• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

சென்னையில் திடுக்கிடும் சம்பவம்.. அப்பாவை கொடூரமாக கொலை செய்து டிரம்மில் போட்டு புதைத்த மகன்!

Google Oneindia Tamil News

சென்னை: சொத்து தகராறு காரணமாகத் தந்தை கொன்ற மகன், அதை சினிமாவை மிஞ்சும் வகையில் மறைக்க முயன்ற சம்பவத்தை போலீசார் கண்டறிந்துள்ளனர்.

சென்னை வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் வசித்து வந்தவர் குமரேசன்(78). ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியரான இவருக்கு குணசேகரன் என்ற மகனும், காஞ்சனாமாலா, யமுனா, பரிமளா ஆகிய மூன்று மகள்களும் உள்ளனர்.

குமரேசன் மனைவி இறந்த காரணத்தினாலும் மூத்த மகளான காஞ்சனாமாலாவின் கணவர் இறந்து இறந்து விட்டதால் தான் தங்கியிருந்த வீட்டின் முதல் தளத்தில் தன் மகள் காஞ்சனமாலா உடன் வசித்து வந்தார். அவரது மகன் குணசேகரன் தரைதளத்தில் அவரது குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

வாடகை

வாடகை

சென்னை வளசரவாக்கத்தில் குமரேசனுக்கு செந்தமான வீடுகள் உள்ளது. இந்த வீடுகளை வாடகைக்கு விட்டு, அதன் மூலம் மாதம் 2.5 லட்சம் ரூபாய் வாடகை வந்துள்ளது. தனது ஓய்வூதியம் மற்றும் வாடகை பணத்தை வைத்து குமரேசன் தனது மகள்களுக்கே செலவு செய்து வந்ததால், மகன் குணசேகரன் தனது தந்தை மீது கோபத்தில் இருந்ததாக்க கூறப்படுகிறது.

கொலை

கொலை

இந்நிலையில், காஞ்சனாமாலா கடந்த 15ஆம் தேதி வெளியே சென்ற போது வீட்டில் குமரேசன் தனியாக இருந்ததுள்ளார். அந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு, குணசேகரன் தனது தந்தையையே கொடூரமாகக் கொலை செய்துள்ளார். மேலும், உடலை மறைக்க அதை இரும்பு டிரம்மில் அடைத்து, அதில் உப்பைக் கொட்டி பதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. அடுத்து உடை எப்படி மறைக்கலாம் என்பது குறித்துத் திட்டமிட்ட குணசேகரன் அதற்கும் ஒரு பிளான் போட்டுள்ளார்.

சூனியம்

சூனியம்

காவேரிப்பாக்கத்தில் உள்ள வெங்கடேசன் என்பவருக்குச் சொந்தமான நிலத்தை வாங்குவதாகக் கூறி அந்த நிலத்தைப் பார்வையிட்டுள்ளார். அப்போது வெங்கடேசனிடம் தனக்கு யாரோ சூனியம் வைத்திருப்பதாகக் கூறிய குணசேகரன், அதனை மந்திரவாதியின் உதவியோடு எடுத்து பிலாஸ்டிக் டிரம்மில் அடைந்துள்ளதாகவும் புதிதாக வாங்கும் இடத்தில் அதைப் புதைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

புதைக்க உதவி

புதைக்க உதவி

இதனை நம்பிய வெங்கடேசன் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் உதவியோடு காவேரிப்பாக்கம் தஞ்சை நகரில் உள்ள வெங்கடேசனுக்கு சொந்தமான இடத்தில் கடந்த 19ஆம் தேதி பட்டப்பகலில் குமரேசனின் உடல் இருக்கும் டிரம்மை தோண்டி புதைத்துள்ளனர். தனது தந்தை மாயமடைந்ததால் சந்தேகமடைந்த காஞ்சனாமாலா, இது குறித்து சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். குமரேசன் மாயமானது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கினர்.

துர்நாற்றம்

துர்நாற்றம்

குமரேசன் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, அங்கே துர்நாற்றம் வீசியுள்ளது. மேலும், ஆங்காங்கே ரத்தக் கறைகளும் இருந்துள்ளது. இதையடுத்து போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். இந்தச் சூழலில் தான் காஞ்சனாமாலாவுடன் சேர்ந்து தந்தையைத் தேடிக்கொண்டிருந்த மகன் குணசேகரன் திடீரென மாயமானார். இதில் சந்தேகமடைந்த போலீசார், குணசேகரனின் மனைவி வசந்தியிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 18ஆம் தேதி காவேரிப்பாக்கத்தில் உள்ள வெங்கடேசனை சந்திக்கச் சென்றதைக் கூறியுள்ளார்.

போலீசார் விசாரணை

போலீசார் விசாரணை


இதையடுத்து சிசிடிவி காட்சிகள் மற்றும் காவேரிப்பாக்கம் போலீசார் உதவியோடு வெங்கடேசன் மற்றும் பெருமாளை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில் குணசேகரன் தனக்குச் சொந்தமான இடத்தை வாங்கி அதில் கடை கட்டுவதற்குத் திட்டமிட்டதாகவும், அதற்கு முன்னதாக சூனியத்தை நீக்க டிரம் ஒன்றை நிலத்தில் புதைக்க வேண்டும் என்று கூறியதை போலீசாரிடம் தெரிவித்துள்ளார்,

உடற்கூராய்வு

உடற்கூராய்வு

இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் அளித்த தகவலின்படி டிரம் புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் கண்டுள்ளனர். இதையடுத்து காவல் ஆய்வாளர் ஆபிரகாம் புரூஸ் முன்னிலையில் புதைக்கப்பட்ட குமரேசன் உடலைத் தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்வு செய்யும் பணி நடைபெற்றது. மேலும் தலைமறைவாக உள்ள குணசேகரனை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

English summary
Chennai man kills his own son and killed his own father in kaveripakkam: (தலைநகர் சென்னையில் தந்தையைக் கொலை செய்த மகன்) Chennai latest crime news.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X