சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடிதூள் அறிவிப்பு.. ரேஷன் கார்டுதாரர்களுக்கு பறந்த குட்நியூஸ்.. தமிழ்நாடு அரசின் செம முடிவு.. என்ன?

தமிழ்நாட்டில் ரேஷன் பொது விநியோக திட்டம் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் செய்யப்படும் பல்வேறு மாற்றங்கள் தேசிய அளவில் பல மாநிலங்களில் கவனம் பெற தொடங்கி உள்ளன.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாடு ரேஷன் கடைகளில் முக்கியமான ஒரு திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த மாதம் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பரிசு பொருட்கள் இந்த வருடம் வழங்கப்பட்டன.

அதோடு வழங்கப்படாத மற்ற பொருட்களுக்காக 1000 ரூபாய் பணம் வழங்கப்பட்டது. கரும்புடன் சேர்த்து 1000 ரூபாய் பணம் வழங்கப்படுவது மக்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது. மக்கள் இடையே இந்த திட்டம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

அடி தூள்! ரேஷன் கடைகளில் ரூ.1000 & பொங்கல் தொகுப்பை வாங்காம 'மிஸ்' பண்ணிட்டீங்களா? மீண்டும் சான்ஸ்! அடி தூள்! ரேஷன் கடைகளில் ரூ.1000 & பொங்கல் தொகுப்பை வாங்காம 'மிஸ்' பண்ணிட்டீங்களா? மீண்டும் சான்ஸ்!

புகார்

புகார்

மக்கள் புகார் வைக்காத அளவிற்கு இந்த வருடம் பொருட்களும் தரமாக இருந்தன. அதே சமயம் சுகாதாரம், எடை ஆகியவற்றை உறுதிப்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. உணவு பொருட்கள் சுத்தமாக கிடைக்க வேண்டும். எடையில் ஏமாற்றம் செய்ய கூடாது என்பதால் பொருட்களை நியாயவிலை கடைகளில் பாக்கெட்டுகள் மூலமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அரிசி, சர்க்கரை. கோதுமை உள்ளிட்ட பொருட்களை பாக்கெட்டுகளில் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் அரிசி, பருப்பு, சக்கரை, கோதுமை எடையில் மாற்றம் இருக்காது. பொருட்களும் பூச்சி இல்லாமல் சுத்தமாக இருக்கும்.

பொருட்கள் திருட்டு

பொருட்கள் திருட்டு

தமிழ்நாட்டில் ரேஷன் பொது விநியோக திட்டம் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் செய்யப்படும் பல்வேறு மாற்றங்கள் தேசிய அளவில் பல மாநிலங்களில் கவனம் பெற தொடங்கி உள்ளன. பிற மாநில அரசுகளும் இந்த திட்டங்களை பின்பற்ற தொடங்கி உள்ளனர். தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் அரிசு, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் அட்டை ரீதியாக வழங்கப்பட்டது. அட்டையை பொறுத்து பொருட்கள் வழங்கப்படும் வீதமும், அளவும் மாறி வருகின்றது. இந்த பொருட்கள் எடை மாறக்கூடாது, ஏமாற்ற கூடாது என்பதால் அதை பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

முக்கிய உத்தரவு

முக்கிய உத்தரவு

இந்த நிலையில்தான் தமிழ்நாடு ரேஷன் கடைகளில் முக்கியமான ஒரு திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டம் பல்வேறு மாநிலங்களில் வரும் மாதங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. அதாவது அரிசியை செறிவூட்டி, அதிக சத்துக்களுடன் விற்பனை செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டம் அடுத்த ஒரு வருடத்திற்குள் செயல்படுத்தப்படும் என தம்கிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 3 கட்டமாக செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டத்தை இன்னும் 1 வருடத்திற்குள் கொண்டு வருவோம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

ஊட்ட சத்து

ஊட்ட சத்து

ஊட்டு சத்து குறைபாட்டை கட்டுப்படுத்த தமிழ்நாடு - மத்திய அரசு இந்த திட்டத்தை கையில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்னொரு பக்கம் தமிழ்நாடு முழுக்க ரேஷன் கடைகளில் அரிசி உள்ளிட்ட பொருட்கள் வாங்க மக்கள் தங்கள் கருவிழிகளை பயன்படுத்தும் முறை கொண்டு வரப்பட உள்ளது. தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் கைரேகையைப் பதிவு செய்து பொருட்கள் வழங்கும் திட்டம் அமலில் உள்ளது.இதை தற்போது மேம்படுத்தி வருகிறார்கள். இந்த திட்டத்தை தமிழ்நாடு முழுக்க அமல்படுத்த போவதாக அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். இந்த மாதத்தில் இருந்து எல்லா நகரத்திலும், மாநகரத்திலும் குறைந்தது ஒரு ரேஷன் கடையிலாவது இந்த திட்டம் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

English summary
MAJOR NEWS: A Major scheme was announced for Ration Shops in Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X