாகி உடன் நேரில் ஆலோசனை நடத்தினார்.

அப்போது வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட தற்போது உள்ள நிலைமையை நீட்டிக்கப்பட வேண்டும் என்றும் அவசர முக்கியத்துவம் வாய்ந்த வழக்கை மட்டும் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர் தொடர்ந்து தலைமை நீதிபதி மற்றும் நிர்வாகக் குழு நீதிபதிகள் அடங்கிய குழு மாவட்ட நீதிபதிகளுக்கும் வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடர்ந்து நீதிமன்றத்தை எப்படி நடத்துவது என்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

நாளை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் ஆலோசனை நடத்திய பின்பு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தமிழகத்தில் நீதிமன்றங்கள் செயல்படுவது குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
madras high Court Chief Justice Emergency meeting with Bar Association Executives and District Judges due to court operations in tamil nadu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X