சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னையில் நடந்து சென்ற அமித்ஷா மீது பதாகை வீசிய நபர் கைது

சென்னை வந்த அமித்ஷா விமான நிலையம் அருகே நடந்து சென்ற போது ஒருவர் பதாகையை வீசி எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Google Oneindia Tamil News

சென்னை: அமித் ஷா நடந்து சென்று கொண்டிருந்த போது திடீரென ஒருவர் பதாகையை வீசி எறிந்தார். அந்த நபரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அமித் ஷா எதையும் கண்டுகொள்ளாமல் கை அசைத்தவாறே சென்றுவிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாட்கள் பயணமாக சென்னை வந்திருக்கிறார். சென்னை விமான நிலையம் வந்தடைந்த அமித்ஷாவை முதல்வர் பழனிசாமி, அதிமுக அமைச்சர்கள், பாஜக மாநில தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் வரவேற்றனர். அவர்களுடன் பாஜகவின் முக்கிய பிரமுகர்களும் உடன் இருந்தனர்.

Man arrested for throwing banner at Amit Shah

அமித்ஷாவின் வருகையையொட்டி சென்னையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கும் நிலையில், அவர் விமான நிலையத்தில் இருந்து லீலா பேலஸுக்கு காரில் அழைத்துச் செல்லப்பட்டார்.

வழி நெடுகிலும் பாஜகவினர் குவிந்து அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதிமுகவினரும் கைகளில் அதிமுக கட்சி கொடியை உயரப் பிடித்துக் கொண்டு வரவேற்பு அளித்தனர்.

இந்த நிலையில், வி.எஸ்.கே சாலையில் காரில் இருந்து இறங்கி, தொண்டர்களை நோக்கி கையசைத்துக் கொண்டு நடந்து சென்ற அமித்ஷாவை நோக்கி ஒரு நபர் பதாகையை வீசி எறிந்தார். அது அமித்ஷாவின் மீது விழவில்லை.

விமான நிலையத்திலிருந்து காரில் புறப்பட்ட அமித்ஷா.. தொண்டர்களை பார்த்தவுடன் இறங்கி நடந்தே பயணம்விமான நிலையத்திலிருந்து காரில் புறப்பட்ட அமித்ஷா.. தொண்டர்களை பார்த்தவுடன் இறங்கி நடந்தே பயணம்

அங்கிருந்தவர்கள் உடனே அந்த நபரை பிடித்து விசாரித்தனர். காவல்துறையினர் அந்த நபரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அந்த நபர் சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த துரைராஜ்,60 என்று தெரியவந்துள்ளது. இவரை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சாலையில் கிடந்த பதாகைகளை காவலர்கள் அப்புறப்படுத்தினர். ஆனால் இதைப்பற்றி எல்லாம் அமித் ஷா கண்டுகொள்ளாமல் கை அசைத்தவாறே சென்றுவிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கைது செய்யப்பட்ட அந்த நபர் மன நலம் குன்றியவர் என்று தெரியவந்துள்ளது.

English summary
While Amit Shah was walking, suddenly someone threw a banner. The police who arrested the person are investigating. Amit Shah waved and walked away without noticing anything. This video is going viral on social media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X