சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மகளுடன் வந்து வாக்களித்தார் கமல்.. மக்களுடன் மக்களாக வரிசையில் நின்று!

மகளுடன் வரிசையில் நின்று வாக்களித்து விட்டு சென்றார் கமல்ஹாசன்

Google Oneindia Tamil News

Recommended Video

    Kamal Haasan: மக்களுடன் மக்களாக வரிசையில் நின்று வாக்களித்த கமல்- வீடியோ

    சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது மகள் ஸ்ருதி ஹாசனுடன் வரிசையில் நின்று வாக்களித்தார்.

    கமலுக்கு இது மிக முக்கியமான தேர்தல் கட்சி ஆரம்பித்து முதல் தேர்தலை சந்திக்கிறார். தங்கள் கட்சியின் செல்வாக்கை எடை பார்க்கக்கூடிய தேர்தல்.. தாங்கள் எந்த இடத்தில் அரசியலில் இடம் பெற்றுள்ளோம் என்பதை சீர்தூக்கி நிறுத்தி பார்க்கக்கூடிய தேர்தல்.. இது கமலே எடுத்துள்ள முழுமையான ரிஸ்க்!

    அந்த வகையில், இன்றைய வாக்குபதிவில் அரசியல் தலைவர்கள், திரைபிரபலங்கள் என பலர் ஆர்வமுடன் வாக்களித்து வருகிறார்கள் என்றால், அரசியல் தலைவரும், திரைபிரபலமுமான கமல்ஹாசனும் இன்று வாக்களித்தார். உடன் தன் மகள் சுருதிஹாசனும் வந்திருந்தார்.

    வாக்குச்சாவடிகளில் வீல் சேர்கள் பற்றாக்குறை.. ஆர்வமுடன் வரும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் அவதி வாக்குச்சாவடிகளில் வீல் சேர்கள் பற்றாக்குறை.. ஆர்வமுடன் வரும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் அவதி

    வரிசையில் நின்றனர்

    வரிசையில் நின்றனர்

    ஆழ்வார்பேட்டையில் உள்ள பூத்திற்கு ஒயிட் கலர் டீ-ஷர்ட்டில் கமலும், பிளாக் கலர் டிரஸ்ஸில் சுருதிஹாசனும் வந்திருந்தனர். இருவருமே வாக்குசாவடியில் இருந்த வரிசையில் போய் நின்றுகொண்டனர். கமல் சுற்றி நின்றிருந்தவர்களை திரும்பி திரும்பி பார்த்து கொண்டே இருந்தார்.

    போஸ் கொடுத்தார்

    போஸ் கொடுத்தார்

    கமலுடன் பலரும் ஓடி வந்து புகைப்படம் எடுத்தனர். அவர்களுக்கு அமைதியாக போஸ் கொடுத்த கமல் அதேசமயம், மற்றவர்கள் வாக்களிப்பதற்கு இடையூறு செய்யாமல் வரிசையில் வாங்க என்றும் அவர்களிடம் அன்போடு கேட்டுக் கொண்டார்.

    கரண்ட் போய்விட்டது

    இந்த நிலையில் கமல் வாக்களிக்க இருந்த வாக்குச்சாவடியில் திடீரென மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் தாமதம் ஏற்பட்டது. அதன்பின்னர் நிலைமை சீரான பிறகு கமலும், சுருதியும் ஓட்டுபோட்டுவிட்டு வெளியே வந்தனர்.

    அழைப்பு

    அழைப்பு

    பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கமல், "நான் எனது கடமையை செய்ததை போல, அனைவரும் தங்கள் ஜனநாயக கடமையாற்ற வேண்டும்" என்று அழைப்பு விடுத்தார். ஆனால் அரசியல் தொடர்பாக எந்த கருத்தும் கமல் சொல்லவில்லை.

    English summary
    Makkal Neethi Maiyam Leader Kamal hasan casts his vote in Chennai Alwarpet
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X