சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எப்ப பண்ணாலும் நர்மதா போன் பிஸி.. அங்கதான் டவுட் வந்துச்சு.. ராஜேஷ்தான் காரணம்.. ஜனார்த்தனன் குமுறல்

சப் இன்ஸ்பெக்டர் - மனைவி மீது கணவன் புகார் அளித்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: "எப்ப போன் பண்ணாலும் நர்மதா போன் பிஸி.. சில சமயம் என் போனை எடுக்கவே மாட்டார்.. இங்க தான் எனக்கு டவுட் ஆரம்பிச்சது.. என் பொண்டாட்டி, பணம் எல்லாமே போச்சு" என்று எஸ்.ஐ ராஜேஷூடன் மனைவி நர்மதாவுக்கு உள்ள கள்ள தொடர்பு பற்றி புலம்புகிறார் கணவன் ஜனார்த்தனன்!

சென்னை கேகே நகரை சேர்ந்த தம்பதி ஜனார்த்தனன் - நர்மதா.. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஜனார்த்தனன் துபாயில் வேலை பார்க்கிறார்.. வெளிநாடு வாழ் இந்தியரும்கூட.

இந்த சமயத்தில் திருநின்றவூர் போலீஸ் எஸ்ஐ ராஜேஷ் மீது நர்மதாவுக்கு கள்ள உறவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

போட்டோக்கள்

போட்டோக்கள்

மேலும் வெளிநாட்டில் இருந்து கஷ்டப்பட்டு சம்பாதித்து அனுப்பும், பணம் சொத்துக்களை ராஜேஷூக்கு நர்மதா தந்து வந்ததாகவும் தெரிகிறது. போன மே மாசம் சென்னைக்கு வந்திருந்தார் ஜனார்த்தனன். அப்போதுதான் மனைவியின் பல சமாச்சாரங்கள் வெளிவந்தன. ஒருநாள் இவர்கள் இருவரும் தனிமையில் சந்தித்து பேசியபோது பின்னாடியே போய் போட்டோவும் எடுத்துள்ளார். இதற்கு பிறகுதான் போலீசுக்கு புகார் தர வந்தார் ஜனார்த்தனன்!

ஜனார்த்தனம்

ஜனார்த்தனம்

புகார் மனுவில் ஜனார்த்தனம் சொன்னதாவது: "நான் துபாயில் வேலை பார்த்து வருகிறேன்.. என் மனைவி பெயர் நர்மதா. 2 குழந்தைகள் உள்ளனர். என் மனைவிக்கும் திருநின்றவூரில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்க்கும் ராஜேஷூக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதை நான் கண்டித்தேன்.. அதனால் எனக்கும் என் சகோதரி குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள்.

நடவடிக்கை

நடவடிக்கை

என் குழந்தைகளை பார்க்க நான் சென்றபோது, ராஜேஷ், நர்மதா 2 பேரும் பேசிக் கொண்டிருந்தனர். அதைக் கண்டித்தேன்.. அப்போது ராஜேஷ் என்னை தாக்கினார். என்னைத் தாக்கிய ராஜேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

மாமியார் வீடு

மாமியார் வீடு

ஜனார்த்தனன் வெளிநாட்டில் இவர் வேலை பார்த்தாலும், சென்னையில் சொந்தமாக ஒரு கம்பெனி தொடங்கி உள்ளார்.. அதையும் நர்மதாதான் கவனித்து கொள்கிறாராம்.. மாமியார் வீட்டு தொந்தரவு காரணமாக, குழந்தைகளுக்கு லட்சக்கணக்கான ரூபாய் சொத்தை உயிர் எழுதி வைத்து அதையும் ஏமாற்றி விட்டதாக ஜனார்த்தனன் சொல்கிறார்.. எப்போ போன் பண்ணாலும், நர்மதா போன் பிஸியாகவே இருக்குமாம்.. சில நேரம் போனே எடுக்கவும் மாட்டாராம்.. இப்படியெல்லாம் ஜனார்த்தனன் குற்றஞ்சாட்டுகிறார்.

மறுப்பு

மறுப்பு

ஆனால் இது அத்தனையையும் நர்மதா மறுக்கிறாராம். "ஜனார்த்தனனுக்கு குடிப்பழக்கம், சூதாடும் பழக்கம் உள்ளதால், அதில்தான் லட்சக்கணக்கான ரூபாயை இழந்தார். என் குடும்பத்தினர்தான் சொத்துக்களை விற்று அதை சரி செய்தனர்.. குழந்தைகளுக்கு உயில் எழுதி வைத்தது அவரது சுயநினைவோடுதான்.

மிரட்டல்

மிரட்டல்

ஜனார்த்தனனின் சகோதரி, கட்சியில் இருக்கிறார்.. அவர் சொல்லிதான் போலீசில் புகார் தந்தார்.. எனக்கு மாமியார் வீட்டு தரப்பில் நிறைய மிரட்டல் வந்தது.. அந்த சமயத்தில் கேகே நகரில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்த ராஜேஷ் சட்டப்படி எனக்கு உதவினார்.. ஆனால் எங்களை தவறாக ஜனார்த்தனன் பேசுகிறார்.. இப்படி தொடர் தொல்லைகள் தந்ததால், கோர்ட்டில் டைவர்ஸ்-க்கும் அப்ளை செய்திருக்கிறேன்" என்று அவர் தரப்பு நியாயத்தை எடுத்து வைக்கிறார்.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

எனினும், இதில் யார் பக்கம் உண்மை என்பது சரியாக தெரியவில்லை.. ஆனால், போலீஸ்காரரை பற்றியே இப்படி ஒரு பகீர் புகார் கிளம்பி உள்ளதால், இரு தரப்பையும் தீர விசாரித்து உரிய முடிவை காவல்துறை எடுக்க வேண்டும் என்பதே பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

English summary
man complaint against wife and SI in chennai commissioner office and enquiry is going on it
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X