சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"பைத்தியம், உனக்கு ஒரு கவுன் வாங்கிட்டு வரட்டுமா?".. அப்பாடா சிரிச்சுட்டே.. காந்தியின் அன்பு!

மகாத்மா காந்தியின் நினைவுநாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது

Google Oneindia Tamil News

சென்னை: இந்த உலகமே இன்னும் இயங்கி கொண்டிருக்கிறது என்றால் அது "அன்பு என்ற ஒற்றை சொல் மந்திரத்தால்தான்.. அப்படிப்பட்ட இந்த அன்பில் எந்நேரமும் கட்டுண்டு கிடந்தவர் நம் மகாத்மா காந்தியடிகள்..!

வாழ்க்கையில், அன்பானவர்களுக்கு, புரிதலுடன் கூடிய அன்பு நிறைந்த துணையே கிடைத்துவிட்டால், அதைவிட வேறு என்ன பாக்கியம் இருந்து விடபோகிறது?! அப்படி காந்திக்கு கிடைத்தவர்தான் கஸ்தூரிபாய்..! இவர்களது கண்ணிய காதல்.. புனித காதல்.. எல்லையில்லா காதல்..!

"இந்த கஸ்தூரிக்கு தினமும் நாலு எழுத்து சொல்லி தரணும்.. அவளுக்கு அறியாமை மட்டும் போய்விட்டால், கணவனிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்" என்று தெரிந்து கொள்வாள் என்று சிரித்து கொண்டே சொல்வாராம் காந்தி. ஆரம்ப காலங்களில் தீய நண்பர்கள் யாராவது காந்தியிடம் பேசினால், "இதோ பாருங்க, நான் சொல்றேன்னு கோவிச்சக்கூடாது.. அவன் ஒரு அயோக்கியன், போக்கிரி.. அந்த சகவாசகத்தை விட்டுடுங்களேன்" என்று கஸ்தூரி வேண்டுகோள் விடுப்பாராம்.. பின்னாளில் கஸ்தூரி சொன்ன அந்த வார்த்தையை மகாத்மா மனசார உணர்ந்துள்ளார்.

எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு மதுரை அருகே பிரமாண்ட கோவில்.. முதல்வர் திறந்து வைத்தார்! குவிந்த தொண்டர்கள்எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு மதுரை அருகே பிரமாண்ட கோவில்.. முதல்வர் திறந்து வைத்தார்! குவிந்த தொண்டர்கள்

புடவை

புடவை

ஒருமுறை, வழக்கு ஒன்றிற்காக தென்னாப்பிரிக்காவுக்கு காந்தி செல்ல தயாரானார்.. அப்போது மனைவியிடம், "உனக்கு என்ன வேண்டும் சொல், தென்னாப்பிரிக்காவிலிருந்து வாங்கி வர்றேன்" என்று கேட்டார். அதற்கு அவர், 'ஒரு நல்ல புடவை வாங்கிட்டு வாங்களேன்" என்றாராம். அதற்கு காந்தி, "பைத்தியம், இங்கே இல்லாத புடவையா? உனக்கு ஒரு கவுன் வாங்கிட்டு வரட்டுமா? உனக்கு அழகா இருக்கும்" என்றாராம்.. அதைக் கேட்டு கஸ்தூரிபாய்க்கு வெட்கமும், சிரிப்பும் மாறி மாறி வந்ததாம்.. "அப்பாடா, நீ சிரிச்சிட்டே.. அது போதும்.. நான் போய்ட்டு வரேன்" என்று சொல்லிவிட்டு கிளம்பினாராம் காந்தி.

