"கண்றாவி".. படிக்கட்டிலேயே நித்யாவுக்கு அட்டூழியம்.. பார்க்கிங்கில் அட்ராசிட்டி.. வெளியான வீடியோ
சென்னை: ஒரு வீடியோ நேற்றில் இருந்து வைரலாகி கொண்டிருக்கிறது.. இந்த வீடியோவை பார்த்து சென்னைவாசிகளே மிரண்டு போயுள்ளனர்.
சென்னை அடுத்த மாங்காடு, பத்மாவதி நகர் பகுதியில் ஒரு அப்பார்ட்மென்ட் உள்ளது.. கார் பார்க்கிங் உட்பட சகல வசதிகளையும் கொண்டது இந்த அடுக்குமாடி குடியிருப்பு.
ஸ்டாலின் சுற்றுப்பயணம்: 'அந்த மேட்டர் இல்ல’ 3 மாவட்டங்களுக்கு.. தள்ளிப்போனதை கையில் எடுத்த முதல்வர்!
இங்கு வசித்து வருபவர் நித்யா.. 37 வயதாகிறது.. இதே குடியிருப்பின் மேல்வீட்டில் நித்யா தனியாக வசித்து வருகிறார்.

அப்பார்ட்மென்ட்
இவர் சொந்தமாக கார் வைத்திருக்கிறார்.. அந்த அபார்ட்மென்ட்டிலேயே இவருக்காக ஒதுக்கப்பட்டுள்ள கார் பார்க்கிங் பகுதியில், வேறு ஒருவர் பைக்கை கொண்டு வந்து நிறுத்தியுள்ளதாக தெரிகிறது. இதை பார்த்ததும் நித்யா, சம்பந்தப்பட்டவரிடம் சென்று கேட்டுள்ளார்.. அதற்கு அவர், கீழ்தளத்தில் வசிக்கும் மோகன் என்பவர்தான், அங்கே தன்னுடைய பைக்கை நிறுத்த சொன்னதாக கூறியிருக்கிறார்... உடனே நித்யா, அதே குடியிருப்பில் கீழ்தளத்தில் வசிக்கும் மோகனிடம் சென்று இதுகுறித்து கேட்டிருக்கிறார்..

டென்ஷன்
அப்போது இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டது... ஒருகட்டத்தில், மோகனுக்கு ஆத்திரம் வந்துவிட்டது. பொறுமை இழந்த மோகன், நித்யா மீதிருந்த கோபத்தில், அங்கிருந்த இரும்பு கதவை பிடித்து தள்ளினார்.. அந்த கதவு, மோகனின் அம்மாவின் முகத்திலேயே பட்டு, காயம் ஏற்பட்டுவிட்டது.. அதை பார்த்தமும் இன்னும் டென்ஷன் ஆகிவிட்டார் மோகன்.. உடனே காலில் அணிந்திருந்த செருப்பை கழற்றி நித்யாவின் மீது சரமாரியாக அடித்தார்.. அதுவரை பொறுமையாக இருந்த நித்யா, பதிலுக்கு தன்னுடைய செருப்பை கழட்டி மோகனை அடித்துள்ளார்.

படிக்கட்டு
பிறகு, நித்யாவின் தலைமுடியை பிடித்து தரதரவென இழுத்து வந்தார் மோகன்.. உடனே நித்யா, மோகனை தன்னுடைய காலால் எட்டி எட்டி உதைத்தார்.. இவ்வளவு களேபரமும் ஒரே அப்பார்ட்மென்ட்டில், அந்த படிக்கட்டிலேயே நடந்தது.. யாராலுமே இவர்களை தடுக்க முடியவில்லை.. கடைசியில், குடியிருப்புவாசிகள் மொத்த பேரும், மாங்காடு போலீசுக்கு ஓடினார்கள்.. அங்கு சென்று புகார் தந்ததையடுத்து, போலீசார் விரைந்து வந்தனர்.

கார் பார்க்கிங்
மோகன், நித்யா இரு தரப்பினரையும் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.. விசாரணை நடத்தினர்... இன்னும் அந்த கார் பார்க்கிங் விவகாரம் முடிவுக்கு வரவில்லை என்றாலும், அவர்களை போலீஸார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனிடையே, இவர்களுக்குள் நடந்த "செருப்படி சண்டை" வீடியோ சோஷியல் மீடியா முழுவதும் வைரலாகி கொண்டிருக்கிறது.. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த மோகன், அந்த படிக்கட்டில் ஏறி சென்று நித்யாவின் தலைமுடியை பிடித்து தரதரவென கீழே இழுத்து வந்து தாக்கியதை பார்த்து இணையவாசிகள் அதிர்ந்து போய்விட்டனர்.