சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

5 கோடி மட்டுமில்லீங்க.. என் பொண்டாட்டியையும் சேர்த்து எடுத்துட்டாரு.. எஸ்ஐ மீது பரபரப்பு புகார்!

ரூ.5 கோடி மோசடி குறித்து எஸ்ஐ மீது புகார் எழுந்துள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: "5 கோடி ரூபாய் மட்டுமில்லை.. என் பொண்டாட்டியையும் சேர்த்து எடுத்துக்கிட்டார் அந்த எஸ்ஐ.. இது சம்பந்தமான நடவடிக்கை வேண்டும்" என்று கணவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் தந்துள்ளார்.

சென்னை கேகே நகரை சேர்ந்த தம்பதி ஜனார்த்தனன் - நர்மதா.. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஜனார்த்தனன் துபாயில் வேலை பார்க்கிறார்.. வெளிநாடு வாழ் இந்தியரும்கூட... இந்த சமயத்தில் திருநின்றவூர் போலீஸ் எஸ்ஐ ராஜேஷ் மீது நர்மதாவுக்கு கள்ள உறவு ஏற்பட்டுள்ளது.

மேலும் வெளிநாட்டில் இருந்து கஷ்டப்பட்டு சம்பாதித்து அனுப்பும், பணம் சொத்துக்களை ராஜேஷூக்கு நர்மதா தந்து வந்ததாகவும் தெரிகிறது.

தனிமை

தனிமை

போன மே மாசம் சென்னைக்கு வந்திருந்தார் ஜனார்த்தனன். அப்போதுதான் மனைவியின் பல சமாச்சாரங்கள் வெளிவந்தன. ஒருநாள் இவர்கள் இருவரும் தனிமையில் சந்தித்து பேசியபோது பின்னாடியே போய் போட்டோவும் எடுத்துள்ளார். இதற்கு பிறகுதான் போலீசுக்கு புகார் தர வந்தார் ஜனார்த்தனன்!

கமிஷனர்

கமிஷனர்

சென்னை கமிஷனரிடம் ஜனார்த்தனன் அளித்த அந்த புகாரில், "எஸ்ஐ ராஜேஷூக்கும், நர்மதாவுக்கும் கள்ள உறவு இருக்கிறது.. அதை தட்டிக்கேட்டபோது ராஜேஷ் தனக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.. ராயலா நகர் பார்க்கில் நர்மதாவும், ராஜேஷூம் தனிமையில் சந்தித்தபோது, அவர்கள் பின்னாடியே போய் போட்டோ எடுத்தேன்.

சொத்துக்கள்

சொத்துக்கள்

இதை இதை பார்த்த ராஜேஷ் என்னை சரமாரியாக அடித்துவிட்டார்.. குழந்தைகள் பெயரில் வாங்கிய 5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை எஸ்ஐயுடன் சேர்ந்து நர்மதா அபகரித்து கொண்டார்.. இதன்மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

போலீஸ்காரரை பற்றியே இப்படி ஒரு பகீர் புகார் கிளம்பி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அத்துடன் இரு தரப்பையும் தீர விசாரித்து உரிய முடிவை காவல்துறை எடுக்க வேண்டும் என்பதே பெரும் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

English summary
man complaint against his wife and chennai sub inspector in commissioner office
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X