சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிஸ்டம் சரியில்லன்னு சொல்றவங்ககிட்ட வோட்டர் ஐடியே இல்ல.. அடித்து வெளுத்த கமல்ஹாசன்.. பரபரப்பு வீடியோ

Google Oneindia Tamil News

சென்னை: சிஸ்டம் சரியில்லன்னு சொல்றவங்ககிட்ட வோட்டர் ஐடியே இல்லை என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அதிரடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Recommended Video

    'ஒன்று கூடுவோம், வென்று காட்டுவோம்'.. கமல்ஹாசன் விழிப்புணர்வு வீடியோ!

    தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்காக கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகிறது. மக்கள் நீதி மய்யம் கட்சியும் முதல் சட்டசபை தேர்தலுக்காக தயாராக தொடங்கி உள்ளது.

    இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை குறித்து விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    திட்டமிட்டபடி தொடர்வேன்.. தேர்தல் பிரச்சாரத்தில் கைது செய்யப்பட்ட உதயநிதி.. விடுதலைக்கு பின் டிவிட்திட்டமிட்டபடி தொடர்வேன்.. தேர்தல் பிரச்சாரத்தில் கைது செய்யப்பட்ட உதயநிதி.. விடுதலைக்கு பின் டிவிட்

    வீடியோ

    கமல்ஹாசன் வெளியிட்டுள்ள வீடியோவில், 18 வயதை பூர்த்தி செய்த ஒரு இந்தியனுக்கு கிடைக்க கூடிய மிகப்பெரிய கவுரவம் வாக்காளர் என்ற அடையாளம் . அவனுக்கு கிடைக்கும் மிகப்பெரிய ஆயுதம் அது. கடமையை சரியாக செய்யாத சமுதாயம் தன்னுடைய உரிமையை இழந்துவிடும்.

    என்ன சொல்கிறார்

    என்ன சொல்கிறார்

    மாற்றம் வேண்டும், சிஸ்டம் சரியில்லை, எல்லோரும் திருட்டு பயலுங்க என்று கீ போர்டில் கதகளி ஆடும் பலருக்கு வாக்காளர் அடையாளர் அட்டையே இல்லை. எந்த விஷயத்தை வேண்டாம் என்று நாம் நினைக்கிறோமோ, எந்த விஷயம் நமக்கு சம்பந்தம் இல்லை என்று நாம் நினைக்கிறோமோ அந்த விஷயத்தால் நமக்கு ஆபத்து வரும்.

    சீண்டல்

    சீண்டல்

    வாக்களிப்பது மட்டுமே நமது பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும். இந்த பிரச்சனைக்கு எல்லாம் இந்திய தேர்தல் ஆணையம் ஒரு பரிகாரம் அறிவித்து இருக்கிறது. நவம்பர் 21,22 அல்லது டிசம்பர் 12, 13 தேதிகளில் நடக்க உள்ள வாக்குச்சாவடி முகாம்களில் உங்கள் பெயர்களை பதிவு செய்யுங்கள். 12 வாக்குகள் மூலம் பீகாரில் ஒருவர் தேர்தலில் தோல்வி அடைந்தார்.

    முக்கியம்

    முக்கியம்

    ஒவ்வொரு வாக்கும் அவ்வளவு முக்கியம். 2021 தேர்தலுக்கு நீங்கள் உங்களுக்குள் சொல்லும் மந்திரம் "I Will CHANGE_ I Will VOTE"என்று இருக்க வேண்டும். ஆட்சி மாற்றம் என்பது அரசியல் மாற்றம் நிர்வாக மாற்றம் கிடையாது, ஆட்சி மாற்றம் என்பது மிகப்பெரிய தத்துவம்., என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

    English summary
    Makkal Needhi Maiam Kamal Haasan releases video on voting importance.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X