சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உதயநிதி ஸ்டாலின் பெயருக்கு பெங்காலியில் அர்த்தம் கூறி அசரடித்த மம்தா.. திக்குமுக்காடிய ஸ்டாலின்

Google Oneindia Tamil News

Recommended Video

    உதயநிதி பெயருக்கு அர்த்தம் கூறி அசரடித்த மம்தா.. திக்குமுக்காடிய ஸ்டாலின்-வீடியோ

    சென்னை: உதயநிதியின் பெயருக்கு வங்காள மொழியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விளக்கம் கூறியிருந்தார்.

    கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. முன்னதாக ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது. இந்த பேரணி அண்ணா சாலையில் தொடங்கி கருணாநிதி நினைவிடத்தை அடைந்தது.

    முரசொலி அலுவலகத்தில் கருணாநிதியின் சிலைத் திறப்பு விழாவும் நடைபெற்றது.

    அமித்ஷா... செங்கோட்டை முதல் செளகார்பேட்டை வரை.. அல்லு தெறிக்கும் ஆச்சரிய அரசியல்! அமித்ஷா... செங்கோட்டை முதல் செளகார்பேட்டை வரை.. அல்லு தெறிக்கும் ஆச்சரிய அரசியல்!

    கருணாநிதி சிலை

    கருணாநிதி சிலை

    இந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வருகை தந்தார். சென்னை கோடம்பாக்கத்திலுள்ள முரசொலி அலுவலகத்தில் கருணாநிதியின் சிலையை அவர் திறந்து வைத்தார்.

    நினைவு தின பொதுக் கூட்டம்

    நினைவு தின பொதுக் கூட்டம்

    பின்னர் மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்துக்கு சென்று மலர்த் தூவி அஞ்சலி செலுத்தினார். இதைத் தொடர்ந்து ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற கருணாநிதி நினைவு தின பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

    உதயநிதி ஸ்டாலின்

    உதயநிதி ஸ்டாலின்

    அந்த கூட்டத்தில் அவர் பேசுகையில் கருணாநிதி தமிழகத்தின் தந்தையை போன்றவர். அவர் மாநில சுயாட்சிக்காக தொடர்ந்து போராடி வந்தார். திமுகவின் சின்னம் உதயசூரியன். முக ஸ்டாலின் மிகவும் புத்திசாலி. அவரது மகனுக்கு உதயநிதி ஸ்டாலின் என பெயர் வைத்துள்ளார்.

    ரைசிங் என அர்த்தம்

    ரைசிங் என அர்த்தம்

    உதய் என்றால் பெங்காலி மொழியில் ரைசிங் என அர்த்தம் என விளக்கமளித்தார். மம்தாவின் பேச்சைக் கேட்டு முக ஸ்டாலினும் உதயநிதி ஸ்டாலினும் திக்குமுக்காடி சிரித்தனர்.

    English summary
    Mamta Banerjee gives explanation for Udhayanidhi Stalin's name in Bengali in the Karunanidhi Statue Opening ceremony.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X