சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மக்கள் நீதி மய்யம் 154 தொகுதிகளில் போட்டி.. தலா 40 இடங்களில் களம் காணும் ஐஜேகே- சமக!

Google Oneindia Tamil News

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி 154 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய ஜனநாயக கட்சி தலா 40 இடங்களிலும் சமத்துவ மக்கள் கட்சி தலா 40 இடங்களிலும் போட்டியிடுகிறது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அமமுக ஆகிய கட்சிகளுக்கிடையே 5 முனை போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில் அதிமுக கூட்டணியிலிருந்து சரத்குமாரும் திமுக கூட்டணியிலிருந்து ஐஜேகே ரவி பச்சமுத்துவும் விலகினார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இருவரும் இணைந்து ஒரு கூட்டணியை அறிவித்தார்கள்.

2021-ம் ஆண்டு தேர்தலில் யார் முதல்வராக வர விருப்பம்.. ஸ்டாலின் என டைம்ஸ் நவ் சர்வேயில் மக்கள் பளீச்!2021-ம் ஆண்டு தேர்தலில் யார் முதல்வராக வர விருப்பம்.. ஸ்டாலின் என டைம்ஸ் நவ் சர்வேயில் மக்கள் பளீச்!

ரவி பச்சமுத்து

ரவி பச்சமுத்து

இந்த நிலையில் சரத்குமாரும் ரவி பச்சமுத்துவும் இணைந்து மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் கூட்டணி குறித்து கமல்ஹாசனுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சரத்குமாரும், கமல்ஹாசனும் தனித்தனியே முதல்வர் வேட்பாளர் என கூறி வந்ததால் குழப்பம் நிலவியது.

பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தை

இதையடுத்து கமல்ஹாசன்தான் எங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் என சரத்குமார் அவருடைய கட்சி பொதுக் கூட்டத்தில் அறிவித்தார். இந்த நிலையில் கமலுடன் இவர்கள் இருவரும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நிலையில் நேற்று உடன்பாடு எட்டப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

தொகுதி பங்கீடு

தொகுதி பங்கீடு

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம்- ஐஜேகே- சமக கட்சியிடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் சென்னை வடபழனியில் கையெழுத்தானது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் சி கே குமரவேல் முன்னிலையில் கையெழுத்தானது.

சமத்துவ மக்கள் கட்சி

சமத்துவ மக்கள் கட்சி

ஐஜேகே, சமத்துவ மக்கள் கட்சி ஆகியவற்றுக்கு தலா 40 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 154 தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடும் என அறிவித்துள்ளது. இதன் மூலம் கடந்த ஒரு வாரமாக நீடித்து வந்த தொகுதி உடன்பாடு இவர்களிடையே நள்ளிரவு எட்டப்பட்டுவிட்டது.

English summary
Makkal Needhi Maiam is going to contest in 154 constituencies whereas IJK and Samathuva Makkal Katchi contest in each 40 constituencies.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X