• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

கணவருக்கே டஃப் கொடுத்த மணிமேகலை...வாழ்த்தும் ரசிகர்கள்.. இது வேற லெவல் வளர்ச்சிதான்

Google Oneindia Tamil News

சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான மணிமேகலை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோ ரசிகர்களை கவர்ந்துள்ளது.

  கணவருக்கே டஃப் கொடுத்த மணிமேகலை...வாழ்த்தும் ரசிகர்கள்.. இது வேற லெவல் வளர்ச்சிதான்

  மணிமேகலைக்குள் இப்படி ஒரு திறமையா என்று ரசிகர்கள் வாயடைத்து போய் இருக்கின்றனர்.

  கவிஞராக மாறிய மணிமேகலை.. இந்த மாதிரி தத்துவத்தை எதிர்பார்க்கலையே கவிஞராக மாறிய மணிமேகலை.. இந்த மாதிரி தத்துவத்தை எதிர்பார்க்கலையே

  நான்- ஸ்டாப் பேச்சு

  நான்- ஸ்டாப் பேச்சு

  கதாநாயகிகளுக்கு இணையாக ரசிகர்கள் கூட்டம்..! இருக்கும் அளவிற்கு மியூசிக் சேனல்கள்.. மூலம் விஜே கள்... புகழ் பெற்றிருந்த காலகட்டத்தில்.., தன் நான்-ஸ்டாப் பேச்சால், க்யூட்டான ஆட்டிட்யூட்டாலும்... குறிப்பிடத்தக்க ரசிகர்கள் வட்டத்தை கவர்ந்து வைத்திருந்தவர்..! தான் சன் நெட்வொர்க்கின் விஜே மணிமேகலை..' தான் இசை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய போது அடிக்கடி அந்த நேரத்தில் ஒளிபரப்பப்பட்ட 'மொட்ட சிவா கெட்ட சிவாடா' என்ற படத்தில் வந்த பாடலுக்கு ராகவா லாரன்ஸ் உடன் ஆடிய ஒருவரின் ஆட்டம் மிகவும் பிடித்துவிட்டது. பேஸிகாகவே டான்ஸ் விரும்பியான மணிமேகலை...தானும் மீடியா ஃபீல்டில் இருந்ததால் அந்த நபரை எப்படியாவது பாராட்ட வேண்டு, என்று மிகவும் கஷ்டப்பட்டு மொபைல் நம்பரை தேடிப்பிடித்து.., கால் செய்து பாராட்டியிருக்கிறார். எதிர்முனையில் பேசிய அந்த டான்ஸர் மணிமேகலை சன் மியூசிக்கில் பெரிய செலிபிரிட்டி ஆக இருந்தாலும்.., அந்த நேரத்தில் பிஸியாக சூட்டில் இருந்ததால்.. பெரிய அளவில் ரெஸ்பான்ஸ் செய்யவில்லையாம்...!

  காதலுக்கு வீட்டில் சம்மதிக்கவில்லை

  காதலுக்கு வீட்டில் சம்மதிக்கவில்லை

  கொஞ்சமும் மனம் தளராத மணிமேகலை விடாமல் முயற்சி செய்து... போன் பேசியே.. நேரில் மீட் பண்ணுமளவிற்கு...! காதலை டெவலப் செய்து இருக்கிறார். அந்த டான்ஸர் வேறுயாருமில்லை.. அவர்தான் மணிமேகலை காதல் கணவர் ..ஹுசேன்' வேற்று மதத்தை சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்திற்காக.. மணிமேகலையின் காதலை அவரது வீட்டில் ஏற்றுக் கொள்ளவில்லை.. இதனால் வீட்டைவிட்டு வெளியேறி தன் காதலன் ஹுசேன் குடும்பத்தினருடன் பதிவுத் திருமணம் செய்து கொண்டார். மணிமேகலை. தற்பொழுது வரை தனது பெற்றோர்களுடன் எவ்வித தொடர்பும் இன்றி..தன் காதல் கணவருடன் மகிழ்ச்சிகரமாக வாழ்ந்து வருகிறார் மணிமேகலை..

  வேற லெவல் டான்ஸ்

  வேற லெவல் டான்ஸ்

  குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிஸியாக இருக்கும் மணிமேகலை தற்போது தன்னுடைய கணவரோடு பெங்களூர் சென்றுள்ளார். சென்ற இடமெல்லாம் அங்கே போட்டோக்களும் வீடியோக்களையும் எடுத்து வெளியிடும் மணிமேகலை தற்போது தன்னுடைய திறமையை உலகிற்கு வெளிகாட்ட முடிவு செய்திருக்கிறார். தன்னுடைய கணவர் டான்ஸ் மாஸ்டராக இருந்தாலும், அவருக்கே டஃப் கொடுக்க தன்னால் முடியும் என்று இவர் தற்போது நிரூபித்திருக்கிறார். இதற்கு முன்பு மணிமேகலை ஆடிய டான்ஸ்க்கும் தற்போது பீட்ஸ் படத்தில் விஜய் பாடலுக்கு செம ஆட்டம் போட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

  ரசிகர்களின் கருத்து

  ரசிகர்களின் கருத்து

  மணிமேகலையின் க்யூட்டான டான்ஸை பார்த்ததும் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அவருடைய சக நண்பரான சிவாங்கி கூட அவரை சமூகவலைத்தளத்தில் கலாய்த்திருக்கிறார். ப்....பா என்று கூறியிருக்கிறார். அதனைப் பார்த்ததும் குழப்பமடைந்த மணிமேகலை எதை பார்த்து இப்படி சொல்கிறாய்?? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். டான்ஸ் சொல்றியா?? இல்ல மேக்கப்பை சொல்றீயான்னு தெரியலையே என்று குழப்பத்தோடு கேள்வியை கேட்டிருக்கிறார். அதற்கு சிவாங்கி டான்ஸ் தானென்று பதில் அனுப்பி இருக்கிறார். தற்போது மணிமேகலையின் க்யூட்டான டான்ஸ் பார்த்து ரசிகர்கள் பலர் டான்ஸ் மாஸ்டரான கணவருக்கு டஃப் கொடுக்குறாங்க எங்க அக்கா என்றெல்லாம் இவருக்கு கரகோஷம் எழுப்பி உற்சாகமூட்டி வருகின்றனர்.

  English summary
  The Cook With Comali show has caught the attention of fans with a Manimegalai video posted on Instagram.Fans are left speechless as to whether such a talent is within hours.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X