சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மதுரையில் ஜூலை 14 வரை லாக்டவுன் நீடிப்பு - 15 முதல் ரிலாக்ஸ் - அரசு அறிவிப்பு

மதுரையில் ஜூலை 14ஆம் தேதி வரை கட்டுப்பாடுகளுடன் கூடிய லாக்டவுன் நீடிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.மதுரையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மேலும் 2 நாட்களுக்கு லாக்டவுன் நீடிக்கப்பட்டுள

Google Oneindia Tamil News

சென்னை: மதுரையில் ஜூலை 14ஆம் தேதி வரை கட்டுப்பாடுகளுடன் கூடிய லாக்டவுன் நீடிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஜூலை 15ஆம் தேதிக்கு மேல் பிற மாவட்டங்களில் உள்ளது போல தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் நடைமுறைக்கு வரும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். மதுரையில் மேலும் சில நாட்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்திருந்த நிலையில் லாக்டவுன் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் ஜூலை 31ஆம் தேதி வரை அமலில் உள்ளது. கடைகள் திறக்கவும், டீ கடைகள் திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Madurai areas total lockdown extended till July 14

மதுரை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகமானதை அடுத்து கடந்த மாதம் 24ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை முதற்கட்டமாக 7 நாட்களுக்கு முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. இந்த லாக்டவுனால் மதுரை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் நடமாட்டம் குறைந்தாலும் கொரோனா வைரஸ் குறைந்தபாடில்லை. இதனைத் தொடர்ந்து ஜூலை 12ஆம் தேதி வரை லாக்டவுன் நீடிக்கப்பட்டிருந்தது.

சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி துபேவை ம.பி.யில் இருந்து அழைத்து வந்த கான்ஸ்டபிள் ஒருவருக்கு கொரோனாசுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி துபேவை ம.பி.யில் இருந்து அழைத்து வந்த கான்ஸ்டபிள் ஒருவருக்கு கொரோனா

கொரோனா வைரஸ் 6ஆயிரம் பேருக்கு மேல் பரவிய நிலையில் ஊரடங்கு மேல் நீடிக்குமா? தளர்வுகள் அறிவிக்கப்படுமா என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் ஜூலை 14ஆம் தேதி வரை கட்டுப்பாடுகளுடன் கூடிய லாக்டவுன் நீடிக்கப்படுவதாகவும் ஜூலை 15ஆம் தேதிக்கு மேல் பிற மாவட்டங்களில் உள்ளது போன்ற நடைமுறை அமலுக்கு வரும் என்றும் தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது.

Madurai areas total lockdown extended till July 14

மதுரையில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் தவிர இறைச்சிகள் திறக்கவும்,பிற கடைகள் திறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஜூலை 15 முதல் மதுரைவாசிகள் ரிலாக்ஸ் ஆக கடைவீதிகளுக்கு சென்று வருவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

English summary
Tamil Nadu Chief Minister K. Palaniswami on S announced extension of complete lockdown in Madurai till July 14 from July 12 onwards.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X