சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கவனீச்சிங்களா.. மைத்ரேயன் அழுதது சரி.. ஆனால் கடைசில பொடி வச்சுட்டு போயிட்டாரே!

திமுகவின் அடுத்த டார்கெட் அதிமுகவின் மைத்ரேயனா என்பது தெரியவில்லை

Google Oneindia Tamil News

Recommended Video

    Maithreyan cries in Rajya sabha: ஈழத் தமிழர்களுக்கு செலுத்தப்படாத அஞ்சலி எனக்கும் வேண்டாம்-மைத்ரேயன்

    சென்னை: மைத்ரேயன் ஏன் நேற்று அப்படி பேசினார்.. என்ற குழப்பமும், சந்தேகமும், விவாதமும் தமிழக அரசியலை மொத்தமாக சூழ்ந்து கொண்டு உள்ளது.

    ராஜ்ய சபா எம்பியான மைத்ரேயன் உள்ளிட்ட 6 பேர் பதவி காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதனால் அவையில் பேசும்போது, மைத்ரேயன் உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.

    பேசும்போது சில சமயம் கண் கலங்கினார். நா தழுதழுக்க தொடர்ந்து பேச முடியாத போதெல்லாம் பக்கத்தில் இருந்த சக எம்பிக்கள் அவரை தேற்றினர்.

    சூரியோதயம்

    சூரியோதயம்

    எனினும் ''நீண்ட அனுபவத்திற்கு பின் மாநில அரசியலுக்கு திரும்ப உள்ளேன். பார்லிமென்ட்டைப் பொறுத்தவரை இது எனக்கு அஸ்தமன நேரமாக இருக்கலாம். ஆனால் மாநில அரசியலில் இனிமேல்தான் எனக்கு சூரியோதயம் ஆரம்பிக்கப்போகிறது'' என்று மைத்ரேயன் சொல்லி முடித்ததன் அர்த்தம் இப்போது வரை விளங்கவில்லை. மைத்ரேயன் ஏன் அப்படி பேசினார் என்ற கேள்வி அதிமுக தரப்பில்தான் வட்டம் அடிக்கிறது.

    ஜெயலலிதா

    ஜெயலலிதா

    ஏனெனில், மைத்ரேயனை பொறுத்தவரை, இவர் ஒரு பக்கா பாஜகவின் அபிமானி. அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளராக இருந்தவர். ஜெயலலிதாவுடன் நல்ல புரிந்துணர்வு தொடர்பு வைத்திருந்தவர். தனிப்பட்ட முறையில் இவர் மீது அதிக நம்பிக்கை கொண்டவர் ஜெயலலிதா, அதனால்தான் ஏற்கனவே 2 முறை எம்பியாக இருந்த நிலையிலும், கடந்த முறையும் வாய்ப்பு தந்தார். இதனால் பாஜக-அதிமுக கூட்டணிக்கு இடையே ஒரு பாலமாகவும் செயல்பட்டார் மைத்ரேயன்.

    ராஜ்ய சபா

    ராஜ்ய சபா

    ஆனால் எம்பி தேர்தலில் போட்டியிட ஆசையாக இருந்தார், தென்சென்னை, மத்திய சென்னை, இதில் ஏதாவது ஒன்றில் சீட் தந்தால் போட்டியிட எண்ணினார். ஆனால் இவருக்கு சீட் தரப்படவில்லை. இதையடுத்து, ராஜ்ய சபா சீட்டுக்காக கேட்டு காத்திருந்தார். அதையும் அதிமுக தரவில்லை. இதற்கு காரணம், இவர் என்னதான் அதிமுகவில் இருந்தாலும் பாஜகவின் பிம்பம் என்பதை முழுசாக உடைத்தெறிய முடியவில்லை என்பதுதான் பெரிய மைனசாக உள்ளதாக பார்க்கப்பட்டது.

    அப்செட்

    அப்செட்

    எனினும் ராஜ்ய சபா விஷயத்திலும் மைத்ரேயன் அப்செட் என்றே கருதப்பட்டது. கொஞ்ச காலமாகவே அதிமுகவில் முக்கியத்துவம் தரப்படாத நிலையில், எம்பி சீட்டும் தராத நிலையில், ராஜ்ய சபா சீட்டுக்கும் பரிந்துரைக்கப்படாத நிலையில், கடுமையான அதிருப்தியில் மைத்ரேயன் இருந்ததாக கூறப்பட்டது.

    திமுக

    திமுக

    அதனால் மைத்ரேயன் அதிமுகக்குள் இருந்து விலகுகிறாரோ, அல்லது உரிய முக்கியத்துவம் அங்கு இதுநாள் வரை கிடைக்காமல் திமுக பக்கம் தாவ போகிறரோ என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன. முக்கிய புள்ளிகளை தட்டி தூக்கி தன் பக்கம் இழுத்து போட்டு வரும் திமுக, மைத்ரேயனையும் இழுக்க முயற்சி செய்கிறதோ என்ற யூகங்களும் கிளம்பி உள்ளன.

    தேசிய அரசியல்

    தேசிய அரசியல்

    எதுவானாலும், தேசிய அளவில் அரசியல் செய்த ஒருவரை தன் பக்கம் வைத்து கொள்ளும் கட்சியே விவரமானது.. அதனை அதிமுகவே தக்க வைத்து கொள்ளுமா, அல்லது திமுக பறித்து கொண்டு போகுமா என்பதை இனிமேல்தான் பார்க்க வேண்டும்!

    English summary
    There is an expectation that AIADMK Maitreyans will join the DMK soon. It is said that he has not yet been given importance in the AIADMK.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X