சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லோக்சபாவில் போட்டியிட வாய்ப்பில்லை.. ராஜ்யசபா எம்பி பதவியும் கிடைக்கவில்லை.. மைத்ரேயன் அதிருப்தி

Google Oneindia Tamil News

Recommended Video

    Maithreyan : லோக்சபாவில் போட்டியிட வாய்ப்பில்லை: மைத்ரேயன் அதிருப்தி- வீடியோ

    சென்னை: லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. ராஜ்யசபா எம்பியாகவாவது தேர்வு செய்யப்படுவேன் என நினைத்தேன். அதுவும் கிடைக்கவில்லை. இது மன வருத்தம் அளிக்கிறது என மாநிலங்களவை முன்னாள் எம்பி மைத்ரேயன் தெரிவித்தார்.

    தமிழகத்திலிருந்து அதிமுக சார்பில் மைத்ரேயன், லட்சுமணன், ரத்தினவேல், அர்ஜூனன், இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி ராஜா, திமுக சார்பில் கனிமொழி ஆகியோர் 2013-ஆம் ஆண்டு மாநிலங்களவைக்கு அனுப்பப்பட்டனர்.

    இவர்களது பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் மொத்தம் 6 இடங்களுக்கு அதிமுக சார்பில் சந்திரசேகரன், முகம்மது ஜான், பாமகவின் அன்புமணியும், திமுக சார்பில் வில்சன், சண்முகம், வைகோவும் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    பாலாற்றின் குறுக்கே ஆந்திராவின் தடுப்பணைகள்... தமிழக அரசு மெத்தனம்- வைகோ கண்டனம் பாலாற்றின் குறுக்கே ஆந்திராவின் தடுப்பணைகள்... தமிழக அரசு மெத்தனம்- வைகோ கண்டனம்

    உரை

    உரை

    இந்த நிலையில் நேற்றைய தினம் மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்து பதவி நிறைவடைந்தவர்கள் உரையாற்றினர். அப்போது மைத்ரேயனும் உரையாற்றினார்.

    நிறைவேற்ற வேண்டாம்

    நிறைவேற்ற வேண்டாம்

    அவர் ஜெயலலிதா குறித்து புகழ்ந்து பேசும் போது அழுதார். இந்த நிலையில் ஈழத்தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டதற்கு இரங்கல் தெரிவிக்காத இந்த அவை, நான் உயிரிழந்தால் எனக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற வேண்டாம் என தெரிவித்தார்.

    போட்டியிட வாய்ப்பில்லை

    போட்டியிட வாய்ப்பில்லை

    தொடர்ந்து 3 முறை மாநிலங்களவைக்கு அனுப்பப்பட்ட மைத்ரேயன், சென்னை மெரினாவில் ஜெயலலிதாவின் சமாதியில் அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில் தென் சென்னை மக்களவை தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தேன். ஆனால் அங்கு போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை.

    வருத்தம்

    வருத்தம்

    மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்படுவேன் என நினைத்தேன். ஆனால் எதிர்பார்த்தப்படி அந்த எம்பி பதவியும் கிடைக்கவில்லை. அதிமுக சார்பில் எனக்கு வாய்ப்பு வழங்கப்படாதது வருத்தம் அளிக்கிறது.

    இரட்டை தலைமை

    இரட்டை தலைமை

    ஒற்றைத் தலைமை, இரட்டை தலைமையில் சாதகமும், பாதகமும் உண்டு. கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை என்பது நல்ல முறையில் இருந்தால் ஏற்றுக் கொள்ளலாம் என மைத்ரேயன் தெரிவித்தார்.

    English summary
    Ex Rajyasabha MP Maithreyan says that i am very much disappointed after not getting MP post.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X