• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

எல்லாத்துக்கும் காரணம் அந்த "தாத்தா".. நடுவானில் கல்யாணம்.. சிக்கலில் தம்பதி.. வந்தது விசாரணை!

Google Oneindia Tamil News

சென்னை: எல்லாத்துக்கும் காரணம் அந்த தாத்தாதான்.. நடுவானத்திலே புதுமாதிரியாக பேரனுக்கு கல்யாணம் செய்ய ஆசைப்பட்டுள்ளார்.. அதன்படியே விமானத்தில் 161 பேர் பயணித்தபடியே திருமணமும் நடந்துள்ளது.. இப்போது, உல்லாச பயணத்திற்கு ஏற்பாடு செய்த ஏஜெண்ட் உட்பட, விமானத்தின் ஊழியர்கள் மொத்த பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது 2வது அலை வேகமாக பரவி வருகிறது.. இந்த அலை வீரியமிக்கது, மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது என்று சொல்லியும் பலர் அலட்சியமாக இருக்கிறார்கள்.

மேலும், லாக்டவுன் அமலில் உள்ளதால், திருமண நிகழ்ச்சிகளுக்கு நிறைய கெடுபிடிகளும் உள்ளன.. அந்த வகையில், மதுரையை சேர்ந்த ராகேஷ் - தக்ஷிணா தம்பதிகள்..

ஜஸ்ட் 17 நிமிஷத்தில் நடந்த குவிக் கல்யாணம்.. மாமியாரிடம் நூதன வரதட்சணை கேட்ட மாப்பிள்ளை..!ஜஸ்ட் 17 நிமிஷத்தில் நடந்த குவிக் கல்யாணம்.. மாமியாரிடம் நூதன வரதட்சணை கேட்ட மாப்பிள்ளை..!

திருமணம்

திருமணம்

மணமகன் ராகேஷ் ஒரு டாக்டர்.. மணமகள் தக்‌ஷினா ஒரு மனநல ஆலோசகர்.. தட்ஷனாவின் அத்தை மகன்தான் ராகேஷ்.. 2 நாளைக்கு முன்புதான், இவர்களின் திருமணம் எளிய முறையில் வீட்டிலேயே நடந்து முடிந்துள்ளது..

தாத்தா

தாத்தா

ஆனாலும்கூட, இந்த திருமணத்தை வித்தியாசமாகவும், புதுமுறையிலும் செய்ய வேண்டும் என்று மணமக்களின் தாத்தா ஆசைப்பட்டுள்ளார்.. அதனால், ஓடும் விமானத்தில், நடுவானில் பறக்கும்போது, பெண்ணுக்கு தாலி கட்டுவது என முடிவானது.. அதன்படி, 161 உறவினர்கள் விமானத்தில் செல்ல முடிவெடுத்தனர்.. இதற்காக பெங்களூரு டூ மதுரை செல்லும், ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் ஒரு பிளைட்டையும் வாடகைக்கு எடுத்தனர்... 2 மணி நேரத்துக்கு வாடகை பேசியுள்ளனர்..!

 மணப்பெண்

மணப்பெண்

குடும்பத்தை சேர்ந்த 130 நபர்கள் கொரோனா டெஸ்ட் செய்து கொண்டு 'நெகட்டிவ்' சர்டிபிகேட்டும் வாங்கி கொண்டு பிளைட் ஏறினர்.. கரெக்ட்டா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை பிளைட் கடக்கும் போது, 161 உறவினர்கள் முன்னிலையில் மணமகன், மணப்பெண்ணுக்கு தாலி கட்டினார்.. இந்த கல்யாணம் இணையத்தில் படுவேகமாக வைரலானது.. பலரும் இதை ஆச்சரியத்துடன் வாயை பிளந்து பார்த்தனர்.. அப்போதுதான் ஒரு விஷயம் தென்பட்டது..

மாஸ்க்

மாஸ்க்

கல்யாணத்தில் பங்கேற்க அதிகபட்சம் 50 பேருக்கு மட்டுமே தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், அதற்கும் மேலான எண்ணிக்கையில் சொந்தக்காரர்கள் பயணித்து தெரியவந்தது.. மேலும் பலரும் மாஸ்க் போடாமல் இருந்துள்ளனர்.. இதையடுத்து இந்த திருமணம் சர்ச்சையை கிளப்பிய நிலையில், மத்திய விமான போக்குவரத்து துறை இயக்குநரகத்தின் கவனத்துக்கு வந்தது. திற்போது, ஆந்த விமானத்தின் ஊழியர்கள் மொத்த பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.. இது தொடர்பாக விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மதுரை

மதுரை

இந்த சம்பவம் தொடர்பாக ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அளித்த விளக்கத்தில்,"திருமணத்திற்கு பின்பு, உல்லாச பயணத்திற்காக மதுரையை சேர்ந்த ஏஜெண்ட் ஒருவர் பிளைட்டை புக் செய்துள்ளார்.. அரசின் தடுப்பு விதிகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என அவரிடம் அறிவுறுத்தப்பட்டது.. ஆனாலும், பயணிகள் அதனை பின்பற்றவில்லை என்பதால் விதிகளுக்கு உட்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Madurai Couple rented a whole flight and got married while flying and took action on it
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X