சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சீமான் தலைமையிலான வேல் நடைபயணத்திற்கு அனுமதி கிடையாது.. மதுரை ஹைகோர்ட் அதிரடி

சீமானின் வேல் நடைபயணத்திற்கு கோர்ட் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: சீமான் நாளைக்கு பழனியில் வேல் நடைபயணம் செல்ல திட்டமிட்டிருந்தார்.. ஆனால் அதற்கு அனுமதி கிடையாது என்று மதுரை ஹைகோர்ட் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

"தமிழர் நிலத்தின் கடவுள்" என்று முருகனை கொண்டாடி வருபவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.. இது சம்பந்தமாக இவர் தந்த விளக்க வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் பெரும் வைரலாகிய காலகட்டம் ஒன்று உண்டு!

இந்நிலையில் தற்போது பாஜக வேல் யாத்திரையை மேற்கொண்டு வருகிறது.. இந்த யாத்திரைக்கு எதிர்க்கட்சிகள் போலவே சீமானும் கடுமையாக விமர்சித்திருந்தார்.

 அரசியல்

அரசியல்

"இந்த பாஜகவுக்கு என்ன தெரியும்.. அவங்களுக்கு அரசியல் செய்வதற்கு ஒன்னும் இல்லை.. தெரிந்ததெல்லாம் மதம், மாடு, சாணி, பாகிஸ்தான் இதுதான்.. அயோத்தியில் ராமரை வைத்து அரசியல் செய்ததுபோல, கேரளாவில் ஐயப்பனை வைத்து அரசியல் செய்யலாம் என்று முயற்சி பண்ணினாங்க.. தோத்து போய்ட்டாங்க.. இப்போ தமிழ்நாட்டில் முருகனைக் கையிலெடுக்கிறார்கள்.

 சீமான் முகம்

சீமான் முகம்

இத்தனை வருஷமா முருகனை தொடாமல், இப்போ ஏன் கையிலெடுக்கிறார்கள் தெரியுமா... எனக்கு பயந்துதான். இவங்க என்னதான் வேல் எடுத்து "அரோகரா" போட்டாலும், "வெற்றி வேல், வீர வேல்" என்று கத்தினாலும், "முருகா" என்று சொன்னாலே இந்த சீமான் முகம்தான் ஞாபகத்துக்கு வரும்" என்று கூறியிருந்தார்.

 அனுமதி

அனுமதி

அதுமட்டுமல்ல, "நான் அன்னைக்கு யாத்திரை போனேனே.. எனக்கு யாராவது அனுமதி தந்தாங்களா? என்னை 100 அடியாவது நடக்க விட்டீங்களா.. இப்போ பாஜகவை மட்டும் ஏன் அனுமதிக்கணும்" என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.

 நடைபயணம்

நடைபயணம்

இந்நிலையில், சீமான் தலைமையில் பழனியில் நாளை வேல் நடைபயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது.. ஆனால், இந்த வேல் நடைபயணத்திற்கு, பழனி எஸ்பி அலுவலகம் அனுமதி மறுத்தது. இதனால் இதை எதிர்த்து கஜா என்பவர் மதுரை ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் உரிய கட்டுப்பாட்டுடன் வேல் நடைபயணத்தை நடத்த அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார்.

 ஒத்திவைப்பு

ஒத்திவைப்பு

ஆனால், கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் உள்ளதால் நடைபயணத்துக்கு அனுமதி தர முடியாது என்று திண்டுக்கல் மாவட்ட எஸ்பி தரப்பில் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, நாம் தமிழர் கட்சியின் வேல் நடைபயணத்திற்கு அனுமதி வழங்கமுடியாது என உறுதியாக தெரிவித்துவிட்டதுடன், இந்த வழக்கை ஜனவரி மாதத்திற்கும் ஒத்திவைத்தார்.

English summary
Madurai HC refuesd to permission for Seemans Palani Vel yatra
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X