சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ராகுல்காந்தியிடம் உ.பி. போலீஸ் நடந்துகொண்ட விதம் வெட்கக்கேடானது - கமல் சாடல்

Google Oneindia Tamil News

சென்னை: ராகுல்காந்தியிடம் உத்தரப்பிரதேச மாநில போலீஸார் நடந்துகொண்ட விதம் வெட்கக்கேடான நிகழ்வு என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்தடுத்து நடந்துள்ள கூட்டுப்பாலியல் வன்கொடுமைகள் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளன. 19 வயது சிறுமியைக் கூட்டுப்பாலியல் வன்முறை நடத்திய நான்கு கொடூரன்கள், அந்தச் சிறுமியின் கழுத்தை நெரித்தும், முதுகெலும்பை உடைத்தும் கொலை செய்திருக்கிறார்கள்.

Makkal needhi maiam Kamalhassan Condemn to UP Police

இதன் அதிர்வலைகள் ஓய்வதற்கு முன்பே பல்ராம்பூரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண்ணைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளது காட்டுமிராண்டி கும்பல் ஒன்று. இதனால் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

ராகுலை தள்ளிவிட்ட உ.பி. போலீஸ்.. கொதித்தெழுந்த காங்கிரஸ்.. தமிழகத்தில் வெடித்தது போராட்டம்ராகுலை தள்ளிவிட்ட உ.பி. போலீஸ்.. கொதித்தெழுந்த காங்கிரஸ்.. தமிழகத்தில் வெடித்தது போராட்டம்

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டுக்கு ஆறுதல்கூறச் சென்ற ராகுல்காந்தியை உ.பி. போலீஸார் தடுத்து நிறுத்தியதுடன் அவரை கீழே தள்ளி அவமதித்தது. இந்த செயலுக்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. திமுக தலைவர் ஸ்டாலின் இது தொடர்பாக கண்டன அறிக்கை வெளியிட்ட நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலும் தனது எதிர்ப்பை ட்வீட்டரில் பதிவு செய்துள்ளார்.

அதில், ராகுல்காந்தியிடம் உ.பி. போலீஸ் நடந்துகொண்ட விதம் வெட்கக்கேடானது என்றும் குண்டர்கள் ஆட்சி நடத்தவா மக்கள் வாக்களித்தார்கள் எனவும் வினவியிருக்கிறார். மேலும், இது போன்ற கீழ்த்தரமான நிகழ்வுகளை பெரும்பான்மையானோர் கண்டிக்காவிட்டால் வெறுப்புணர்வு தான் அதிகரித்து பரவும் எனக் கூறியிருக்கிறார்.

English summary
Makkal needhi maiam Kamalhassan Condemn to UP Police
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X