• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"விட மாட்டேன்.. யாருக்கு சீட் இல்லை.. எனக்கா".. ஆபீஸ் வாசலில் மொட்டையடித்து.. பரபரப்பை கிளப்பிய பெண்

|

சென்னை: "யாரை பார்த்து சீட் இல்லைன்னு சொல்றீங்க" என்று பொங்கிய பெண் ஒருவர், ஒட்டுமொத்த கேரளாவையும் அதிர வைத்துள்ளார்.. ஊரெல்லாம் இதே பேச்சாகத்தான் இருக்கிறது... யார் அவர்? என்ன காரணம்?

  சீட் கிடைக்காத கோபம்… மகளிரணி தலைவியின் செயல்… காங். ஷாக்!

  கேரளாவில் 120 உறுப்பினர்களை கொண்ட அந்த மாநில சட்டப்பேரவைக்கு வரும் 6ம் தேதியன்று தேர்தல் நடக்க போகிறது..ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணியும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும், பாஜகவும் களத்தில் உள்ளன...

  இதில் கேரள காங்கிரஸ் சற்று தடுமாற்றத்துடனேயே பயணித்து வருகிறது.. நாளுக்கு நாள் அங்கு சர்ச்சைகளும், குழப்பங்களும் நடந்து கொண்டே வருகின்றன.. சமீபத்தில்தான் காங்கிரஸின் மூத்த தலைவர் பிசி சாக்கோ ராஜினாமா செய்தார்.

   ராகுல்

  ராகுல்

  அதேபோல, மாநில காங்கிரஸ் செயலாளர் எம்எஸ் விஸ்வநாதன், செயற்குழு உறுப்பினர் கேகே விஸ்வநாதன், மகளிர் காங்கிரஸ் செயலாளர் சுஜயா வேணுகோபால், மாவட்ட பொதுச் செயலாளர் அனில் குமார் என 4 முக்கிய புள்ளிகள் கட்சியில் இருந்து விலகினர்.. இவர்கள் 4 பேருமே, ராகுலின் வயநாடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள்... இந்த அதிர்ச்சியே விலகாத நிலையில்தான் லத்திகா சுபாஷூம் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

  யார் இந்த லத்திகா சுபாஷ்?

  இந்த முறை தங்களுடைய வேட்பாளர் லிஸ்ட்டை காங்கிரஸ் அறிவித்தது... ஆனால், இந்த வேட்பாளர் பட்டியலை பார்த்த பலருக்கும் பெரும் அதிர்ச்சி கிடைத்தது.. காரணம், இந்த முறை கட்டாயம் சீட் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பில் இருந்தவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை...

   லத்திகா சுபாஷ்

  லத்திகா சுபாஷ்

  இப்படி அதிருப்திக்கு உள்ளானவர்களில் ஒருவர்தான் லத்திகா சுபாஷ்... கேரள மகிளா காங்கிரஸ் தலைவராக இருந்தவர்.. பலரை போலவே இவரும் தனக்கு இந்த முறை சீட் கிடைக்கும் என்று மலைபோல நம்பிக் கொண்டிருந்தவர்.. ஆனால் கிடைக்கவில்லை... இதனால் கடும் அதிருப்தி அடைந்த லத்திகா சுபாஷ், கேரள காங்கிரசின் தலைமை அலுவலகத்துக்கு சென்றார்..

   பரபரப்பு

  பரபரப்பு

  அங்கே தனது தலையை மொட்டையடித்தார். இதனால் கட்சி அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெண்களை புறக்கணிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது மகிளா காங்கிரஸ் தலைவி பதவியையும் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். தனக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்பதைவிட, மூத்த தலைவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்ற ஆதங்கமே லத்திகாவின் பேச்சில் வெளிப்படுகிறது..

  பேட்டி

  பேட்டி

  செய்தியாளர்களிடம் இவர் பேசும்போது, "இந்த முறை, 27 வயது பெண்ணுக்கு சீட் தந்திருக்கிறார்கள்.. அதை வரவேற்கிறேன்... ஆனால், பல மூத்த தலைவர்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள்.. இது ஏற்க முடியாதது.. நான் இந்த கட்சிக்காக பல வருஷம் பணியாற்றி வந்திருக்கிறேன்.. கட்சிக்காக உழைத்த பெண்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்.. 20 சதவீதம் வேட்பாளர்களுக்காவது ஒதுக்கீடு வழங்கக் கோரியிருந்தோம்... அதுவும் நடக்கவில்லை.. சிட்டிங் எம்எல்ஏக்களைவிட எனக்கு அதிக அனுபவம் இருக்கிறது.. 16 வருஷம் பாடுபட்டு என்ன பிரயோஜனம்?

   விலகல்

  விலகல்

  ஒவ்வொரு எம்எல்ஏ, எம்பி தேர்தல்களிலும் என்னை போன்ற மூத்த பெண்கள் புறக்கணிக்கப்படுகிறார்களே ஏன்? அதனால் நான் கட்சியில் இருந்து விலகுகிறேன்.. சுயேச்சையாக போட்டியிடலாமா என்றுகூடஇன்னும் முடிவெடுக்கவில்லை.. இன்னொன்றையும் சொல்லி கொள்கிறேன்.. இந்த அதிருப்திக்காக வேற ஒரு கட்சியிலும் சேர மாட்டேன்" என்றார்.

  மொட்டை

  மொட்டை

  லத்திகா இப்படி ஆவேசமாக பேசின கையோடு இன்னொரு பகீர் காரியத்தையும் செய்தார்.. கேரள மகளிர் காங்கிரஸ் ஆபீசின் வாசலிலேயே உட்கார்ந்து தன் தலைக்கு மொட்டை அடித்து கொண்டார்.. அப்போது இதை பார்த்து, உடன் இருந்த மற்ற பெண் நிர்வாகிகள் அதிர்ந்து போய்விட்டனர்.. கண் கலங்கினர்..!

  அவமானம்

  அவமானம்

  இதற்கு காரணம், லத்திகா ரொம்பவும் மென்மையானவராம்.. அதேசமயம் கொள்கைப்பிடிப்பு மிக்கவர் என்றும் சொல்கிறார்கள்.. இப்படி திடுதிப்பென்று மொட்டை அடித்து கொண்டு தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்வார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.. லத்திகா சுபாஷின் இந்த துணிச்சல் நடவடிக்கையை கண்டு, கேரள காங்கிரஸ் கூடாரமே வெலவெலத்து போயுள்ளதுடன், அவமானத்திலும் கூனிகூறுகி கொண்டிருக்கிறது..!

  English summary
  Mahila congress president Lathika Subhash shaved her head
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X