• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

ஹாஸ்டலில் கலைவாணி.. அசிங்கம் மேல் அசிங்கம்..அதிர வைக்கும் கள்ளக்காதலும், கடத்தலும்.. மதுரையில் ஷாக்

Google Oneindia Tamil News

சென்னை: ஹாஸ்டல் என்ற பெயரில் அட்டூழியம் செய்து வந்துள்ளார் கலைவாணி.. பச்சிளம் குழந்தைகளை கடத்தி, பணத்தை வாரி வாரி குவித்துள்ளார்.. இதையடுத்து, அந்த ஹாஸ்டல் ஓனருக்கு போலீசார் வலை விரித்துள்ளனர்.

மதுரை மாவட்டம், மேலூர் அருகிலுள்ளது சேக்கிபட்டி.. இங்கு வசித்து சேர்ந்தவர் ஐஸ்வர்யா... இவருக்கு 22 வயதாகிறது.. இவருக்கு யாருமே இல்லை.. ஆதரவற்றவர்.. அதேசமயம், சற்று மனவளர்ச்சியும் குன்றியவர்.

உலகப் புகழ் பெற்ற 100 மருத்துவக் கல்லூரிகள்.. 6 இந்தியாவில்.. அதில் 2 தமிழ்நாட்டில்..1 புதுவையில்.. மாஸ்! உலகப் புகழ் பெற்ற 100 மருத்துவக் கல்லூரிகள்.. 6 இந்தியாவில்.. அதில் 2 தமிழ்நாட்டில்..1 புதுவையில்.. மாஸ்!

இவரை அந்த பகுதியில் வசித்த ஒரு தாத்தா ஆதரவு அளித்து வந்தாராம்.. ஆனால், சில வருஷத்துக்கு முன்பு ஐஸ்வர்யாவை அந்த தாத்தாவே கல்யாணமும் செய்துக்கிட்டாராம்.. இப்போ இவங்களுக்கு 8 வயதில் ஒரு பெண் குழந்தையும், 5 மற்றும் 1 வயதில் ஆண் குழந்தைகளும் பிறந்ததாக கூறப்படுகிறது.

 ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா

ஆனால், அந்த தாத்தா கொஞ்ச நாளைக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால், குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார் ஐஸ்வர்யா.. அப்போது தாத்தாவும் இறந்துபோய்விட்ட நிலையில், சிலர் தவறான நோக்கில் அணுக முயற்சித்துள்ளனர்... இந்த விஷயம், அந்த பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்களுக்கு தெரிந்து, மதுரை ஆயுதப்படை மைதானம் அருகே உள்ள "இதயம்" என்ற ஆதரவற்றோர் மற்றும் முதியோர் காப்பகத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்...

சிவக்குமார்

சிவக்குமார்

நடந்ததை எல்லாம் சொல்லி, காப்பகத்தின் ஓனர் அந்த சிவக்குமாரிடம் சொல்லி ஒப்படைத்துவிட்டு வந்துள்ளனர். இப்படிப்பட் சூழலில், ஐஸ்வர்யாவின் ஒரு வயது குழந்தை காணாமல் போய்விட்டது.. இதுகுறித்து சிவக்குமாரிடம் கேட்டதற்கு, குழந்தைக்கு கொரோனா தொற்று வந்துவிட்டது, அதனால், ஜூன் 13ம் தேதி முதல் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருப்பதாக சொல்லி உள்ளனர்.. இதையடுத்து, 2 நாளுக்கு முன்பு கேட்டுள்ளனர்..

தத்தனேரி

தத்தனேரி

அப்போது, அந்த குழந்தை இறந்துவிட்டது, தத்தனேரி மயானத்தில் புதைத்து விட்டோம் என்று சொல்லி உள்ளனர். அதுமட்டுமல்ல, தத்தனேரியில் புதைக்கப்பட்டதற்கான மாநகராட்சி முத்திரையிட்ட ரசீதுகளும் ஆதாரங்களாக காட்டப்பட்டுள்ளது. இதற்கு பிறகுதான், விஷயம் தல்லாகுளம் ஸ்டேஷன் வரை சென்றது. போலீசாரும் விசாரணையை கையில் எடுத்தனர்.

 கலைவாணி

கலைவாணி

அப்போது சிக்கியவர்தான் கலைவாணி.. இவர்தான் அந்த ஹாஸ்டலின் ஒருங்கிணைப்பாளர்.. துருவி துருவி கலைவாணியை விசாரித்தபோது, மொத்த உண்மையையும் கக்கிவிட்டார்... கண்ணன் என்ற நகைக்கடைக்காரருக்கு இந்த குழந்தையை விற்றுள்ளார் கலைவாணி.. அடுத்த ஒரு மணி நேரத்தில் குழந்தையை மீட்டனர் போலீசார்.

 ஹாஸ்டல்

ஹாஸ்டல்

இதுபோல நிறைய குழந்தைகளை கலைவாணி, அந்த ஹாஸ்டலில் இருந்து விற்று சம்பாதித்து வந்துள்ளார்.. இதனிடையே ஹாஸ்டல் ஓனர் சிவக்குமார் எஸ்கேப் ஆகிவிட்டார்.. அவரை இப்போது போலீசார் தேடி வருகிறார்கள்... சிவக்குமாரின் காதலியாம் இந்த கலைவாணி.. சிவக்குமாருக்கு ஏற்கனவே கல்யாணமாகிவிட்டது.. நடுவில் வந்து ஜாயிண்ட் ஆனவர் இந்த கலைவாணி.. கலைவாணியின் சுறுசுறுப்பு, ஸ்மார்ட் ஒர்க் இதெல்லாம் பார்த்து சிவக்குமார் மயங்கியிருக்கிறார்..

கைது

கைது

இருவரும் சேர்ந்து, குழந்தை விற்பனையை ஜரூராக நடத்தி பணத்தையும் அள்ளியிருக்கிறார்கள். இதனிடையே, இந்த கள்ளக்காதல் பற்றி சிவக்குமாரின் வீட்டுக்கும் தெரிந்து, அவர் மனைவி தற்கொலை வரை சென்றாராம்.. ஆனாலும் சிவக்குமார், கலைவாணிக்காக மனைவியை உதறிதள்ளிவிட்டு "லிவிங் டூகெதர்" வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளார்.. இதுபோக அந்த காப்பகத்தில் குழந்தைகள் முன்பே பல அட்டூழியங்களும் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.. இவர்கள் பல குழந்தைகளை விற்றிருக்கலாம் என்பதால், விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

English summary
Madurai child trafficking case, and police rescue children
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X