சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காத்திருக்கட்டும்.. சிவசேனாவை வேண்டுமென்றே அலைய விடும் சோனியா.. சரத் பவாரிடம் சொன்னது இதுதான்!

மகாராஷ்டிராவில் பல்வேறு அரசியல் திட்டங்களை மனதில் வைத்து சிவசேனாவை வேண்டும் என்றே காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அலைய விடுவதாக கூறப்படுகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. திருப்பத்திற்காக காத்திருக்கும் மகாராஷ்டிரா!

    மும்பை: மகாராஷ்டிராவில் பல்வேறு அரசியல் திட்டங்களை மனதில் வைத்து சிவசேனாவை வேண்டும் என்றே காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அலைய விடுவதாக கூறப்படுகிறது. சிவசேனாவை தனித்துவிட வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் இப்படி செய்கிறது என்கிறார்கள்.

    மகாராஷ்டிரா அரசியலில் பிரச்சனை இப்போதைக்கு முடியுமா என்று தெரியவில்லை. அங்கு ஆட்சி அமைக்க இருந்த வாய்ப்பை பாஜக, சிவசேனா இரண்டு கட்சிகளும் நழுவவிட்டுவிட்டது.

    அதேபோல் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியும் சிவசேனாவிற்கு தங்கள் ஆதரவை தெரிவிக்கவில்லை. இதனால் அங்கு தொடர்ந்து அரசியல் இழுபறி நீடித்து வருகிறது.

    பாஜகவுக்கு தாவிய மாஜி எம்எல்ஏ மீது செருப்பு வீச்சு.. குடும்பத்தாரும் தப்பவில்லை.. கர்நாடகாவில் ஷாக்பாஜகவுக்கு தாவிய மாஜி எம்எல்ஏ மீது செருப்பு வீச்சு.. குடும்பத்தாரும் தப்பவில்லை.. கர்நாடகாவில் ஷாக்

    அரசியல் வல்லுநர்கள்

    அரசியல் வல்லுநர்கள்

    இந்த நிலையில் சிவசேனா உடன் கூட்டணி வைக்காமல் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் காலம் தாழ்த்த இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கிறது என்று அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். அதனால் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் எம்பிக்கள் பலர் சிவசேனா உடன் கூட்டணி வைக்க வேண்டாம். அது எதிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.

    நம்ப மாட்டார்கள்

    நம்ப மாட்டார்கள்

    மக்கள் நம்மை நம்ப மாட்டார்கள். தேர்தலை சந்திக்கலாம். தேர்தலை சந்தித்தால் கண்டிப்பாக வெற்றிபெறலாம் என்று கூறி உள்ளனர். சிவசேனாவிற்கு காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஓகே சொல்லாமல் இழுத்தடிக்க இதுதான் காரணம் என்று கூறுகிறார்கள்.

    அவசரம் வேண்டாம்

    அவசரம் வேண்டாம்

    அதே சமயம் சோனியா காந்தி இன்னொரு விஷயத்திற்காகவும் சிவசேனாவிற்கு பதில் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். சிவசேனா உடன் இப்போது கூட்டணி வைத்தால் எப்படியும் எதிர்காலத்தில் முறிந்துவிடும். அதனால் அவசர பட வேண்டாம்.

    முடிந்த வரை காத்திருப்பு

    முடிந்த வரை காத்திருப்பு

    அதே போல் சிவசேனாவை வேண்டாம் என்று சொல்லிவிட்டால் அவர்கள் மீண்டும் பாஜகவுடன் சமாதானம் ஆகி, ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது. அதற்கு வழி விட கூடாது. சிவசேனாவிற்கு இப்போது பதில் சொல்லாமல் முடிந்த அளவு காலம் தாழ்த்த வேண்டும். முடிந்த அளவு அவர்களை காத்திருக்க வைக்க வேண்டும்.

    பாஜக கதவு

    பாஜக கதவு

    அவர்களுக்கு மொத்தமாக பாஜகவின் கதவு மூடிய பின்தான் நம்முடைய நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்று சோனியா காந்தி முடிவு செய்துள்ளார் என்கிறார்கள். சிவசேனாவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சிக்கு விருப்பம் இல்லை. ஆனாலும் அக்கட்சியை அலையவிட்டு, பின் தனித்துவிட வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் பிளான் போட்டுள்ளது.

    ஆலோசனை

    ஆலோசனை

    இதை பற்றித்தான் நேற்று சரத் பவார், சோனியா காந்தி இருவரும் பேசிக்கொண்டதாக தெரிவிக்கிறார்கள். இதனால்தான் சிவசேனாவிடம் ''பொறுத்திருங்கள், ஆலோசனை செய்கிறோம்'' என்று காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தொடர்ந்து கூறி வருகிறது.

    நன்மை

    நன்மை

    மகாராஷ்டிராவில் பாஜகவின் கதவு மொத்தமாக மூடப்பட்டால் சிவசேனா தனி கட்சியாக, வலிமை இல்லாத கட்சியாக மாறும். அதேபோல் பாஜகவும் சிவசேனா இல்லாமல் வலிமையை இழக்கும். இதனால் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் பெரிய அளவில் பலன் அடையும், அதுதான் சோனியாவின் திட்டம் என்று கூறுகிறார்கள்.

    English summary
    Maharashtra political crisis: What is Sonia Gandhi's plan with Shiv Sena party?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X