கூட்டம்

கூட்டம்

ஒருமுறை பம்பாய் சிவாஜி பூங்காவில் மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்றில் மகாத்மா காந்தி கலந்து கொள்வதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அதற்கு முதல்நாள், அதாவது 1942 ஆகஸ்ட் 9-ம் தேதியன்று அவர் கைது செய்யப்பட்டார். அதனால், அடுத்த நாள் நடைபெறவிருந்த முக்கியமான கூட்டத்திற்கு யார் தலைமையேற்பது என்ற கேள்வி எழுந்தது.. வேறு தலைவர்களும் பம்பாயில் அப்போது இல்லை.. அந்த நெருக்கடியான நேரத்தில், "ஏன் கவலைப்படறீங்க? நான் கூட்டத்தில் பேசுகிறேன்" என்று முன்வந்தார் கஸ்தூரி பாய்.

கூட்டம்

கூட்டம்

அனைவரும் இதை கேட்டு அதிர்ந்து போனார்கள்.. காரணம், இதுக்கு முன்னாடி கஸ்தூரி பாய் எந்த பெரிய கூட்டத்திலும் உரையாற்றியதே இல்லை.. அதுமட்டுமல்ல, அந்த நேரத்தில் கஸ்தூரியின் உடம்பு ரொம்ப மோசமாக இருந்தது. இறுதியில், ஒன்றரை லட்சம் பேர் கூடியிருந்த சபையில் உரையாற்றினார் கஸ்தூர்பா... கஸ்தூரிபாய் உணர்ச்சியுடன் பேச பேச, மக்கள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தபடியே இருந்தது.

 உடல்நிலை

உடல்நிலை

இதற்கு பிறகு கஸ்தூர்பா கைதாகி, காந்தி இருந்த சிறைக்கே கொண்டு செல்லப்பட்டார்.. சிறையில் கஸ்தூரிக்கு உடல்நிலை மேலும் மோசமாகிவிட்டது.. படுத்த படுக்கையானார்.. அடிக்கடி காந்தி சென்று கஸ்தூரியை பார்த்துவிட்டு போனார்.. அவரது கட்டிலுக்கு பக்கத்தில் ஒரு சிறிய மரத்திலான ஒரு மேசையை காந்தியே உருவாக்கி தந்தார்.. அதில் தான் தட்டில் வைத்து சாப்பிடுவாராம் கஸ்தூரிபாய்.. அவர் இறந்த பிறகுகூட, மனைவி ஞாபகம் வரும்போதெல்லாம் அந்த மர மேசையையே வெறித்து வெறித்து பார்த்து கொண்டிருப்பாராம் காந்தி.. எங்கே போனாலும் அந்த சிறிய மேசையை கையோடு இறுக்கி அணைத்து, எடுத்து கொண்டு செல்வாராம்.

 கண்ணாடி வளையல்கள்

கண்ணாடி வளையல்கள்

கஸ்தூரிபாய் எப்போதுமே தன்னுடைய வலது கையில் 5 கண்ணாடி வளையல்களை அணிந்திருப்பாராம்.. கல்யாணம் ஆனதில் இருந்தே இந்த வளையல்களை அணிந்துள்ளார்.. அவரது உடலை தகனம் செய்துவிட்டு, 4வது நாள், மகன்கள் அம்மாவின் அஸ்தியை சேகரிக்க சென்றிருக்கிறார்கள்.. அப்போது கஸ்தூரிபா உடல் முழுவதும் சாம்பாலாகி விட்டிருந்தது.. ஆனால், அவர் கையில் இருந்த அந்த 5 கண்ணாடி வளையல்கள் மட்டும் அப்படியே பளிச்செனெ மின்னியதாம்.. இதை கேள்விப்பட்ட காந்தி, "அம்மா நம்ம கூடவே தான் இருக்கிறாள்" என்று சொல்லும்போது நா தழு தழுத்து போய்விட்டது..! எவ்வளவு வலிமை மிக்க பிரச்சனைகளை கையாளும் இந்த மனசுதான், "அன்பு" என்ற ஒரு புள்ளியில் எங்காவது, யாரிடமாவது தோற்று கொண்டே தான் இருக்கிறது...!

English summary
Mahatma Gandhi Memorial Day
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X