தலைவரானார் அன்புமணி.. 2.0 வுக்கு தயாராகும் பாமக.. மாம்பழ மாலை அணிவித்து தொண்டர்கள் உற்சாகம்
சென்னை: பாமக தலைவராக பதவியேற்றுக் கொண்ட அன்புமணி ராமதாஸுக்கு மாம்பழத்தினால் ஆன மாலை அணிவிக்கப்பட்டது.
பாமக சிறப்பு பொதுக் குழு கூட்டம் திருவேற்காட்டில் டாக்டர் ராமதாஸ் முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு ஜிகே மணி தலைமை தாங்கினார். பாமக தலைவராக மணி 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றினார்.
இலங்கையில் அதிக மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு 3 மடங்கு கட்டணத்தை உயர்த்த திட்டம்
இவருக்கு அண்மையில் விழா நடத்தப்பட்டது. இந்த நிலையில் பாமகவுக்கு புதிய தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டும் என முடிவு செய்தனர். இளைஞரணித் தலைவராக உள்ள அன்புமணி ராமதாஸுக்கு தலைவர் பதவியை வழங்க வேண்டும் என கட்சியின் மூத்த நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர்.

அன்புமணி தலைவர்
இதையடுத்து அன்புமணியை தலைவராக தேர்வு செய்வதற்காக சிறப்பு பொதுக் குழு கூட்டம் கூட்டப்பட்டது. பொதுக் குழுவில் அன்புமணி ராமதாஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து தொண்டர்கள் கரகோஷத்தை ஏற்படுத்தினர். அவருக்கு ஆளுயர மாலை அணிவித்து வெள்ளி வாள் பரிசளித்தனர்.

ஆளப் போகிறான் பாட்டாளி
ஆளப்போகிறான் பாட்டாளி, 2026 இல் அன்புமணி தலைமையில் ஆட்சி அமைப்போம் என கோஷமிட்டனர். அன்புமணி ராமதாஸ் தலைவராக பொறுப்பேற்ற போது அவரது தந்தையும் நிறுவனருமான ராமதாஸ் ஆனந்த கண்ணீர் வடித்தார். இந்த நிலையில் அன்புமணிக்கு மாம்பழத்தால் தொடுக்கப்பட்ட மாலையும் அணிவிக்கப்பட்டது.

மாம்பழ மாலை
இந்த மாலையில் பாமகவின் கொடி தைத்தப்பட்டிருந்தது. பாமக கொடியின் நிறத்தினாலான வுல்லன் நூலால் மாம்பழங்கள் கோர்க்கப்பட்டிருந்தன. அதை அன்புமணிக்கு அணிவித்தனர். அன்புமணி தலைமையில் பாமக 2.0 என்ற செயல்திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்படும் என தொண்டர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

2026 இல் பாமக ஆட்சி
வரும் 2026 ஆம் ஆண்டு பாமக ஆட்சியில் அமரும் நிலைக்கு அன்புமணி தலைமையில் கட்சி செயல்படும் என தெரிகிறது. கடந்த காலங்களில் நடந்த பொதுக் கூட்டங்களில் மது விலக்கு குறித்து அன்புமணி வலியுறுத்தி வருகிறார். அது போல் நடிகர்கள் சினிமாக்களில் சிகரெட் பிடிக்கும் காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்ததும் பாமகதான்.