சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மோடி பதவி ஏற்பு விழாவுக்கு வரக்கூடாது என நெருக்கடி... மமதா பகீர் புகார்

Google Oneindia Tamil News

Recommended Video

    மோடி பதவி ஏற்பு விழாவுக்கு வரக்கூடாது என நெருக்கடி - மமதா புகார்

    கொல்கத்தா: பிரதமர் மோடியின் நாளைய பதவி ஏற்பு விழாவுக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக தமக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது; அதனால் தாம் அந்த விழாவில் பங்கேற்கவில்லை என மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி பகீர் புகாரை கிளப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    லோக்சபா தேர்தலில் மமதா பானர்ஜியை மிரட்டிவிட்டது பாஜக. அம்மாநிலத்தில் பாஜகவுடன் இடதுசாரிகள் கை கோர்த்ததால் 18 தொகுதிகளை அள்ளியது பாஜக.

    அத்துடன் மமதா பானர்ஜியின் அரசை கலைக்கும் வகையில் எம்.எல்.ஏக்களை வளைத்துப் போடும் நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கிறது பாஜக. உள்ளாட்சியில் பெரும்பான்மை இடங்களை அள்ளிவிட வேண்டும் என்பதற்காக இப்போதே கவுன்சிலர்களை இழுத்துக் கொண்டு இருக்கிறது பாஜக.

    ராஜினாமாவை தடுக்க.. ராகுல் வீடு முன் தர்ணாவில் ஈடுபடும் ஷீலா தீட்சித்! ராஜினாமாவை தடுக்க.. ராகுல் வீடு முன் தர்ணாவில் ஈடுபடும் ஷீலா தீட்சித்!

    கட்சி அலுவலகங்கள் கபளீகரம்

    கட்சி அலுவலகங்கள் கபளீகரம்

    மேலும் மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை தேர்தல் களம் என்றாலே வன்முறைகள்தான். அதுவும் ஒரு அரசியல் கட்சி வென்றுவிட்டால் போதும். அது ஆடும் ருத்ரதாண்டவம் 5 ஆண்டுகளுக்கும் நீடிக்கும். அம்மாநிலத்தில் 8 ஆண்டுகளுக்கு முன்னர் இடதுசாரிகளை வீழ்த்திய பெருமிதத்தில் அவர்களது அத்தனை கட்சி அலுவலகங்களையும் கைப்பற்றி திரிணாமுல் அலுவலகங்களாக்கிக் கொண்டனர். இப்போது லோக்சபா தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில் தங்களது கட்சி அலுவலகங்களை இடதுசாரிகள், பாஜக உதவியுடன் மீட்டிருக்கின்றனர்.

    பாஜக அழைப்பு

    பாஜக அழைப்பு

    இப்படி அத்தனை முனைகளிலும் மமதாவை கதிகலங்க வைத்துக் கொண்டிருக்கும் பாஜக, மாநில முதல்வர் என்கிற அடிப்படையில் மோடியின் பதவி ஏற்பு விழாவுக்கு அழைப்பு விடுத்தது. மமதாவும் இதனை ஏற்றுக் கொண்டு டெல்லி செல்வதாக கூறியிருந்தார்.

    மமதா அறிக்கை

    இதனிடையே திடீரென மமதா பானர்ஜி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தாம் டெல்லி பயணம் செய்ய திட்டமிட்டிருந்தேன். நான் பயணம் செய்வதற்கு 1 மணிநேரத்துக்கு முன்பாக ஊடகங்களில் திட்டமிட்டு ஒரு செய்தி தொடர்ந்து பரப்பப்படுகிறது.

    அரசியல் படுகொலையே இல்லை

    அரசியல் படுகொலையே இல்லை

    மேற்கு வங்கத்தில் 59 அரசியல் படுகொலைகள் நடந்துள்ளதாக அச்செய்தியில் திரும்ப திரும்ப கூறப்படுகிறது. என்னுடைய ஆட்சியில் ஒரு அரசியல் படுகொலை கூட நடைபெற்றது இல்லை. வெவ்வேறு காரணங்களால் நிகழ்ந்த மரணங்களை அரசியல் படுகொலையாக சித்தரிப்பது என்பது நான் மோடியின் பதவி ஏற்பு விழாவில் கட்டாயம் கலந்து கொள்ள கூடவே கூடாது என்கிற நெருக்கடியை உருவாக்கியுள்ளனர். ஆகையால் என்னால் பங்கேற்க முடியாது என்கிற வருத்தத்தை தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    பரபரப்பை கிளப்பிய மமதா

    பரபரப்பை கிளப்பிய மமதா

    அரசியல் படுகொலைக்குள்ளான பாஜக தொண்டரை மோடி பதவி ஏற்பு விழாவுக்கு அழைத்ததை முன்வத்தே ஊடகங்கள் இப்படி செய்தி வெளியிட்டன. இதனைத் தொடர்ந்து மமதா இத்தகைய காட்டமான அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். மமதாவின் இந்த அறிக்கை தேசிய அரசியலில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் கிளப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    West Bengal Chief Minsiter Mamata will not attend PM Modi's Oath-Taking Ceremony.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X