சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வசந்தி செய்த காரியத்தை பார்த்தீங்களா.. தடுமாறிய புத்தி.. போலீசில் வசமாக சிக்கிய பெண் இன்ஸ்பெக்டர்

மதுரையில் பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: அதுவரை கறாராக பேசி கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் வசந்திக்கு, பணத்தை பார்த்ததும் திடீரென சபலம் புகுந்து கொண்டது.. விளைவு, போலீசில் அசிங்கப்பட்டு நிற்கிறார்..!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்தவர் அர்ஷத்.. இவர் பேக் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். இவர் மதுரை எஸ்பி பாஸ்கரனிடம் ஒரு புகார் தந்தார். அதில் உள்ள சுருக்கம் இதுதான்:
"வில்லாபுரத்தில் பேக் கம்பெனியில் டெய்லராக வேலை பார்த்து வந்தேன்.. தனியாக தொழில் செய்ய உறவினர்களிடம் கடன் வாங்கி பத்து லட்ச ரூபாயுடன், பாண்டி என்பவரிடம் மேலும் கடன் பெற கடந்த 5-ம் தேதி நாகமலை புதுக்கோட்டைக்கு சென்றேன். வீட்டில் போய் பணத்தை எடுத்து வருவதாக சொன்ன பாண்டி என்னை அங்கே இருக்க சொல்லிவிட்டு போனார்.

கோவை, நீலகிரியில் மிதமான மழை... ஆக.2 வரைக்கும் தென் கடலோர மாவட்டங்களில் லேசான மழை கோவை, நீலகிரியில் மிதமான மழை... ஆக.2 வரைக்கும் தென் கடலோர மாவட்டங்களில் லேசான மழை

பணம்

பணம்

அந்த நேரம் அங்கு இன்ஸ்பெக்டர் வசந்தி வந்தார்.. நான் வைத்திருந்த பத்து லட்சத்தை பறித்துக் கொண்டு, "நாளை ஸ்டேஷனுக்கு வந்து வாங்கிட்டு போ" என்று சொன்னார்.. மறுநாள் போய் கேட்டதற்கு, "உன் பையில் பணம் இல்லையே.. வெறும் ஸ்கூல் புத்தகம்தான் இருந்தது.. இனி இங்கு வராதே, பணத்தை பற்றி பேசினால் கஞ்சா கேஸ் போட்டுவிடுவேன்" என்று மிரட்டினார்.

 விசாரணை

விசாரணை

என் பணத்தை மீட்டு இதன் பின்னணியில் இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்" அந்த மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார். இதையடுத்து எஸ்பி, இந்த புகார் குறித்து விசாரிக்க உத்தரவிட்டார்.. விசாரணையில் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக சிலர் சொன்னதை நம்பி அர்ஷத் பணத்துடன் நாகமலை புதுக்கோட்டை வந்துள்ளார்.

 வழக்கு

வழக்கு


இந்த விஷயத்தை மோப்பம் பிடித்து கொண்ட இன்ஸ்பெக்டர் வசந்தி, கூட்டாளிகளான உக்கிரபாண்டியன், பால்பாண்டி, கார்த்திக், பாண்டியராஜாவுடன் சேர்ந்து கொண்டு பணம் பறிக்க பிளான் செய்தது தெரிய வந்தது.
இப்போது இவர்கள் 5 பேர் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது.. வசந்தி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்..

 சஸ்பென்ட்

சஸ்பென்ட்

அதாவது சட்ட விரோத செயல் என்பதால் பாதிக்கப்படும் நபர்கள் கூட புகார் அளிப்பதில்லை.. இதுதான் வசந்திக்கு சாதகமாகிவிட்டது.. எப்படியும் இவர்கள் மேலதிகாரி வரை சென்று புகார் தர மாட்டார்கள் என்பதால், வசந்திக்கு அபேஸ் செய்ய தைரியம் வந்துள்ளது.. இப்போது மோசடி கும்பலுடன் கைதாகி, காவல்துறையில் களங்கப்பட்டு நிற்கிறார்.

English summary
Madurai Women Inspector suspended for cheating case
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X