சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முதல்வர் கான்வாயில் வாகனங்கள் குறைப்பு.. நல்ல முடிவு.. தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாடு முதல்வரின் கான்வாயில் வாகனங்கள் குறைக்கப்பட்டதற்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பாராட்டு தெரிவித்துள்ளார்.

Recommended Video

    முதல்வரின் பாதுகாப்பு வாகனங்கள் குறைப்பு... தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு

    பொதுவாக மாநில முதல்வர்களின் வாகனங்களுக்கு முன்பாகவும், பின்பாகவும் அதிக அளவில் பாதுகாப்பு வாகனங்கள், அரசு அதிகாரிகள் வாகனங்கள் செல்வது வழக்கம். ஒவ்வொரு மாநில முதல்வர்களும் கார்களின் எண்ணிக்கை மாறுபடும்.

    ஆனாலும் பெரும்பாலும் ஒரு முதல்வரின் கான்வாயில் பாதுகாப்பு வாகனங்கள், அரசு உயர் அதிகாரிகளின் வாகனங்கள் எல்லாம் சேர்த்து குறைந்தது 10 வாகனங்களாவது செல்லும். தமிழ்நாட்டில் முன்னாள், இந்நாள் முதல்வர்கள் 12 முதல் 15 வாகனங்களை பயன்படுத்தி வந்துள்ளனர்.

    ப்ரமோவில் வருவதற்காக தான் இப்படி பண்ணுகிறாரா அபிஷேக்...காண்டாகும் நெட்டிசன்கள் ப்ரமோவில் வருவதற்காக தான் இப்படி பண்ணுகிறாரா அபிஷேக்...காண்டாகும் நெட்டிசன்கள்

    வாகனம்

    வாகனம்

    தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினும் தன்னுடைய கான்வாயில் 12 வாகனங்களை பயன்படுத்தி வந்தார். இந்த வாகனங்கள் நெரிசல் குறைவான பகுதிகளில் செல்லும் போது பிரச்சனை இல்லை. ஆனால் சென்னையில் காலை நேரத்தில் கான்வாய் செல்லும் நேரங்களில் சாலையின் மற்ற போக்குவரத்து மூடப்பட்டு மக்கள் காக்க வைக்கப்படுவது வழக்கம். இதனால் பெரிய அளவில் டிராபிக் ஏற்படுத்துவதும் உண்டு. இது பலமுறை விமர்சனங்களை சந்தித்துள்ளது.

    என்ன நடந்தது

    என்ன நடந்தது

    இந்த நிலையில்தான் சில நாட்களுக்கு முன் மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்த நாள் விழாவிற்காக சென்னை அடையாறில் உள்ள சிவாஜி கணேசன் மணிமண்டபத்தை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு அங்கு மரியாதை செலுத்தினார். இதில் முதல்வர் மட்டுமின்றி பல்வேறு அமைச்சர்களும் கலந்து கொண்டனர். இதனால் இயல்பான கான்வாய் வாகனங்களை விட கூடுதல் வாகனங்கள் அன்று சாலையில் சென்றது.

    அடையாறு

    அடையாறு

    இதனால் முதல்வர் அடையாறு செல்லும் வரை உள்ள சாலைகள் பல மூடப்பட்டு அதனால் பெரும் டிராபிக் ஏற்பட்டது. இதில் பொது மக்கள் பலர் சிக்கி அவதிப்பட்டனர். அதேபோல் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் காரும் இந்த டிராபிக்கில் சிக்கியது. அவர் சுமார் 25 நிமிடம் டிராபிக்கில் காக்க வைக்கப்பட்டார். இது பெரிய சர்ச்சையான நிலையில் தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கையை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விமர்சனம் செய்து இருந்தார்.

    விளக்கம்

    விளக்கம்

    உள்துறை செயலர் பிரபாகரனிடம் இது தொடர்பாக அவர் விளக்கமும் கேட்டார். முதல்வரின் கான்வாய் செல்ல வேண்டும் என்று ஏன் இவ்வளவு நேரம் டிராபிக்கை நிறுத்துகிறீர்கள். உயர்நீதிமன்றத்திற்கு 25 நிமிடம் தாமதமாக வந்ததால் எனது பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களும் இன்னலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். எனது காரை நிறுத்தியது போல உங்களால் அமைச்சர்கள், முதல்வரின் காரை நிறுத்த முடியுமா? என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கேள்வி எழுப்பி இருந்தார்.

    நடவடிக்கை

    நடவடிக்கை

    இதையடுத்து துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசு, முதல்வரின் கான்வாய் வாகனங்களை குறைத்தது. முதல்வரின் உத்தரவின் பெயரில் முதல்வருக்கு பின்னால் வரும் கான்வாய் வாகனங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. 12 கான்வாய் வாகனங்களுக்கு பதிலாக 6 வாகனங்களை பயன்படுத்த வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டார். இந்த அறிவிப்பு பெரிய வரவேற்பை பெற்றது.

    பாராட்டு

    பாராட்டு

    இந்த நிலையில் முதல்வரின் கான்வாய் வாகனங்கள் குறைக்கப்பட்டதற்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பாராட்டு தெரிவித்துள்ளார்.இந்த நிலையில் தமிழக உள்துறைச் செயலாளர் பிரபாகரை இன்று நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தார். அதன்படி நேரில் ஆஜரான உள்துறை செயலாளர் பிரபாகரிடம், நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், உடனடியாக நடவடிக்கை எடுத்ததற்கு பாராட்டுக்கள் என்று தெரிவித்தார்.

    சமரசம் வேண்டாம்

    சமரசம் வேண்டாம்

    நீதிபதிக்கு அதிக அதிகாரம் உள்ளதாக நினைக்க வேண்டாம், யாரும் உயர்ந்தவர் தாழ்ந்தவர் கிடையாது என்றும், அடுத்தநாளே இதுதொடர்பாக போக்குவரத்தை சீரமைத்ததற்கு நன்றி. நீதிபதிகள் மட்டுமல்ல பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.அப்போது குறுக்கிட்ட உள்துறை செயலாளர் பிரபாகர், முதல்வரின் கான்வாய் 12 வாகனங்களில் 6 ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும், எதிரில் வரும் வாகனம் நிறுத்துவது இல்லை என்றும் தெரிவித்தார். இதையடுத்து தமிழக தலைமைச் செயலாளர் உள்துறை செயலாளர், டிஜிபி அனைவருக்கும் பாராட்டு தெரிவித்த நீதிபதி, முதலமைச்சரின் பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்து கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார்.

    English summary
    Madras HC Judge Praised Tamil Nadu Cheif Minister MK Stalin's Decision to have fewer vehicle in Convoy.தமிழ்நாடு முதல்வரின் கான்வாயில் வாகனங்கள் குறைக்கப்பட்டதற்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பாராட்டு தெரிவித்துள்ளார்.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X