காலையிலேயே.. செல்போனை பார்த்ததும் பதறி போன மக்கள்.. விழுந்தடித்து கொண்டு ஒரே ஓட்டம்.. என்னவாம்?
சென்னையில் மரங்கள் முறிந்து விழுந்ததால் செல்போன் மற்றும் இணையசேவை பாதிக்கப்பட்டுள்ளன
சென்னை: சென்னையின் பல்வேறு பகுதிகளில் மரங்களும், கரண்ட் கம்பங்களும் முறிந்து விழுந்ததிலும், சாய்ந்து விழுந்ததிலும், தகவல் தொடர்பு சேவைகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன.
மாண்டஸ் புயல் எதிரொலியாக நேற்று நடுராத்திரி சென்னை வந்த 7 விமானங்கள் ஹைதராபாத், பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டன.. அதேபோல, சென்னையில் இருந்து செல்ல வேண்டிய 20 விமானங்கள் நேரம் மாற்றம் செய்யப்பட்டு காலதாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..
மாண்டஸ் புயல் காரணமாக சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்று வீசியதால் பல்வேறு இடங்களில் கரண்ட் கம்பங்கள், பெரிய பெரிய மரங்களே வேரோடு சாய்ந்து விழுந்துள்ளன.. இதனால், சில இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

முறிந்த மரங்கள்
பலத்த காற்று வீசியதன் காரணமாக, பல்வேறு இடங்களில் 300க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்திருக்கின்றன.. குறிப்பாக, சென்னையில் கோபாலபுரம், அவ்வை சண்முகம் சாலை உள்ளிட்ட பல்வேறு முக்கிய சாலையோரம் இருந்த மரங்கள் முறிந்தும், வேரோடும் விழுந்துள்ளதால், அவைகளை அப்புறப்படுத்தும் பணியில் 5000 மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.. சென்னையில் பல்வேறு பகுதிகளில் கரண்ட கம்பங்களுடன், சிக்னல் கம்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன..

கரண்ட் கட்
இதனால், சென்னை, அடையாறு, பெசன்ட் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது... இதை சரி செய்யும் பணியும் நடந்துவருகிறது.. இரவு இயக்கப்படும் மாநகராட்சி பஸ்களின் சேவை நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மாண்டஸ் புயல் கரையை கடந்த பிறகு, அந்த போக்குவரத்து சேவை மறுபடியும் தொடங்கப்பட்டுள்ளது... சென்னையில் பல்வேறு நிறுவனங்களின் செல்போன் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

கேபிள்கள்
செல்போன் சேவை மட்டுமல்லால், இண்டெர் நெட் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.. குறிப்பாக, ஜியோ, வோடபோன் உள்ளிட்ட நிறுவனங்களின் செல்போன் சேவைகளில் பாதிப்பு உள்ளதாம்.. அதேபோல இன்டர்நெட் மற்றும் செல்போன் சேவை தொடர்ச்சியாக இல்லாமல் அடிக்கடி இடையூறு ஏற்பட்டு வருவதாகவும் தெரிகிறது.. பல இடங்களில் இன்டர்நெட் கேபிள்கள் அறுந்து விழுந்துள்ளதால் அவைகளை சரி செய்யும் பணி தீவிரமாகி வருகிறது.

அறுந்த கேபிள்
நேற்றிரவு பலத்த சூறாவளி காற்று எதிரொலியால், ஏராளமான குடியிருப்பு பகுதிகளில் உள்ள இண்டர்நெட் சேவை பாதிப்புக்கு உள்ளாகி உள்ளதாம்.. குறிப்பாக, தரமணி, பள்ளிக்கரணை, பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்ததில், இண்டர்நெட் கேபிள்களும் அதனுடன் சேர்ந்து அறுந்து விழுந்துள்ளன.. இதன்காரணமாகவே செல்போன் சேவையில் பாதிப்பு ஏற்பட்டு, தகவல் பரிமாற்றம் இல்லாமல் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.. காலையில் எழுந்ததுமே, பெரும்பாலான செல்போன்களில் டவர் இல்லாததால், அப்பகுதி மக்கள் பதற்றம் அடைந்துவிட்டனர்..

டென்ஷன்
செல்போன்களில் பலருக்கு சிக்னல் இல்லாததால், யாருக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டதோ? நிலைமை என்னவென்று தெரிந்து கொள்ள முடியாமல் திணறிவிட்டார்கள்.. சொந்தக்கார்களுக்கு தகவல் சொல்ல முடியாமலும் டென்ஷன் ஆகி உள்ளனர்.. இதனால், செல்போன் டவர் இல்லாதவர்கள், சம்பந்தப்பட்ட கேபிள் ஆபரேட்டர்களை அணுகி, புகார்களை தந்து கொண்டிருக்கிறார்கள்.. செல்போன் மற்றும் இண்டர்நெட் சேவைகளை சரி செய்யும் பணி துரிதமாக நடந்து வருவதால், விரைவில் இந்த தடங்கல் சரி செய்யப்படும் என்றும் நம்பிக்கை தரப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications