சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இரு துறைகளில் பெரிய நெருக்கடி.. பல்லாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு பறிபோகும்.. ப.சிதம்பரம் எச்சரிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: இரு துறைகளில் பெரிய நெருக்கடி நிலவுவதாகவும், இதே நிலை நீடித்தால், பல்லாயிரம், நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் அழிந்துவிடும் என்றும், முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

இதுதொடர்பாக, தமிழில் தொடர்ச்சியான ட்வீட்டுகளை அவர் வெளியிட்டுள்ளார். ப.சிதம்பரம் கூறியுள்ளதாவது:

2019-2020 ஆண்டுகளில் 14 கோடி நபர்கள் வேலை அல்லது வாழ்வாதாரத்தை இழந்தார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

குலக்கல்வித் திட்டத்தின் மறுபதிப்பே... புதிய கல்விக் கொள்கை... வேல்முருகன் பாய்ச்சல் குலக்கல்வித் திட்டத்தின் மறுபதிப்பே... புதிய கல்விக் கொள்கை... வேல்முருகன் பாய்ச்சல்

இரு துறைகள்

இரு துறைகள்

இது போதாது என்று இப்பொழுது இரண்டு முக்கிய துறைகளில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது: (1) தொலைதொடர்பு (2) விமானப் போக்குவரத்து. இந்த இரண்டு துறைகளும் குலைந்தால் இன்னும் பல்லாயிரம் நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகள் அழிந்து விடும். இதையெல்லாம் பார்த்துக்கொண்டு மோடி அரசு செயலிழந்து நிற்கிறது.

பணிவு இல்லை

பணிவு இல்லை

மோடி அரசின் பொருளாதார மேலாண்மை முற்றிலும் தோல்வியடைந்து விட்டது என்று நான் பல நாட்களாகச் சொல்லிவருகிறேன்
மோடி அரசிடம் திட்டமும் இல்லை, தம் மேலாண்மை தோல்வியடைந்தது என்று ஒப்புக்கொள்ளும் பணிவும் இல்லை, திறமையானவர்களின் உதவியை நாட வேண்டும் என்ற அணுகுமுறையும் இல்லை. இவ்வாறு தமிழில் அவர் ட்வீட் செய்துள்ளார்.

33 லட்சம்

33 லட்சம்

கணிதம் எளிமையானது. ஆனால் பயமுறுத்துகிறது. இந்த விகிதத்தில் போனால், ஆகஸ்ட் இறுதிக்குள் இந்தியா 30 லட்சத்திற்கும் அதிகமான கொரோனா தொற்றுநோய்களைப் பதிவு செய்யும். இதே மாதிரி தினசரி விகிதம் அதிகரித்தால், ஆகஸ்ட் இறுதிக்குள் 33 லட்சத்திற்கும் அதிகமான தொற்றுநோய்களையும், 2020ம் ஆண்டு செப்டம்பர் இறுதிக்குள் 55 லட்சத்திற்கும் அதிகமான தொற்றுநோய்களையும் பதிவு செய்யும்.

தோல்வி

தோல்வி

கடவுள் தடைசெய்தாலும், கொரோனா நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கையில் இந்தியா உலக நாடுகளில் முதல் இடத்தைப் பிடிக்க கூடும். பிரதமர் தனது கைகளில் அனைத்து அதிகாரங்களையும் வைத்திருக்கிறார். கொரோனா தடுப்பு ஒரு முழு தோல்வி. இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

English summary
Former Union Minister and senior Congress leader P. Chidambaram has warned that there is a major crisis in two sectors and thousands of direct and indirect jobs will be lost if the same situation persists.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X