கமல்ஹாசனை ஓப்பனாக விட்டு விளாசிய சரத்குமார்.. மநீம ஷாக்.. சங்கடத்தில் ராதிகா டீம்
சென்னை: மக்கள் நீதி மய்யம், சமக, ஐ.ஜே.கே இடையேயான தொகுதி உடன்பாடு நிறைவடைந்துள்ள நிலையில், சரத்குமார் கமல்ஹாசனை விமர்சிக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது
வங்கிகள் வரும் 15, 16ம் தேதி ஸ்டிரைக்.. 4 நாட்கள் வங்கிகள் இயங்காது! .
காங்கிரஸ், விசிக ஆகிய கட்சிகள் மநீம-வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று வெளிப்படையாக கோரிக்கை வைத்தும் அந்த கட்சிகள் திமுக நிழலிலேயே இருக்க முடிவு செய்து, ஒப்பந்தமும் போட்டுவிட்டன.

தொகுதி உடன்பாடு
இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்துடன் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி மற்றும் ஐ.ஜே.கே ஆகிய கட்சிகள் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இந்த கூட்டணி ஏறக்குறைய ஏறக்குறைய உறுதியாகிவிட்ட நிலையில், தொகுதி உடன்பாடும் எட்டப்பட்டுவிட்டதாக மநீம கட்சியின் பொதுச் செயலாளர் குமரவேல் தெரிவித்துள்ளார்.

முதலில் வந்த சரத்குமார்
இன்று மாலை தொகுதிப் பங்கீடு குறித்த அறிக்கையும் வெளியாக உள்ளதாக கூறியுள்ளார். மக்கள் நீதி மய்யத்துடன் முதன் முதலில் கூட்டணி சேர ஆர்வமாக முன்வந்தவர் சரத்குமார் தான். அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய சரத்குமாரின் சமகவும், திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய ஐஜேகே கட்சியினரும் இணைந்து கமல்ஹாசனை சந்தித்தனர்.

கமல் ட்வீட்
தொகுதிப் பங்கீடு குறித்த தகவல் இன்று மாலை வெளியான நிலையில், கமல்ஹாசன் இன்று பதிவிட்ட ட்வீட் ஒன்று சரத்குமாருக்கு சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது. இன்று கமல் தனது ட்விட்டரில், "மானமிகு தமிழர்க்கோர் விண்ணப்பம். ஓர் அட்டையில் "எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல" என எழுதி வாசலில் மாட்டுங்கள். நாய் நரிகள் நம்மை அணுகாதிருக்கட்டும்" என்று ட்வீட் செய்ய, கமல் யாரை நாய் என்கிறார்? யாரை நரி என்கிறார்? என்று மாற்றுக் கட்சியினர் அவரது டீவீட் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இவர் மனுஷனா?
இந்நிலையில், கமலின் அந்த டிவீட்க்கு பதிலடி கொடுக்கும் விதமாக, கமல்ஹாசனை 2015ம் ஆண்டு சரத்குமார் பொளந்து கட்டிய வீடியோ ஒன்றை பலரும் ஷேர் செய்து வருகின்றனர். அதில், சரத்குமார், "பிரச்சனை-னு வந்தா ஊரை விட்டு ஓடிப் போறேன்னு சொல்றவன்லாம் மனுஷனா?.. வீரன்-னா நின்னு சமாளிக்கணும்... இப்படி ஓடிப்போறேன்னு சொல்லக் கூடாது' என்று சரத்குமார் பேசிய வீடியோக்களை அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.
இதனால், பெரும் சங்கடத்தில் இருப்பது ராதிகா சரத்குமார் தானாம். ஏனெனில், கூட்டணி பேச்சுவார்த்தையில் ராதிகாவுக்கு துணை முதல்வர் பதவி கோரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.