சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஐஜேகே- சமகவுடனான கூட்டணியை இறுதி செய்கிறதா மநீம?.. திடீர் ஆலோசனையில் கமல்ஹாசன்!

Google Oneindia Tamil News

சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் செயற்குழு, பொதுக் குழு உறுப்பினர்கள் கூட்டம் இன்று மாலை தொடங்கவுள்ள நிலையில் தற்போது முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்திற்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. அடுத்தது கூட்டணி பேச்சுவார்த்தைகளை அரசியல் கட்சிகள் முடுக்கிவிட்டுள்ளன. இந்த நிலையில் அதிமுக கூட்டணியிலிருந்து சரத்குமாரும், திமுக கூட்டணியிலிருந்து பச்சமுத்துவும் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளனர்.

Makkal Needhi Maiam party convenes today to discuss about alliance

இந்த கூட்டணியில் இணைய மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசனை நேற்று சந்தித்து பேசினர். விரைவில் தனது முடிவை சொல்வதாக கமல் அறிவித்திருந்தாராம். இந்த நிலையில் நேற்றைய தினம் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பிலேயே கூட்டணி குறித்து கமல் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவர் அறிவிக்கவில்லை. இந்த நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் செயற்குழு, பொதுக் குழு உறுப்பினர்களுடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்தப்படுகிறது. அடுத்த 3 நாட்களுக்கு நிர்வாகிகள் சென்னையிலேயே இருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் ஐஜேகே- சமக கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என்றும் மார்ச் 7ஆம் தேதி முதற்கட்ட வாக்காளர் பட்டியல் வெளியாகும் என கமல் அறிவித்ததால் வேட்பாளர் தேர்வு குறித்தும் ஆலோசிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

English summary
Makkal Needhi Maiam party convenes today to discuss about alliance.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X