சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேர்தல் ஆணையத்துக்கு ஹைகோர்ட் சுளீர்.. மதுரை கலெக்டரை மாற்ற உத்தரவு

Google Oneindia Tamil News

Recommended Video

    தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

    சென்னை: மதுரை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான நடராஜனை மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    வாக்குச்சாவடியில் வட்டாட்சியர் சம்பூர்ணம் அனுமதியின்றி நுழைந்த விவகாரத்தில் துணை தேர்தல் அதிகாரி, ஆட்சியரின் உதவியாளர், காவல் உதவி ஆணையர் ஆகியோரையும் மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    சில தினங்களுக்கு முன்பு, மதுரை வாக்குப் பதிவு மையத்திற்குள் வட்டாட்சியர் சம்பூர்ணம் நுழைந்த சம்பவம் அறிந்த திமுக, அமமுக உள்ளிட்ட கட்சியினர் தர்ணா போராட்டம் நடத்தினர். இதனையடுத்து, வட்டாட்சியர் சம்பூரணம் உள்ளிட்ட 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

    தலைமை தேர்தல் அதிகாரி போஸ்ட்மேனா.. அதிகாரம் இல்லையா.. ஆணையத்துக்கு ஹைகோர்ட் கடும் கண்டனம் தலைமை தேர்தல் அதிகாரி போஸ்ட்மேனா.. அதிகாரம் இல்லையா.. ஆணையத்துக்கு ஹைகோர்ட் கடும் கண்டனம்

    உயர்நீதிமன்றத்தில் முறையீடு

    உயர்நீதிமன்றத்தில் முறையீடு

    மே 23 ம் தேதி, மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், சர்ச்சை ஏற்பட மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான நடராஜனே காரணம். எனவே அவரை மாற்ற வேண்டும் என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு. வெங்கடேசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார்.

    நீதிபதிகள் சரமாரி கேள்வி

    நீதிபதிகள் சரமாரி கேள்வி

    இதுகுறித்து விசாரணை நடத்திய நீதிபதிகள், மாவட்ட ஆட்சியர், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள அறைக்கு சென்றாரா?. தாசில்தாரை சஸ்பெண்ட் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்ட தலைமை தேர்தல் அதிகாரி, மற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடாதது ஏன்? என சரமாரியாக கேள்வி எழுப்பினார்கள்.

    தேர்தல் ஆணையம் விளக்கம்

    தேர்தல் ஆணையம் விளக்கம்

    உதவி தேர்தல் அதிகாரி அறிவுறுத்தலின் பேரில் தாசில்தாரர், வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு சென்றார் என்றும், தலைமை தேர்தல் அதிகாரி அனுப்பிய பரிந்துரை குறித்து முடிவெடுக்க 2 நாள் அவகாசம் வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

    நீதிமன்றம் உத்தரவு

    நீதிமன்றம் உத்தரவு

    இந்தநிலையில், மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன் தொடர்ந்த வழக்கில், மதுரை மாவட்ட ஆட்சியரும் ,தேர்தல் அதிகாரியுமான நடராஜனை மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தேர்தல் அதிகாரி, காவல்துறை அதிகாரிகளையும் மாற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் ஆணைய நடைமுறைகளில் தலையிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.

    கிரிமினல் நடவடிக்கை

    கிரிமினல் நடவடிக்கை

    வட்டாட்சியர் சம்பூர்ணத்தை மையத்திற்குள் செல்ல அனுமதித்த, உதவி போலீஸ் ஆணையர், ஆட்சியரின் தனி அதிகாரி, பணியில் இருந்த காவல் அதிகாரிகள் மாற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்குப் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, விசாரணை வரும் 30-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

    English summary
    Madurai Collector Natarajan changed, High Court Order
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X