• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

"லெப்ட்" சிக்னல் போட்டு "ரைட்"டில் புக திட்டமிடும்.. மெகா "புள்ளியை" தட்டி தூக்க ரெடியாகும் பாஜக..!

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவா? திமுகவா? யார் இந்த புள்ளியை தட்டி தூக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்புகள் பெருகி கொண்டிருக்கும்போது, திடீரென பாஜக முந்தி கொண்டுள்ளது.. கோவை பிரபலத்தை தங்கள் பக்கம் இழுக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

கடந்த முறை எம்பி தேர்தலில் மநீம வேட்பாளர் மகேந்திரனுக்கு ஒரு லட்சத்து 44 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று 3வது இடத்தை பிடித்திருந்தார்.. தபால் ஓட்டுக்களிலும் மகேந்திரனுக்கு மூன்றாம் இடமே கிடைத்தது.

கோவை தொகுதியில் மநீமய்யத்துக்கு ஓரளவு ஆதரவு தளமும், தொழிலதிபர்கள், இளைஞர்கள் நகர்ப்புற வாக்குகள் என இருந்தாலும், மகேந்திரனுக்கென்று தனிப்பட்ட அளவுக்கு ஓட்டு வங்கியும் இருக்கத்தான் செய்கிறது.

 கருணாநிதிக்கு புகழாரம்.. ஆச்சரியப்படுத்திய மாஜி மநீம மகேந்திரன்.. திமுகவுக்கு துண்டு போடுகிறாரா! கருணாநிதிக்கு புகழாரம்.. ஆச்சரியப்படுத்திய மாஜி மநீம மகேந்திரன்.. திமுகவுக்கு துண்டு போடுகிறாரா!

செல்வாக்கு

செல்வாக்கு

இவர் ஒரு முக்கிய தொழிலதிபர்.. மகேந்திரனுக்கென தனிப்பட்ட செல்வாக்கு படைத்த "பசையுள்ள" கூட்டம் ஒன்று இருக்கிறது.. மேலும், தேர்தல் என்று வந்தால் பணத்தை தண்ணீராய் இறைக்கும் சக்தி படைத்தவர் என்பதெல்லாம் இவருடைய பிளஸ் பாயிண்ட்கள்.. இதனிடையே, கோவைக்கான செயல்திட்டத்தை வெளியிட்டு, அதை எத்தனை நாட்களுக்குள் எப்படி செயல்படுத்துவோம் என்று மகேந்திரன் தந்த வாக்குறுதிகள் போன்றவை, மகேந்திரனின் மதிப்பை வேறு தளத்துக்கு கோவையில் எடுத்து சென்றது.

அதிர்ச்சி

அதிர்ச்சி

மகேந்திரனுக்கே இவ்வளவு வாக்குகள் விழுமென்றால், கட்சி தலைவரான தனக்கு மேலும் அதிகமாக விழும் என்று கமலும் ஒரு கணக்கு போட்டார்.. அத்துடன் மீடியா வெளிச்சமும் சேர்ந்து கொண்டது.. எனினும் கமல் அதிர்ச்சி தோல்வியை தழுவினார்... இந்த ஷாக்கை கமல் ஜீரணிக்கும் முன்பேயே, மகேந்திரன், இன்னொரு ஷாக்கை கமலுக்கு தந்துவிட்டு, கமலையும் பலவாறாக விமர்சித்துவிட்டு, கட்சியை விட்டு வெளியே வந்தார்.. அதேசமயம், கமல் பெற்ற வாக்குகளில், கோவையில் மய்யத்துக்கான வாக்கு வங்கியை ஓரளவு பலப்படுத்தி தந்ததில் மகேந்திரனின் பங்கும் அளப்பரியது.

டிமாண்ட்

டிமாண்ட்

பொதுவாக ஒரு கட்சிக்கு, திறமையுள்ள நிர்வாகிகளைவிட பசையுள்ள நிர்வாகிகளுக்கே அதிக டிமாண்ட் இருக்கும்.. அந்த வகையில், கட்சியை விட்டு வெளியே வந்த மகேந்திரனுக்கு, மறுநாளே டிமாண்ட் கூடியது.. திமுக பக்கம் இவர் செல்லக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது..

சலசலப்பு

சலசலப்பு

இதற்கு காரணம், கொங்குவில் திமுகவின் பலம் எடுபடாமலேயே உள்ளதால், மகேந்திரனை கொண்டு கட்சியின் செல்வாக்கை உயர்த்தக்கூடும் என்று சலசலக்கப்பட்டது.. போதாக்குறைக்கு நேற்றைய தினம், கருணாநிதியின் பிறந்தநாளில் அவரை, அளவுக்கு அதிகமாக பாராட்டவும், எப்படியும் திமுக பக்கம்தான் செல்லக்கூடும் என்ற எதிர்பார்ப்பு எகிறியது.

மகேந்திரன்

மகேந்திரன்

ஆனால், இப்போது விஷயம் வேறு மாதிரியாக கசிந்து வருகிறது.. பாஜக முந்திக் கொண்டுள்ளதாம்.. மகேந்திரனை தங்கள் பக்கம் வளைக்க பாஜகவும் முயற்சி செய்கிறதாம்.. கடந்த முறை பாஜகவின் ஓட்டுக்களைதான் இந்த மகேந்திரன் பிரித்தார்.. இந்த முறை, ஆளும் தரப்புக்கு எதிரான வாக்குகளை மய்யம் பிரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த முறையும் பாஜகவின் வாக்குகளைத்தான் மய்யம் சிதறடித்தது.

கணக்கு

கணக்கு

கள நிலவரங்கள் இப்படி இருக்கும்போது மகேந்திரனுக்கு பாஜக வீசுவதாக தகவல்கள் வருவது ஆச்சரியத்தை கிளப்பி வருகிறது. ஏற்கனவே கோவை பகுதியில் பாஜகவுக்கு போதுமான மற்றும் நிலையான செல்வாக்கு இருந்து வருகிறது.. எனவே, மகேந்திரன் போன்றோரின் வருகையால், இருக்கும் செல்வாக்கை மேலும் அதிகரிக்க பாஜக நினைக்கிறது. இப்படி பலத்தை கூட்டுவதால், அது வரப்போகும் எம்பி தேர்தலுக்கு அடித்தளமாக இருக்கும் என்றும் நம்புகிறது.. பாரப்போம்..!

English summary
Mahendran will join in BJP soon, say sources
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X