சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழக அரசின் உள்துறை செயலாளர் எஸ் கே பிரபாகருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

By Sivam
Google Oneindia Tamil News

சென்னை: 2019 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட நீதிமன்ற உத்தரவுக்கு இணங்கத் தவறியதற்காக தமிழ்நாடு கமாண்டோ பயிற்சி பள்ளியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக இருக்கும் வி.கே. சுரேந்திரநாத் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக தமிழகத்தின் கூடுதல் தலைமைச் செயலாளரும், உள்துறை செயலாளருமான எஸ் கே பிரபாகருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழ்நாடு கமாண்டோ பயிற்சி பள்ளியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக உள்ள வி.கே. சுரேந்திரநாத், தமிழக அரசின் உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் ஐ.ஏ.எஸ்க்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதிமன்ற அவதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.

 Madras high court issued statutory notice to the additional chief secretary of Tamil Nadu

ஜூன் 2021 இல் ஓய்வு பெறவிருக்கும் சுரேந்திரநாத், 2019ல் உத்தரவிட்ட நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற தவறியதால் ர் எஸ்.கே.பிரபாகர் ஐ.ஏ.எஸ்க்கு எதிராக இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.

வி.கே. சுரேந்திரநாத், சார்பாக வழக்கறிஞர் பாலா டெஸ்சி தாக்கல் செய்த மனுவில், நான் (வி.கே.சுரேந்திரநாத்) பணியில் இருக்கும்போது உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் எனக்கு எதிராக சில கண்டன கருத்துகள் கூறப்பட்டன. இந்தக் கருத்துக்களை ரத்து செய்யக் கோரி, உயர்நீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல் செய்தேன். இதை உயர்நீதிமன்ற டிவிஷன் அமர்வு விசாரித்து, எனக்கு எதிராக உயர்நீதிமன்றம் கூறிய கண்டன கருத்தகளை ரத்து செய்து உத்தரவிட்டது.

ஆனால், காவல் துறையில் எனக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை. எனக்கு, அடுத்த கட்டமாக துணை கமிஷனர் என்ற பதவி உயர்வு அரசு வழங்க வேண்டும். எனக்கு எதிராக உயர்நீதிமன்றம் கண்டன கருத்து கூறியதால், இந்த பதவி உயர்வு வழங்க மறுத்தது தவறானது, சட்டவிரோதமானது. ஏற்கனவே, நீதிமன்றம் கண்டனத்தை ரத்து செய்ததால், எனக்கு பதவி வழங்க வேண்டும். எனக்கு பதவி வழங்காததால், நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு மீறியுள்ளது. எனவே, நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ், கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகரன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.' என்று வலியுறுத்தினார்.

 மாஜி நீதிபதி கர்ணனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்! மாஜி நீதிபதி கர்ணனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்!

இந்த வழக்கு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் பி டி ஆஷா தலைமையிலான அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் நான்கு வாரத்தில் தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகரனுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

English summary
The Madras high court has issued statutory notice to S K Prabakar, the additional chief secretary of Tamil Nadu on a contempt of court proceeding for failing to comply with a court order passed in 2019.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X