சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தேர்தலில் போட்டியில்லை.. கமல் அறிவிப்பு.. வெளியானது மநீம கட்சியின் 2ம் கட்ட வேட்பாளர் லிஸ்ட்!

லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பாக போட்டியிட இருக்கும் வேட்பாளர்களின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று காலை வெளியிடப்பட உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட கமல்ஹாசன்- வீடியோ

    சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பாக போட்டியிட இருக்கும் வேட்பாளர்களின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் லோக்சபா மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்துள்ளார்.

    வரும் ஏப்ரல் 11ம் தேதி லோக்சபா தேர்தல் தொடங்குகிறது. தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடக்கிறது.

    இந்த லோக்சபா தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் போட்டியிட உள்ளது. லோக்சபா தேர்தல் மற்றும் தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் இரண்டிலும் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடுகிறது.

    மக்கள் நீதி மய்யம் தொடங்கியது ஏன்? - 8 சம்பவங்களை பட்டியலிட்ட கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் தொடங்கியது ஏன்? - 8 சம்பவங்களை பட்டியலிட்ட கமல்ஹாசன்

    கெத்து

    கெத்து

    இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிட உள்ளது. பெரிய கட்சிகளை மநீம தனியாக எதிர்கொள்ள உள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இந்திய குடியரசுக் கட்சி போன்ற சில சிறிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளது.

    பட்டியல்

    பட்டியல்

    இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் கடந்த வாரம் வெளியானது. 21 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட பட்டியல் வெளியானது.

    வட சென்னை - மவுரியா
    மத்திய சென்னை கமீலா நாசர்
    ஸ்ரீபெரும்புதூர் - ஸ்ரீதர் (சிவக்குமார் மாற்றப்பட்டார்)
    அரக்கோணம் - ராஜேந்திரன்
    வேலூர் - சுரேஷ்
    கிருஷ்ணகிரி - எஸ். ஸ்ரீகாருண்யா
    தருமபுரி - வழக்கறிஞர் ராஜசேகர்
    விழுப்புரம் (தனி)- வழக்கறிஞர் அன்பின் பொய்யாமொழி
    சேலம்- பிரபு மணிகண்டன்
    நீலகிரி (தனி) - ராஜேந்திரன்
    திண்டுக்கல் - டாக்டர் சுதாகர்
    திருச்சி - வி. ஆனந்தராஜா
    சிதம்பரம் (தனி)- டி.ரவி
    மயிலாடுதுறை - ரிபாயுதீன்
    நாகப்பட்டினம் (தனி) - குருவய்யா
    தேனி - வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன்
    தூத்துக்குடி - பொன் குமரன்
    திருநெல்வேலி - வென்னிமலை
    கன்னியாகுமரி - எபனேசர்
    புதுச்சேரி - சுப்பிரமணியம்
    திருவள்ளூர் (தனி)- டாக்டர். லோக ரங்கன்

    ஆலோசனை நடந்தது

    ஆலோசனை நடந்தது

    இதையடுத்து இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை தயார் செய்ய தீவிரமான ஆலோசனை நடந்தது. மக்கள் நீதி மய்ய உறுப்பினர்களுடன் கமல்ஹாசன் தீவிரமாக ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு நேற்று முதல்நாள் இந்த இரண்டாம் கட்ட பட்டியல் இறுதி செய்யப்பட்டு நேற்று சில மாற்றங்கள் செய்யப்பட்டது

    பட்டியல் வெளியானது

    பட்டியல் வெளியானது

    இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் லோக்சபா மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்துள்ளார்.

    லோக்சபா தேர்தல்: மநீம இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது.

    • காஞ்சிபுரம் - என் தங்கராஜ்
      • ஆரணி - வீ ஷாஜி
        • கள்ளக்குறிச்சி - எச்.கணேஷ்
          • நாமக்கல் - ஆர். தங்கவேல்
            • ஈரோடு - சரவணகுமார்
              • ராமநாதபுரம் - ஜெ. விஜயபாஸ்கர்
                • கரூர் - டாக்டர் ஹரிஹரன்
                  • தஞ்சாவூர் - சம்பத் ராமதாஸ்
                    • மதுரை - எம்.அழகர்
                      • தென் சென்னை - ரங்கராஜன்
                        • கடலூர் - வீ.அண்ணாமலை
                          • விருதுநகர் - வீ.முனியசாமி
                            • தென்காசி - முனீஸ்வரன் கே
                              • திருப்பூர் - வி எஸ் சந்திரகுமார்
                                • பொள்ளாச்சி - ஆர். மூகாம்பிகை
                                  • கோவை - ஆர். மகேந்திரன்
                                    • பெம்பலூர் - அருள் பிரகாசம்
                                      • சிவகங்கை - சினேகன், ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
    இடைதேர்தல் வேட்பாளர்

    இடைதேர்தல் வேட்பாளர்

    18 தொகுதி சட்டப்பேரவை தேர்தல் : மநீம வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது.

    • பாப்பிரெட்டிப்பட்டி - எம். நல்லதம்பி
      • அரூர் - குப்புசாமி
        • நிலக்கோட்டை- ஆர் சின்னதுரை
          • திருவாரூர்- கே அருண் சிதம்பரம்
            • தஞ்சை- துரையரசன்
              • மானாமதுரை- எம் ராமகிருஷ்ணன்
                • ஆண்டிப்பட்டி- தங்கவேல்
                  • பெரியகுளம்- கே பிரபு
                    • சாத்தூர் - என் சுந்தரராஜன்
                      • பரமக்குடி- உக்கிரபாண்டியன்
                        • விளாத்திகுளம் - நடராஜன்
                          • பூந்தமல்லி சட்டசபை தொகுதி- பூவை ஜெகதீஷ்
                            • பெரம்பூர்- வீ பிரியதர்ஷினி
                              • திருப்போரூர்- கே யூ கருணாகரன்
                                • சோளிங்கர்- கே எஸ் மலைராஜன்
                                  • குடியாத்தம்- பி வெங்கடேசன்
                                    • ஆம்பூர்- நந்தகோபால்
                                      • ஓசூர்- ஜெயபால்

    English summary
    Makkal Needhi Maiam all set to release its last list of candidates' Lok Sabha elections today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X