சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னதிது.. நிர்மலா தேவி வாக்குமூலத்தில் நிறைய பெயர்கள் மிஸ் ஆகுது போலயே!

Google Oneindia Tamil News

Recommended Video

    விசாரணையில் நிர்மலா தேவி அளித்த பரபரப்பு வாக்குமூலம்- வீடியோ

    சென்னை: நிர்மலாதேவி சிபிசிஐடி போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில் அவரது வாழ்க்கை குறித்த தகவல்கள் இடம்பெற்றன தவிர முக்கியமானவர்களின் பெயர்கள் லிஸ்டில் வராமல் இருக்கிறது சந்தேகத்தை எழுப்புகிறது.

    தன்னிடம் பயிலும் மாணவிகளை மதுரை பல்கலைக்கழக அதிகாரிகளுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளுமாறு கணித துறை பேராசிரியர் நிர்மலா தேவி அழைத்ததாக வாட்ஸ் ஆப் ஆடியோ உரையாடல் வைரலாக வலம் வந்தது.

    அப்போது அந்த ஆடியோவில் அவர் சிலரது பெயர்களை குறிப்பிட்டதாகவும் மேலும் சில முக்கிய புள்ளிகளுக்கு இதில் தொடர்பிருப்பதாகவும் சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் நிர்மலா தேவி அளித்ததாக கூறி ஒரு வாக்குமூலத்தை சிபிசிஐடி போலீஸார் வெளியிட்டனர்.

    [10 பேருடன் சரமாரி தொடர்புகள்.. இடையே வெளியூர் டூர் வேறு.. அதிர வைக்கும் நிர்மலா தேவி வாக்குமூலம்]

    மத்த லிஸ்ட்

    மத்த லிஸ்ட்

    அதில் நிர்மலா தேவி தனக்கு 10 பேருடன் தொடர்பிருந்ததை கூறியுள்ளார். யாருக்காக மாணவிகளை அழைத்தார் என்ற விவரங்களில் ஒரு சதவீதம் மட்டுமே கூறியுள்ளார். மீதமுள்ளவர்களின் பெயர்கள் வெளியிடப்படாதது ஏன்.

    போலீஸார்

    போலீஸார்

    நிர்மலா தேவி வெறும் முருகன் மற்றும் கருப்பசாமி மீது மட்டுமே வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்று மிரட்டப்பட்டாரா இல்லை அவர் முக்கிய தலைகளின் பெயர்களை கூறியும் அதை போலீஸார் வெளியிடாமல் விட்டு விட்டனரா என்பது தெரியவில்லை.

    எதுவும் வரவில்லை

    எதுவும் வரவில்லை

    இந்த வாக்குமூலத்தில் நிர்மலா தேவி எப்படிப்பட்டவர், அவரது கணவர் எப்படிப்பட்டவர், இந்த நிலைக்கு ஆளானது ஏன் உள்ளிட்ட தகவல்கள் மட்டுமே இருக்கின்றனவே தவிர, எந்த உண்மைகள் வெளிவர வேண்டியதோ அவை எதுவும் வரவில்லை.

    தங்களுக்காக

    தங்களுக்காக

    ஆக முருகன், கருப்பசாமியையும் சிக்க வைத்து விட்டு முக்கியஸ்தர்களை காப்பாற்றுவதன் மூலம் நிர்மலா தேவி விடுவிக்கப்படுவதற்கான நோக்கம் ஏதும் உள்ளது என்பதும் தெரியவில்லை. இந்த வாக்குமூலத்தில் கல்லூரி மாணவிகளை அந்த இருவரும் தங்களுக்காகவா என்று கேட்டுள்ளனர்.

    காப்பாற்றும் நடவடிக்கை

    காப்பாற்றும் நடவடிக்கை

    ஏற்கெனவே சிறையில் வைத்து தன்னை கொலை செய்ய சதி நடப்பதாக நிர்மலா தேவி கூறியிருந்த நிலையில் தற்போது இத்தகைய வெற்று வாக்குமூலம் மூலம் யாரை காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன? என்பது கேள்விக்குறியாக உள்ளது. எனவே நிர்மலா தேவியின் வாக்குமூலத்தின் உண்மைத்தன்மை சந்தேகத்தை எழுப்புகிறது. நாளை நிர்மலாதேவி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ள நிலையில் அங்கு ஏதாவது உண்மையை சொல்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    English summary
    Major VVIPs names are missing in Nirmala Devi's statement to CBCID.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X