சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முடியலை சாமி முடியலை.. மதுரையில் 106.. 10 ஊர்களில் சதத்தை தாண்டி ஓடிட்டிருக்கு வெயிலு!

10 நகரங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் அடித்ததால் மக்கள் அவதிக்கு உள்ளானார்கள்.

Google Oneindia Tamil News

சென்னை: இப்பவே இப்படி வெயில் கொளுத்தினா எப்படிதான் நாம நடமாடுவதாம்? நாளுக்கு நாள் சதம் போடும் நகரங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போவதால் மக்கள் பீதியில் உள்ளார்கள்.

கொஞ்ச நாளாகவே வெப்பம் தலைதூக்கி காணப்படுகிறது. இதனால் வீட்டிற்குள்ளேயே மக்களால் உட்கார முடியவில்லை.

ஈரப்பதம் மிகுந்த கிழக்கு திசைக் காற்று வீசுவது குறைந்துள்ளதால், வறண்ட மேற்குதிசைக் காற்று தமிழகம் நோக்கி வீசுகிறது என்றும் அதனால் பல நகரங்களில் வழக்கத்தை விட வெப்பம் அதிகரித்து வருவதாகவும் சென்னை வானிலை மையம் சொல்லி இருந்தது.

என்னாது.. ஒரே ஒரு எலுமிச்சம் பழம் 30 ஆயிரம் ரூபாயா? என்னாது.. ஒரே ஒரு எலுமிச்சம் பழம் 30 ஆயிரம் ரூபாயா?

13 மாவட்டங்கள்

13 மாவட்டங்கள்

2 தினங்களுக்கு முன்புகூட 6, 7 தேதிகளில் அனல்காற்று வீசக்கூடும் என்றும் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தருமபுரி, நாமக்கல், சேலம், கரூர், திண்டுக்கல், திருச்சி, மதுரை, ஈரோடு ,திருப்பூர் ஆகிய 13 மாவட்டங்களில் இந்த வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. அதனால் வழக்கத்தை விட அதிகபட்சமாக 9 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை உயரக்கூடும் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

திருத்தணி

திருத்தணி

அதற்கேற்றாற்போல, இன்று வெயில் மண்டையை பிளந்தது. சேலத்தில் 104 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. திருத்தணியில் அனல் காற்றுடன் 104.5 டிகிரி பாரன்ஹீட், திருச்சி, தர்மபுரியில் தலா 104 டிகிரி வெயில் வெளுத்தது

சென்னை

சென்னை

நாமக்கல், நெல்லை, வேலூரில் 103, கோவையில் 101 டிகிரி பாரன்ஹீட் வெயில் மற்றும் தலைநகர் சென்னையில் 98 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது.

சிரமம்

சிரமம்

மேலும் மதுரையில் 106 டிகிரி பாரன்ஹீட்,கரூர் பரமத்தியிலும் 106 டிகிரி வெயில் என வெயில் அடித்து மக்களை வறுத்தெடுத்தது. கிட்டத்தட்ட தமிழகத்தின் 10 நகரங்களில் வெயில் சதத்தைத் தாண்டியதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இன்னும் எப்படித்தான் அக்னியில் இருந்து தப்பிச்சு வெளியே வரப்போறோமோ!

English summary
More than 100 Degree Hot heat in more than in 10 cities today including Madurai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X