சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சத்யனை நாலா பக்கமும் ரவுண்டு கட்டும் அதிருப்தி.. நீந்தி கரையேறுவாரா ராஜன் செல்லப்பா மகன்!

மதுரை அதிமுக வேட்பாளர் ராஜ் சத்யன் உட்கட்சி பூசலில் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    மதுரை தொகுதியை இத்தனை பேர் கேட்டால் என்ன செய்யும் அதிமுக?

    சென்னை: மதுரை அதிமுக வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டதில் இருந்தே ஏகப்பட்ட சலசலப்புகள் கட்சிக்குள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது!

    மதுரை தொகுதிக்கு ஆரம்பத்திலிருந்தே அதிமுகவில் கூட்டணி கட்சிகள் கேட்டு வந்தன. பிரேமலதாகூட மதுரையை கேட்டு பார்த்து, அதற்கு அதிமுக தலைமை நோ சொல்லிவிட்டதாக ஒரு தகவல் வந்தது.

    ஆனால் சிட்டிங் எம்பி கோபாலகிருஷ்ணன் தனக்குதான் மதுரை தொகுதியில் சீட் வேண்டும் என்று கேட்டிருந்தார்.

    எடப்பாடியை முதல்வராக்க வேண்டும் என்பதற்காக நடக்கும் தேர்தல் இது.. மாஜி அமமுக எம்எல்ஏ கொடுத்த ஷாக் எடப்பாடியை முதல்வராக்க வேண்டும் என்பதற்காக நடக்கும் தேர்தல் இது.. மாஜி அமமுக எம்எல்ஏ கொடுத்த ஷாக்

    நான்குமுனை போட்டி

    நான்குமுனை போட்டி

    மற்றெரு பக்கம் ராஜன் செல்லப்பா தன் மகனுக்கு சீட் வேண்டும் என்று கேட்டிருந்தார். அமைச்சர் உதயகுமாரும் தன் சார்பாக ஒருவருக்கு சீட் கேட்டிருந்தார். மேலும் முன்னாள் எம்எல்ஏ தமிழரசன் சீட் கேட்டிருந்தார். இந்த நான்குமுனை போட்டா போட்டியில், கடைசியில் அதிமுக வேட்பாளராக ராஜன் செல்லப்பா மகன் ராஜ்சத்யன் அறிவிக்கப்பட்டார்.

    ராஜ்சத்யன்

    ராஜ்சத்யன்

    இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் மாறி மாறி எழுந்து வருகிறது. ராஜ்சத்யன் அமைச்சர் செல்லூர்ராஜூவின் தீவிர ஆதரவாளர். அமைச்சர் உதயகுமாருக்கு புகைச்சலை உருவாக்கி இருப்பதற்கு முக்கிய காரணமே இதுதான்! தான் கேட்டு மறுத்த தொகுதி இப்போது ராஜ்சத்யனுக்கு தரப்பட்டுள்ளதால், என்னென்ன உள்ளடி வேலைகள் நடக்க போகிறதோ என்ற கலக்கம் மதுரையில் ஏற்பட்டுள்ளது.

    அணி மாறினால்?

    அணி மாறினால்?

    வாரிசுக்கு சீட் வழங்கிவிட்டதால், சிட்டிங் எம்பி கோபாலகிருஷ்ணன் பெரும் அதிருப்தியில் உள்ளாராம். இதற்கு காரணம் என்னவென்றால், ராஜ் சத்யன் இதற்கு முன்பு டிடிவி தினகரனின் ஆதரவாளராக இருந்திருக்கிறார். ஒருவேளை இப்போது ஜெயித்துவிட்டால் நாளை அணி மாறி சென்றால் என்னாகும் என்பதுதான் இவரது கேள்வியே.

    உள்ளடி வேலைகள்

    உள்ளடி வேலைகள்

    ஆக சத்யனை சுற்றி இப்போது ஒரு பக்கம் அமைச்சர் உதயகுமார் தரப்பு, மற்றொரு பக்கம் சிட்டிங் எம்பி தரப்பு., இன்னொரு பக்கம் முன்னாள் எம்எல்ஏ தரப்பு என எதிராக ரவுண்டு கட்டி உள்ளனர். இவர்களை எல்லாம் சரிக்கட்டி சமாளித்தால்தான் மகனின் வெற்றி என்பது மதுரையில் சாத்தியம் என்று ராஜன் செல்லப்பா உணர்ந்திருக்கிறார். பண பலம், அரசியல் பலம் இருந்தாலும், யாரும் எந்த உள்குத்து வேலையிலும் இறங்கிவிடக்கூடாது என்பதால்அவர்களின் ஒத்துழைப்பையும் தந்தை நாடி செல்வார் என்றே கூறப்படுகிறது.

    English summary
    Rajan sellappa's son Raj Sathyan contest in Madurai on behalf of ADMK
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X