சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கமலின் பிளானே வேறு.. உத்வேகம் கொடுத்த லோக்சபா தேர்தல்.. புதிய திட்டத்துடன் களமிறங்கும் மநீம!

லோக்சபா தேர்தலில் மக்கள் நீதி மய்யம் பெற்று இருக்கும் வாக்கு வங்கி அந்த கட்சிக்கு பெரிய உத்வேகத்தை கொடுத்து உள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: லோக்சபா தேர்தலில் மக்கள் நீதி மய்யம் பெற்று இருக்கும் வாக்கு வங்கி அந்த கட்சிக்கு பெரிய உத்வேகத்தை கொடுத்து உள்ளது.

இந்த லோக்சபா தேர்தல் தமிழகத்திற்கு மிக முக்கியமான ஒன்றாகும். திமுக 8 வருடங்களுக்கு பின் தமிழக அரசியலில் மீண்டும் லைம் லைட்டிற்கு வந்து இருக்கிறது.

அதே சமயம் நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளுக்கும் இந்த லோக்சபா தேர்தல் மிக முக்கியமான ஒன்றாகும். அவர்கள் இந்த தேர்தலில் தங்களது தடங்களை அழுத்தமாக பதிய வைத்து இருக்கிறார்கள்.

கல்யாணம் ஆனவனுக்கு சாந்தி முகூர்த்தத்திற்கு வழியில்லை.. திமுகவுக்கே திரும்பிய கருணாநிதியின் பொன்மொழி கல்யாணம் ஆனவனுக்கு சாந்தி முகூர்த்தத்திற்கு வழியில்லை.. திமுகவுக்கே திரும்பிய கருணாநிதியின் பொன்மொழி

மக்கள் நீதி மய்யம்

மக்கள் நீதி மய்யம்

இந்த லோக்சபா தேர்தலில் மக்கள் நீதி மய்யம் மிக சிறப்பாக செயலாற்றி இருக்கிறது என்றுதான் கூற வேண்டும். மொத்தமாக தேர்தலில் 3.78% வாக்குகளை பெற்று அசத்தி இருக்கிறது. சட்டசபை இடைத்தேர்தலில் 4.01% வாக்குகளை பெற்று உள்ளது. இது மக்கள் நீதி மய்யத்திற்கு சந்தோசத்தை அளித்துள்ளது.

என்ன பிளான்

என்ன பிளான்

இந்த நிலையில் இன்னும் 2 வருடங்களில் கட்சியாக பெரிய அளவில் பலப்படுத்தலாம் என்று கமல்ஹாசன் திட்டமிட்டு இருக்கிறார். இதற்காக அவர் கொங்கு மாடலை பயன்படுத்த முடிவு செய்துள்ளார். கொங்கு மண்டலத்தில் மக்கள் நீதி மய்யம் செய்த பிரச்சாரம் பெரிய அளவில் ஹிட் அடித்தது.

எவ்வளவு பெற்றது

எவ்வளவு பெற்றது

அதன்படி கோவையில் மநீம 5.8% வாக்குகளை பெற்றுள்ளது. ஈரோட்டில் மக்கள் நீதி மய்யம் 4.5% வாக்குகளை பெற்றுள்ளது. திருப்பூரில் 5.6% வாக்குகளை பெற்றுள்ளது. சேலத்தில் 5.9% வாக்குகளை பெற்றுள்ளது. நீலகிரியில் 4.1 சதவிகித வாக்குகளை பெற்றுள்ளது. பொள்ளாச்சியில் 6% வாக்குகளை பெற்றுள்ளது. மொத்தமாக கொங்கு மண்டலத்தில் மநீம 5.3% வாக்குகளை பெற்றுள்ளது.

இதுதான் முக்கியம்

இதுதான் முக்கியம்

வேறு எங்கும் மக்கள் நீதி மய்யம் இவ்வளவு வாக்குகளை பெறவில்லை. இங்கு மக்கள் நீதி மய்யம் நடத்திய கூட்டங்களும், கமல்ஹாசன் செய்த பிரச்சாரமும் பெரிய அளவில் உதவி உள்ளது. அதேபோல் மிக முக்கியமாக, மக்கள் நீதி மய்யம் நிறுத்திய வேட்பாளர்கள் அக்கட்சிக்கு அதிக வாக்குகளை தேடித் தந்து இருக்கிறார்கள். இதனால் இதே மாடலை மக்கள் நீதி மய்யம் தமிழகம் முழுக்க பயன்படுத்த உள்ளது.

அடிமட்ட வேலை

அடிமட்ட வேலை

அதன்படி கோவையில் கீழ் மட்டத்தில் இருந்து பணியாளர்கள் சிறப்பாக வேலை பார்த்தனர். அதே போல் தமிழகம் முழுக்க இன்னும் இரண்டு வருடத்தில் அடிமட்ட நிர்வாகிகளை பலப்படுத்த கமல்ஹாசன் முடிவெடுத்து இருக்கிறார். இதனால்தான், நாங்கள் உற்சாகமாக இருக்கிறோம் என்று வெளிப்படையாக சென்னையில் பேட்டி அளித்தார் என்கிறார்கள்.

நோக்கம் என்ன

நோக்கம் என்ன

தமிழகத்தில் மாற்று சக்திகளாக இருக்கும் சில சக்திகளை தன்னுடைய கட்சியில் கூட்டணியாக சேர்க்கவும் மக்கள் நீதி மய்யம் முடிவெடுத்து இருப்பதாக தெரிகிறது. 2021ல் தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சியாக அமர வேண்டும் என்பதே இப்போது கமல்ஹாசனின் பிளான் என்றும் கட்சிக்குள் பேசிக்கொள்கிறார்கள்.

English summary
Makkal Needhi Maiam may be a game changer in future: Kamal Haasan's epic plan will workout soon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X