சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எந்த அதிகாரிகளுக்கு எதிராகவும் ஹைகோர்ட் செயல்படவில்லை.. சிலைக்கடத்தல் வழக்கில் நீதிபதிகள் கருத்து

Google Oneindia Tamil News

சென்னை: சிலைக்கடத்தல் வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், நீதிமன்றம் பொங்கிஷங்களை காப்பாற்ற வேண்டும் என்று செயல்ப்படுகிறதே தவிர எந்த அதிகாரிகளுக்கு எதிராகவும் செயல்படவில்லை என தெரிவித்தது. மேலும் உச்சநீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுகள் மீறப்பட்டால் அதற்கு டிஜிபியே பொறுப்பு என்றும் கூறியது.

சிலைக்கடத்தல் வழக்குகளில் நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தவில்லை என தமிழக அரசுக்கு எதிராக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வில் விசாரணை வந்தது.

அப்போது அரசு தரப்பில், இந்த வழக்கில் ஆஜராக உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பாலாஜி ஸ்ரீனிவாஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறி அதற்கான அரசாணை தாக்கல் செய்யப்பட்டது.

அபராதம் போதாது.. அதிக கட்டணம் வசூலித்தால் பஸ்களின் உரிமத்தை ரத்து செய்யணும்.. ஹைகோர்டில் வழக்குஅபராதம் போதாது.. அதிக கட்டணம் வசூலித்தால் பஸ்களின் உரிமத்தை ரத்து செய்யணும்.. ஹைகோர்டில் வழக்கு

அதிகாரிகளுக்கு

அதிகாரிகளுக்கு

இதையடுத்து நீதிபதிகள், இந்த நீதிமன்றம் பொங்கிஷங்களை காப்பாற்ற வேண்டும் என்று செயல்ப்படுகிறதே தவிர எந்த அதிகாரிகளுக்கு எதிராகவும் செயல்படவில்லை என தெரிவித்தனர். மேலும் உச்சநீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுகள் மீறப்பட்டால் அதற்கு டிஜிபியே பொறுப்பு எனவும் தெரிவித்தனர்.

 கூடுதல் டிஜிபி

கூடுதல் டிஜிபி

பொன் மாணிக்கவேல் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிலைக்கடத்தல் வழக்கு விசாரணையில் கூடுதல் டிஜிபி ஒருவர் தலையிடுவதாகவும், சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவில் உள்ள அதிகாரிகளை இடமாற்றம் செய்வதாகவும் குற்றஞ்சாட்டினார்.

ஒத்துழைப்பு இல்லை

ஒத்துழைப்பு இல்லை

சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு எதிராகவே நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், வழக்கு விசாரணைக்களுக்கு இந்து அறநிலையத்துறையோ, பிற துறைகளோ ஒத்துழைப்பு வழங்குவதில்லை எனவும் தெரிவித்தார்.

வழக்கு

வழக்கு

பொன்மணிக்கவேல் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பில், சிலைக்கடத்தல் வழக்கு விசாரணையில் இரு அமைச்சர்கள் தலையிட்டதாக கூறியுள்ளார் என்றும், அந்த இரு அமைச்சர்களின் பெயர்களை வெளியிட வேண்டும் என வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் கோரிக்கை விடுத்தார்.

விசாரணை

விசாரணை

இது தொடர்பாக எந்த ரகசிய அறிக்கையும் தங்களிடம் தாக்கல் செய்யப்படவில்லை என கூறிய நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பான ஆதாரங்களை மனுவாக தாக்கல் செய்ய இரு தரப்புக்கும் உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 12 ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

English summary
The Madras High Court did not act against any of the officials and also This Court is acting to preserve the treasures: says Judges on idol theft case inquiry
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X