சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிரஷாந்த் கிஷோர் கொடுத்த ஐடியா... பிடிவாதம் பிடிக்கும் கமல்

Google Oneindia Tamil News

Recommended Video

    பிரஷாந்த் கிஷோர் கொடுத்த ஐடியா... பிடிவாதம் பிடிக்கும் கமல்

    சென்னை: தேர்தல் சாணக்யன் என அழைக்கப்படும் பிரஷாந்த் கிஷோர் கொடுத்த சில ஐடியாக்களை ஏற்றுக்கொள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் அதிகம் யோசிக்கிறாராம்.

    மேலும்,ஊழல் குற்றச்சாட்டு உள்ளவர்களுடன் கரம் கோர்ப்பதில்லை என்ற முடிவில் கமல் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.

    இதனால் பிரஷாந்த் கிஷோர் மேற்கொண்டு கமல்ஹாசனுக்கு ஆலோசனைகள் வழங்குவாரா எனத் தெரியவில்லை என்றும், அது கேள்விக்குறியாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    மகாராஷ்டிரம்: நாங்கதான் அதிக இடங்களில் ஜெயிச்சிருக்கோம்.. முதல்வர் பதவி எங்களுக்கே.. பாஜக உறுதிமகாராஷ்டிரம்: நாங்கதான் அதிக இடங்களில் ஜெயிச்சிருக்கோம்.. முதல்வர் பதவி எங்களுக்கே.. பாஜக உறுதி

    கணிசமான வாக்கு

    கணிசமான வாக்கு

    கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு அனைத்து தொகுதிகளிலும் கணிசமான வாக்குகளை பெற்று அரசியல் கட்சிகளை திரும்பி பார்க்க வைத்தது. அந்த தேர்தல் முடிவு தந்த உற்சாகம் கமலை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவது பற்றி சிந்திக்க வைத்துள்ளது.

    புதிய கட்டமைப்பு

    புதிய கட்டமைப்பு

    பிக்பாஸ் நிகழ்ச்சி அண்மையில் முடிந்ததை அடுத்து மீண்டு கட்சி நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார் கமல். அந்த வகையில் கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்தும் நோக்கில் புதிய நிர்வாகிகளை கடந்த வாரம் நியமித்தார்.

    வியூகம்

    வியூகம்

    சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒன்றை ஆண்டுகள் மட்டுமே உள்ளதால், இப்போதே அதற்கான வியூகத்தை வகுக்கத் தொடங்கிவிட்டார் கமல். சத்தமில்லாமல் இதற்காக பிரஷாந்த் கிஷோர் தரப்புடன் பேசி வருகிறார்.

    சேர்ந்து செயல்படுங்கள்

    சேர்ந்து செயல்படுங்கள்

    சட்டமன்றத் தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்ள வேண்டும் என்றால் சில அரசியல் கட்சிகளை ஒருங்கிணைத்து, அதனை அணியாக மாற்ற வேண்டும் என கமலுக்கு பிரஷாந்த் கிஷோர் ஆலோசனை வழங்கினாராம். மேலும், டிடிவி தினகரன், போன்ற தலைவர்களை ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனக் கமலிடம் அவர் கூறியதாக தெரிகிறது.

    பிடிவாதம்

    பிடிவாதம்

    இந்நிலையில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான யாருடனும் தாம் சேர்ந்து செயல்படமாட்டேன் என்றும், ஊழல் கறை படிந்தவர்களுடன் இணைந்து தான் வெற்றிபெற வேண்டும் என்ற நிலை தமக்கு இல்லை எனவும் கமல் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டாராம்.

    கேள்விக்குறி

    கேள்விக்குறி

    நடப்பு விவகாரம் பற்றி அறியாமல் கமல் இப்படி பிடிவாதம் பிடிப்பது பிரஷாந்த் கிஷோரை யோசிக்க வைத்துள்ளதாம். இதனால் தொடர்ந்து அவர் கமல் கட்சிக்கு ஆலோசனைகள் வழங்குவாரா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

    English summary
    makkal needhi maiam president Kamalhassan refuses to accept Prashant Kishore's Idea
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X