சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நேரில் வந்த ஸ்டாலின்.. தூது அனுப்பிய தேமுதிக.. உள்ளாட்சி தேர்தலில் திடீர் முக்கியத்துவம் பெறும் கமல்

தமிழக உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி வைப்பதற்காக திமுக மற்றும் தேமுதிக ஆகிய இரண்டு கட்சிகளும் முயன்று வருவதாக செய்திகள் வருகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    MK Stalin Meet Kamal Hassan | கமலை திடீர் என்று சந்தித்த ஸ்டாலின்.. என்ன நடக்கிறது?

    சென்னை: தமிழக உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி வைப்பதற்காக திமுக மற்றும் தேமுதிக ஆகிய இரண்டு கட்சிகளும் முயன்று வருவதாக செய்திகள் வருகிறது.

    தமிழக அரசியலில் மக்கள் நீதி மய்யம் கட்சியும் அதன் தலைவர் கமல்ஹாசனும் கொஞ்சம் கொஞ்சமாக தவிர்க்க முடியாத சக்திகளாக மாறி வருகிறார்கள். கடந்த லோக்சபா தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி 4% வாக்குகளை பெற்றது.

    முதல்முறை தனியாக தேர்தலில் நின்று பெரிய கட்சிகளை எதிர்த்து மக்கள் நீதி மய்யம் இவ்வளவு வாக்குகளை பெற்று இருக்கிறது. அதனால் மக்கள் நீதி மய்யம் உள்ளாட்சி தேர்தலில் தற்போது தீவிரமாக கவனம் செலுத்த தொடங்கி உள்ளது.

    எப்படி இருக்கீங்க.. என்னாச்சு.. கமலை திடீர் என்று சந்தித்த ஸ்டாலின்.. என்ன நடக்கிறது?எப்படி இருக்கீங்க.. என்னாச்சு.. கமலை திடீர் என்று சந்தித்த ஸ்டாலின்.. என்ன நடக்கிறது?

    நேற்று கூட்டம்

    நேற்று கூட்டம்

    நேற்று மக்கள் நீதி மய்ய கூட்டம் சென்னையில் நடந்தது. கமல் தலைமையில் மக்கள் நீதி மய்யத்தின் செயற்குழு, மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடந்தது. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் கருத்து கேட்டார்.

    கூட்டணி தேர்தல்

    கூட்டணி தேர்தல்

    இதில் பெரும்பாலான நிர்வாகிகள் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கலாம் என்று ஆலோசனை வழங்கி இருக்கிறார்கள். ஆம் லோக்சபா தேர்தலில் கூட்டணி வைக்கவில்லை. அதனால் ஒரு இடத்தை கூட வெல்ல முடியவில்லை. இந்த முறை கூட்டணி வைத்து போட்டியிட்டால் கண்டிப்பாக சில இடங்களை வெல்ல முடியும் என்று கூறி உள்ளனர்.

    கண்டிப்பாக கமல்ஹாசன்

    கண்டிப்பாக கமல்ஹாசன்

    ஆனால் அதிமுக உடன் கண்டிப்பாக கமல்ஹாசன் கூட்டணி வைக்க முடியாது. அவர் கட்சி தொடங்க காரணமே அதிமுக மீது கோபம்தான் என்று கூறுகிறார்கள். அதனால் அதிமுகவை கண்டிப்பாக மநீம கணக்கில் கொள்ளாது என்கிறார்கள். இதனால் திமுக மற்றும் தேமுதிக உடன் கூட்டணி வைக்க மநீம திட்டமிட்டு வருகிறது.

    திமுக வாய்ப்பு

    திமுக வாய்ப்பு

    திமுக கூட்டணியில் கமலுக்கு நெருக்கமான காங்கிரஸ் கட்சி இருக்கிறது. காங்கிரஸ் தலைவர்களுடன் கமல்ஹாசன் மிகவும் நெருக்கமானவர். அதேபோல் திமுக கூட்டணியில் கமலுக்கு பிடித்தமான கம்யூனிஸ்ட் கட்சிகளும் இருக்கிறது. இதனால் அவர்களுடன் சேர்ந்து அதன் மூலம் கமல்ஹாசன் திமுகவுடன் இணைய வாய்ப்பு இருக்கிறது.

    என்ன சந்திப்பு

    என்ன சந்திப்பு

    அதேபோல் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் கமல்ஹாசனை நேரில் சந்தித்தார். கமலின் உடல்நிலை குறித்து ஸ்டாலின் விசாரித்தார். அதேபோல் இவர்கள் உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார்கள். இதனால் திமுகவுடன் கமல் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வருவதாக தெரிகிறது.

    பேசி வருகிறார்கள்

    பேசி வருகிறார்கள்

    அதேபோல் கமல் உடன் கூட்டணி வைக்க தேமுதிகவும் இன்னொரு பக்கம் முயன்று வருகிறது. விஜயகாந்த் தரப்பிலிருந்து சமீபத்தில் கமலை தொடர்புகொண்டு இதற்காக பேசி வருகிறார்கள். லோக்சபா தேர்தலின் போதே இவர்கள் சேர்வதாக இருந்தது. ஆனால் அப்போது நடக்கவில்லை.

    உள்ளாட்சி

    உள்ளாட்சி

    உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கேட்கும் இடங்களை கொடுக்கவில்லை என்றால், தேமுதிக உடனே மநீம உடன் சேர வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். ஆனால் இதில் விஜயகாந்திற்குதான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று தேமுதிக கேட்டு வருகிறது. இதை மக்கள் நீதி மய்யம் ஏற்கவில்லை.

    ஆர்வம் இல்லை

    ஆர்வம் இல்லை

    ஆகவே தேமுதிகவுடன் இணைய மநீம பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லையாம். திமுகவுடன் சேரலாம். இல்லையென்றால் தனியாகவே போட்டியிடலாம் என்று கமல்ஹாசன் நினைப்பதாக கூறுகிறார்கள்.

    English summary
    Makkal Needhi Maiam and Kamal gets new attention from DMK and DMDK in Local Body Election in Tamilnadu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X