சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அப்ப அவரு செஞ்சது சரி.. இப்ப இவரு செய்வது மட்டும் தவறாக்கும்.. என்னங்க நியாயம் இது.. எச்.ராஜா கேள்வி

சரத்பவாரின் அன்றைய அரசியல் குறித்து ட்வீட் போட்டுள்ளார் எச்.ராஜா

Google Oneindia Tamil News

சென்னை: மஹாராஷ்டிராவில் மீண்டும் பாஜக ஆட்சியை பிடித்தற்கு, 1978-ல் நடந்த ஒரு சமாச்சாரத்தை சொல்லி.. எச்.ராஜா ஒரு வித விளக்கத்தை தந்துள்ளார். அன்று சரத் செய்தது சரி என்றால், இன்று அஜித் செய்ததும் சரிதான் என்றும் எச்.ராஜா ட்வீட் போட்டு சொல்லி உள்ளார்.

மஹாராஷ்டிராவில் இன்று காலை திடீர் திருப்பமாக பாஜக அரியணையில் ஏறியது.. அஜித்பவார் ஆதரவுடன் திரும்பவும் ஆட்சியை தக்க வைத்தது. இது சரத்பவார், உத்தவ் தாக்ரேவுக்கு கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதுடன், இந்த அரசியல் நிகழ்வு நாடு முழுவதும் உற்று நோக்கப்பட்டு சலசலக்கப்பட்டு வருகிறது.

புதிய முதல் பட்னாவிசுக்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா வாழ்த்தியும், சிவசேனாவை இடித்தும் அடுத்தடுத்த ட்வீட்களை காலையில் போட்டிருந்தார்.

பெரும்பான்மை

பெரும்பான்மை

"தனிப்பெரும் கட்சியாக உள்ள பாஜகவிற்கு மகாராஷ்டிரத்தில் நிலையான ஆட்சி அளிக்க வேண்டிய கடமை உள்ளது.மேலும் உடனடியாக தேர்தல் வருவதையும் தவிர்க்க வேண்டும். தனது கடமையை சரியாக நிறைவேற்றி முதல்வர் பொறுப்பேற்றுள்ள திரு பட்னவிஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்" என்றும், "மகாராஷ்டிராவில் 105 ஐ விட 56 பெரியது என்று வாதிட்ட கணிதமேதைகளுக்கு நல்ல பாடம் கற்பிக்கப் பட்டுள்ளது" என்றும் ட்வீட் பதிவிட்டிருந்தார்.

கேலிக்கூத்து

கேலிக்கூத்து

எனினும், சிவசேனா, தேசியவாத காங்.கூட்டணி கட்சி சார்பில் பாஜக மீது கடுமையான குற்றச்சாட்டுகள் முன் வைத்தன.. "ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கி விட்டது பாஜக, தேர்தலே தேவையில்லை என்ற நிலையை உருவாக்கி வருகிறது, தனிமனித ஆதிக்கம், சுயநல எண்ணம், நாற்காலி ஆசை" என உத்தவ் தாக்கரேவும், சரத்பவாரும் பாஜக மீது பாய்ச்சலை வெளிப்படுத்தி இருந்தனர்.

ஜனசங்கம்

இதையடுத்து, எச்.ராஜா திரும்பவும் ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில், "1978 ல் 37 எம்.எல்.ஏ க்களுடன் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி ஷரத்பவார் அவர்கள் ஜனசங்கம் உள்ளிட்ட ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து முதல்வரானார். அன்று ஷரத்பவார் செய்தது தவறில்லை என்றால் இன்று அஜித் பவார் செய்ததை ஷரத்பவார் எப்படி குறைகூற முடியும்" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

கமெண்ட்கள்

எச்.ராஜாவின் இந்த ட்வீட்டுக்கு வழக்கம்போல், ஆதரவும், எதிர்ப்பும் என கமெண்ட்கள் குவிந்து வருகின்றன. அதில் ஒருசில ட்வீட்கள் இவை: "என்னைப் பொறுத்த வரையில் பிஜேபிதான் குற்றம் செய்துள்ளது."

சரி பாருங்கள்

"ஐயா ராஜா அவர்களே ஒரு வரலாற்று செய்தியை பதிவிடும் முன்பு வருடம் தேதியை ஒரு முறைக்கு இரு முறை சரிபாருங்கள். சரத்பவார் மகாராஷ்ட்ரா காங்கிரசை பிளவுபடுத்தியது 1999ம் வருடம் தான். நீங்கள் கூறியது போல் 1978ல் அல்ல. அப்போது நான் பிறக்கவேயில்லை"

English summary
maharashtra govt: h raja comments on maharashtra political twist and tweet about sarath pawar
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X