• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

புராதன கோயில்களை பாதுகாக்க வேண்டும்.. கோயில் நகைகள், சிலைகள் பற்றியும் ஐகோர்ட் அதிமுக்கிய உத்தரவு

Google Oneindia Tamil News

சென்னை: மாநிலத்திலுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொன்மையான, புராதன கோவில்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும் மத்திய சிலை கடத்தல் பிரிவை அமைக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தமிழ அரசுக்கு உத்தரவிட்டனர்.

தமிழகம் முழுவதும் உள்ள தொன்மையான கோவில்களைப் பாதுகாப்பது தொடர்பாக, கடந்த 2015ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

கட்சிக்காக வருவேன்.. மக்களுக்காக உழைப்பேன்..யாராலும் தடுக்க முடியாது.. சசிகலாவின் புது ஆடியோ ரிலீஸ்!கட்சிக்காக வருவேன்.. மக்களுக்காக உழைப்பேன்..யாராலும் தடுக்க முடியாது.. சசிகலாவின் புது ஆடியோ ரிலீஸ்!

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் 44 ஆயிரத்து 121 கோவில்கள் உள்ளன. இதில் 8,450 கோவில்கள் நூறு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டவை. இவை புராதன கோவில்களாகக் கருதப்படுகின்றன.

தமிழ்நாட்டிலுள்ள தொன்மையான கோவிகள்

தமிழ்நாட்டிலுள்ள தொன்மையான கோவிகள்

மேலும், மாநிலத்திலுள்ள 44 ஆயிரம் கோவில்களில் 32 ஆயிரத்து 935 கோவில்கள் நல்ல நிலையில் இருப்பதாகவும், 6,414 கோவில்கள் சிறிய சீரமைப்புப் பணிகள் செய்ய வேண்டிய நிலையில் இருப்பதாகவும், 530 கோவில்கள் பாதி சிதிலமடைந்துள்ளதாகவும், 716 கோவில்கள் முழுமையாகச் சிதிலமடைந்துள்ளதாகவும் அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பாதி சிதிலமடைந்த, முழுமையாகச் சிதிலமடைந்த இந்த கோவில்களை யுனெஸ்கோ விதிகளின்படி சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கோயில்களைப் பாதுகாக்க வேண்டும்

கோயில்களைப் பாதுகாக்க வேண்டும்

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் பி.டி.ஆதிகேசவலு அடங்கிய அமர்வு இன்று முக்கிய தீர்ப்பை வழங்கியது. அதில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொன்மையான, புராதன கோவில்களைப் பாதுகாக்க வேண்டும் என உத்தரவிட்டனர். தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களின் பட்டியலைத் தயாரித்து, கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க வேண்டும். நிலங்களை வாடகைக்கு எடுத்தவர்களிடம் இருந்து பெற வேண்டிய வாடகை பாக்கியை வசூலிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

மாநில அளவிலான குழுக்கள்

மாநில அளவிலான குழுக்கள்

கோவில்களில் உள்ள சிலைகள், நகைகள் உள்ளிட்டவற்றைப் பட்டியலாகத் தயாரிக்க வேண்டும்; கோவில்களில் ஸ்ட்ராங்க் ரூம் அமைத்து, இந்த சிலைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; அனைத்து மாவட்டங்களுக்கும் தகுதியான ஸ்தபதிகளை நியமிக்க வேண்டும் எனவும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர். ஓதுவார்கள், அர்ச்சகர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கவும், சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக மாநில, மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

நகைகள் படத்தை ஆன்லைனில் வெளியிட வேண்டும்

நகைகள் படத்தை ஆன்லைனில் வெளியிட வேண்டும்

சிலைகள், நகைகளைப் புகைப்படம் எடுத்து அவற்றை இணைய தளங்களில் வெளியிட வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதிகள், ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை மீட்பதுடன், கோவிலுக்குச் சொந்தமான நிலங்களுக்கான வாடகையை நிர்ணயிக்க வேண்டும் எனவும் அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டுள்ளனர். அறங்காவலர்களை நியமித்து அவர்களுக்கு ஊதியம் நிர்ணயிக்க வேண்டும் என்றும், பரம்பரை அறங்காவலர்களை அடையாளம் காண வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.

கோவில் கணக்குகள் தணிக்கை

கோவில் கணக்குகள் தணிக்கை

கோவில்கள் பாதுகாப்பு தொடர்பான விதிகளை உடனடியாக வகுத்து வெளியிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளதுடன்,கோவில் நிலங்கள் உள்ளிட்ட விவரங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்குத் தனி தீர்ப்பாயம் அமைக்கவும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர். கோவில்களின் கணக்கு வழக்குகளை மத்திய கணக்குத் தணிக்கை துறை தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.

மத்திய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு

மத்திய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு

மத்திய சிலை கடத்தல் தடுப்புப் பிரிவை அமைக்க வேண்டும் எனவும், கோவில்களுக்குச் சொந்தமான நீர்நிலைகளையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளனர். கோவில் நிலங்கள், சொத்துக்களைத் திருடியவர்கள், சேதப்படுத்தியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளனர். இந்த உத்தரவுகளை 12 வாரங்களில் அமல்படுத்த வேண்டும் எனவும், அது குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

English summary
Madras high court orders TN govt on preserving old temples.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X