சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

விஜய் படத்திற்கு 5-வது நாள் ஆள் இருக்காது... ராஜன்செல்லப்பா கிண்டல்

Google Oneindia Tamil News

Recommended Video

    விஜய் படத்திற்கு 5-வது நாள் ஆள் இருக்காது..ராஜன்செல்லப்பா கிண்டல் | Bigil | Vijay | Rajan chellappa

    சென்னை: நடிகர் விஜய் படத்திற்கு முதல் நான்கு நாட்கள் மட்டும் அவரது ரசிகர்கள் ஆர்ப்பாட்டம் செய்வார்கள் என்றும், 5-வது நாள் பார்த்தால் தியேட்டரில் ஆள் இருக்காது எனவும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.

    மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராஜன் செல்லப்பாவை பொறுத்தவரை அவ்வப்போது அதிரடியான கருத்துக்களை கூறி கட்சியின் தலைமையின் கவனத்தை ஈர்ப்பார். அதிமுகவுக்கு ஒற்றைத்தலைமை வேண்டும் என அவர் பேட்டியளித்து ஓ.பி.எஸ்.,இ.பி.எஸ்.ஸை கிடுகிடுக்க வைத்தார்.

    madurai admk mla rajan chellappa slams actor vijay

    இந்நிலையில் பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவில், யாரை எங்கு வைக்க வேண்டுமோ, அங்கு வைக்க வேண்டும் என நடிகர் விஜய் பேசியதற்கு ராஜன் செல்லப்பா தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். நடிகர் விஜய் முதலமைச்சரை குறிப்பிட்டு பேசவில்லை என தாம் நினைப்பதாகவும், ஒரு வேளை அப்படி பேசியிருந்தால் 50 நாட்கள் ஓட வேண்டிய படம் 25 நாட்கள் தான் ஓடும் எனத் தெரிவித்தார்.

    அதிகாரிகளுக்கு ''காக்னிசென்ட் '' லஞ்சம் அளித்ததா... பதிலளிக்க மறுத்த அமைச்சர் எம்.சி.சம்பத்அதிகாரிகளுக்கு ''காக்னிசென்ட் '' லஞ்சம் அளித்ததா... பதிலளிக்க மறுத்த அமைச்சர் எம்.சி.சம்பத்

    மோடியை குறிப்பிட்டு ஒரு வேளை விஜய் பேசியிருந்தால் அவருக்கு ஆபத்து காத்திருப்பதாக மிரட்டல் விடுக்கும் வகையில் கருத்துக் கூறியிருக்கிறார். மேலும், தம்மை பொறுத்தவரை விஜய் பேசியது, உதயநிதியை மனதில் வைத்து தான் என்றும், உதயநிதிக்கு திமுகவில் பொறுப்பு வழங்கியதை விமர்சித்து தான் மறைமுகமாக அவர் இப்படி பேசியதாக கூறினார்.

    இரண்டு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் சூழலில் ராஜன் செல்லப்பாவின் இந்தக் கருத்து விஜய் ரசிகர்களை கொதிப்படைய வைத்துள்ளது.

    English summary
    madurai admk mla rajan chellappa slams actor vijay
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X