சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"தோழர்.. சுடு தண்ணீர் குடிச்சிட்டே இருங்க.. ஒன்னும் ஆகாது".. வெங்கடேசன் நலம் பெற மக்கள் வாழ்த்து!

மதுரை எம்பி வெங்கடேசனுக்கு தொற்று உறுதியாகி உள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: "தோழர்.. சுடு தண்ணீர் குடிச்சிட்டே இருங்க.. நீர் சத்து குறைவது தான் பாதிப்பிற்கான முதற்படி... உங்களுக்கு எதுவும் ஆகாது.. நலமுடன் வீடு திரும்ப வேண்டுகிறோம்" என்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள மதுரை எம்பி வெங்கடேசனுக்கு மாவட்ட மக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமெடுக்கும் முன்பேயே, மதுரையில் தீவிரமான கண்காணிப்பையும், தடுப்பு நடவடிக்கையையும் மேற்கொண்டவர் எம்பி வெங்கசேடன்.. அன்று, மாவட்ட மக்களுக்கு டெஸ்ட் செய்ய கிட் இல்லாமல் தவித்தபோது, உடனடியாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியவர்.

"மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொரோனா கண்டறியும் சோதனை மையத்துக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்து 10 நாட்கள் ஆகிவிட்டது.. ஆனால் இப்பொழுது வரை அதற்கான RTPCR சோதனை கிட் எதுவும் வழங்கப்படவே இல்லை" என்று லெட்டர் எழுதி அதற்கான நடவடிக்கையை அதிரடியாக எடுத்தவர்.

மதுரை எம்பி சு. வெங்கடேசன் கொரோனா தொற்றால் பாதிப்பு.. தோப்பூர் மருத்துவமனையில் அனுமதி மதுரை எம்பி சு. வெங்கடேசன் கொரோனா தொற்றால் பாதிப்பு.. தோப்பூர் மருத்துவமனையில் அனுமதி

 அதிரடி

அதிரடி

அதேபோல, சென்னையில் மட்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது, மதுரைக்கும் தளர்வு வேண்டும், நிறைய பேர் எங்கள் மாவட்டத்தில் பாதிக்கப்படட்டுள்ளனர் என்று குரல் எழுப்பி, போராட்டமும் நடத்தி, அதன்படியே மதுரை மாவட்டத்துக்கு ஊரடங்கை அமல்படுத்த காரணமாக இருந்தவர்.

 ஊரடங்கு

ஊரடங்கு

அதுமட்டுமல்ல, ஊரடங்கால் வீட்டில் முடங்கியுள்ள மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் ஏப்ரல் 2 முதல் 11-ம் தேதி வரை மதுரை மாவட்ட மாணவர்களுக்கான கலை, இலக்கியப் போட்டிகளை நடத்தி அவர்களை ஊக்குவித்தவர். இப்படி கொரோனா காலத்தில் மாவட்டத்துக்கு இவர் செய்த காரியங்கள் ஏராளம்.

 அதிர்ச்சி

அதிர்ச்சி

இந்நிலையில், இவரே தொற்றுக்கு ஆளாகி உள்ளது பெருத்த அதிர்ச்சியை தந்து வருகிறது. வெங்கடேசன் மட்டுமல்லாமல் அவரது மனைவி, ஒரு மகள் மட்டும் மற்றொரு உறவினர் ஆகிய மூவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்... வெங்கடேசனுடன் தொடர்பு கொண்டவர்களில் 24 பேர் கண்டறியப்பட்டு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

 வெங்கடேசன்

வெங்கடேசன்

நேற்று வெங்கடேசன் தன்னுடைய ட்விட்டர் பதிவில், "இன்று எனக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தோப்பூரில் உள்ள அரசு நுரையீரல் நெஞ்சக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளேன். நலமுடன் இருக்கிறேன்" என்று தெரிவித்திருந்தார்.

 பிரார்த்தனைகள்

பிரார்த்தனைகள்

இதற்கு "தோழர்.. சுடு தண்ணீர் குடிச்சிட்டே இருங்க.. நீர் சத்து குறைவது தான் பாதிப்பிற்கான முதற்படி... நலமுடன் வீடு திரும்ப வேண்டுகிறோம் என்று வெங்கடேசனின் ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்கள்.. மேலும், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்து, அரசு மருத்துவமனை மீது நம்பிக்கை வர வைக்க வேண்டிய நிலையில் இருக்க வேண்டிய அமைச்சர்கள், அதை நிறைவேற்ற தவறும் இந்த கால கட்டத்தில், அதை மீண்டும் மீண்டும் செய்து காட்டும் கம்யூனிஸ்ட் தோழர்களுக்கு வணக்கங்கள் என்று பதிவிட்டுள்ளனர்.

 வாழ்த்து

வாழ்த்து

அதுமட்டுமல்ல, "எளிமையான உங்கள் வாழ்க்கையில் கொரோனா நோய் உங்களை ஒன்றும் அணுகாது.. கொரோனாவை மீண்டு வாருங்கள்.. இறைவன் அருளால் நலம் பெற வேண்டி பிரார்த்தனை செய்கிறோம் என்றும் வெங்கடேசனுக்கு வாழ்த்துக்களை திரண்டு சொல்லி வருகின்றனர்.

English summary
Madurai MP Su Venkatesan tested positive for Coronavirus
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X