சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இதெல்லாம் எங்கே போயி முடியுமோ.. விவசாயம் செய்யணுமாம்.. மதுரையில் இருந்து கைலாசத்துக்கு பறந்த லெட்டர்

கைலாயத்தில் விவசாயம் செய்ய அனுமதி கேட்டு மதுரை நபர் கடிதம் எழுதி உள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: "இதெல்லாம் எங்கே போயி முடிய போகுதோ" என்று நொந்து கொள்கிறார்கள் தமிழக மக்கள்.. ஏற்கனவே ஒருத்தர் கைலாசாவில் ஓட்டல் நடத்த அனுமதி கேட்டிருந்த நிலையில், இன்னொரு மதுரைவாசி நித்யானந்தாவுக்கு லெட்டர் எழுதி உள்ளார்.. அதில் கைலாசாவில் விவசாயம் நடத்த அனுமதி வேண்டும் என்று கேட்டுள்ளார்.

"கைலாசா" என்ற தனிநாட்டை நித்யானந்தா உருவாக்கி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார்... இது சம்பந்தமாக அடிக்கடி வீடியோவில் தோன்றி பல்வேறு புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறார்.

தன்னுடைய கைலாசா நாட்டின் பொருளாதார மேம்பாட்டு அறிவிப்பாக புதிய நாணயங்களையும், பணத்தையும் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று வெளியிட்டார்... அந்த கைலாசா நாட்டில் நாணயங்களாக பொற்காசுகள்தான் இருக்குமாம்.

நித்தியானந்தா சீரியஸாவே இறங்கிட்டாரு.. நாம காமெடி பண்ணலாமா.. வாங்க! கூடமாட ஒத்தாசைக்கு! நித்தியானந்தா சீரியஸாவே இறங்கிட்டாரு.. நாம காமெடி பண்ணலாமா.. வாங்க! கூடமாட ஒத்தாசைக்கு!

 நித்தியானந்தா

நித்தியானந்தா

இதனிடையே, மதுரை டெம்பிள்சிட்டி ஓட்டல் ஓனர் என்பவர், நித்யானந்தாவிற்கு ஒரு லெட்டர் எழுதியிருந்தார். அதில், கைலாசா நாட்டில் ஓட்டல் வைக்க அனுமதி தேவை என்று கேட்டிருந்தார்.. அந்த லெட்டரும் சோஷியல் மீடியாவில் வைரலானது. இதையடுத்து கொஞ்ச நேரத்திலேயே, நித்யானந்தா வீடியோவில் லைவ்-ஆக தோன்றி பேசினார்.

பிச்சை

பிச்சை

தன் நாட்டில் தொழில் தொடங்க அனுமதி கேட்டுள்ளதால், அதற்கு முன்னுரிமை தருமாறு, கைலாசா நாட்டை நிர்வகிக்கும் சன்னியாசிகளுக்கு உத்தரவிடுகிறேன். மதுரை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்குமாறு சட்டத்தில் வைத்து விடுகிறேன்.. எனது உடலில் உள்ள ரத்தம், உயிர் ஆகியவை இந்த 3 ஊர்க்காரர்கள் போட்ட பிச்சை" என்றெல்லாம் சொல்லி இருந்தார்.

 கைலாசா

கைலாசா

இந்நிலையில், திரும்பவும் மதுரையில் இருந்து ஒரு லெட்டர் கைலாசாவுக்கு போயுள்ளது.. அதாவது நித்யானந்தாவிடம், கைலாசாவில் விவசாயம் செய்ய ஒருவர் அனுமதி கேட்டுள்ளார்.. அவர் பெயர் பாண்டிதுரை.. மதுரை முல்லைநகரை சேர்ந்தவர்.. அந்த லெட்டரில் "நித்யானந்தா சாமிஜி அவர்கள், அதிபர், கைலாய தேசம்" என்று எழுதியிருக்கிறார்.

 இயற்கை விவசாயம்

இயற்கை விவசாயம்

"சாமிஜி நான் பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்து வரும் குடும்பத்தில் பிறந்தவன்.. பொறியியல் படித்து, தற்போதும் இயற்கை விவசாயம் செய்து வருகிறேன்.. தாங்கள் உருவாக்கியுள்ள கைலாய தேசத்தில் மதுரை மக்களக்கு முன்னுரிமை தருவதாக தங்களின் பேட்டியில் கண்டேன்.. நான் மதுரை மண்ணின் மைந்தன் என்பதால் தங்களின் கைலாய தேசத்தில் இயற்கை விவசாயம் செய்ய அனுமதி கோருகிறேன் என்று எழுதி உள்ளார்.. இந்த லெட்டரும் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

பரபரப்பு

பரபரப்பு

ஏற்கனவே, போலீசாரால் தேடப்பட்டு வரும் குற்றவாளியிடம் ஹோட்டல் நடத்த அனுமதி தரக்கோரி குமார் என்பவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.. அந்த புகார்விரைவில் விசாரிக்கப்பட உள்ளது.. இந்நிலையில், பாண்டித்துறையும் கைலாசாவிற்கு இப்படி ஒரு கடிதம் எழுதி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

English summary
Madurai man seeks permission from Nithyananda to start agriculture in Kailasa
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X