சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆன்லைன் வகுப்புக்களுக்கு தடை கோரிய வழக்கு.. அனல் பறந்த வாதங்கள்.. நாளை சென்னை ஹைகோர்டில் தீர்ப்பு

By Sivam
Google Oneindia Tamil News

சென்னை: ஆன்லைன் வகுப்புக்களுக்கு தடை கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது.

கொரோனா பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, பள்ளிகள் மூடப்பட்டதால் ஆன லைன் மூலம் வகுப்புக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மாணவ - மாணவியர் ஆபாச இணைய தளங்களை காணக் கூடும் என அச்சம் தெரிவித்து, ஆன் லைன் வகுப்புக்களுக்கு தடை கோரி சரண்யா, பரணீஸ்வரன் உள்ளிட்ட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர்.

Madras High Court will Judging tomorrow in a case seeking a ban on online classes

இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், மத்திய அரசு, ஆன் லைன் வகுப்புக்களுக்கான வழிகாட்டு விதிமுறைகளை வகுத்தது. அதன் அடிப்படையில், தமிழக அரசும் விதிகளை அறிவித்தது. அதன்படி தமிழகத்தில் வகுப்பு வாரியாக மாணவர்களுக்கான ஆன் லைன் வகுப்புக்கள் நடத்தும் நேரமும் அறிவிக்கப்பட்டது.

1ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை 45 நிமிடங்கள் வீதம் 2 வகுப்புகளும், 9 ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை 45 நிமிடங்களுக்கு மிகாமல் 4 வகுப்புக்கள் நடத்தலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு விசாரித்தது.

மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களின் கண்கள் பாதிக்கப்படுவதாகவும், ஆபாச இணையதளங்களை காண நேரிடும் எனவும் இதை தடுக்க உரிய விதிகளை வகுக்கும் வரை ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் என வாதிட்டனர்.

3 நாட்கள் மட்டுமே தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர்... அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு 3 நாட்கள் மட்டுமே தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர்... அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு

மத்திய அரசுத்தரப்பில், டிஜிட்டல் கல்வி நோக்கி பயணிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது எனவும், அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் உறுதிபடுத்தப்பட்டுள்ளதாகவும் வாதிடப்பட்டது.

ஆன் லைன் வகுப்புக்களுக்கான விதிகளை பின்பற்றாத பள்ளிகளுக்கு எதிராக புகார்கள் வந்தால் அப்பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர்கள் மட்டுமல்லாமல், பள்ளிகள் தரப்பிலும், ஆன் லைன் வகுப்புக்கள் நடத்துவது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நாளை காலை 10;30 மணியளவில் இந்த வழக்கில் தீர்ப்பளிக்க உள்ளனர்.

English summary
The Madras High Court will Judging tomorrow in a case seeking a ban on online classes. Petitioners allege that students' eyes are affected by online classes and that pornographic websites are viewed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X